News October 20, 2024

அரசு மருத்துவமனைகள் மோசம்: இவரே சொல்லிட்டாரே

image

அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாஹு கூறியுள்ள விஷயங்கள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக இருக்கின்றன. நோயாளிகளுக்கான சேர்கள், வீல் சேர்கள் உடைந்துள்ளன. பல மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அனைத்து அரசு மருத்துவமனை டீன்களுக்கும் சுப்ரியா சாஹு கடிதம் எழுதியுள்ளார்.

News October 20, 2024

நாங்க இனி 2 இல்லை, ஒண்ணு..

image

இந்தியாவில் தற்போது ஓடிடி சேவையை டிஸ்னி ஹாட் ஸ்டாரும், ஜியோ சினிமாவும் தனித்தனியே வழங்கி வருகின்றன. ஆனால் விரைவில் அவை இரண்டும் ஒன்றாக இணையவுள்ளன. அண்மையில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாக இணைந்ததும் இந்தியாவில் 2 நிறுவனங்களும் ஒரே பெயரிலேயே செயல்படும். அந்தப் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

News October 20, 2024

JOBS: ஏர் இந்தியாவில் 1,652 வேலைகள்

image

ஏர் இந்தியாவின் ஏர்போர்ட் சேவைகள் நிறுவனத்தில் 1,652 காலி இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மும்பையில் 1,067, அகமதாபாத்தில் 156, தபோலிமில் 429 காலி இடங்கள் இருப்பதாகவும், இவை அனைத்தும் காண்டிராக்ட் அடிப்படையிலானவை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வேலையில் சேர விரும்புவோர் ஏர் இந்தியா ஏர்போர்ட் சேவைகள் நிறுவன AISL இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News October 20, 2024

₹6,100 கோடி திட்டங்கள்: மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

image

உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று ₹6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு மோடி இன்று செல்கிறார். பின்னர் அங்கு அவர், பல்வேறு விமான நிலையங்கள் தொடர்பான பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். புதிய கண் மருத்துவமனை, சார்நாத் சுற்றுலா மேம்பாட்டு மையத்தையும் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

News October 20, 2024

அமரன் படத்திற்கு SK வாங்கிய சம்பளம் தெரியுமா?

image

அமரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் ₹50 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கமல் தயாரித்துள்ள இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். பட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து ரிலீசுக்கான வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ₹35 கோடி முதல் ₹50 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

News October 20, 2024

ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் என்றால் என்ன?

image

ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்து அனைவருக்கும் தெரியுமா என்றால்? சந்தேகமே. அந்நோயால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களின் மார்பகங்களில் அபரீமிதமான அளவுக்கு கட்டுப்பாடின்றி, திசுக்கள் வளர்வதே மார்பக புற்றுநோய் ஆகும். வீக்கமாக இருப்பது, மார்பகத்தை சுற்றிய தோள்பகுதி, காம்பு சிவப்பாக இருப்பது அதன் அறிகுறி ஆகும்.

News October 20, 2024

ADHANI ONE. ரயில், விமானம், பேருந்து புக்கிங்கிற்கு ஒரே APP

image

அதானி நிறுவனம் ADHANI ONE என்ற புதிய சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் ரயில், விமானம், பேருந்துகள் டிக்கெட்டுகளை ப்ரீமியம் கட்டணம் இன்றி குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதேபோல் உணவு ஆர்டர் போன்றவற்றையும் சலுகை விலையில் புக் செய்து வாங்க முடியும். கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கி பயன்படுத்தலாம்.

News October 20, 2024

ப்ரஷ் கொண்டு எப்படி பல் துலக்குவது தெரியுமா?

image

ப்ரஷ் கொண்டு எப்படி சரியாக பல் துலக்குவது என்பது சிலருக்கு இன்னமும் தெரியாது. அவர்களுக்கு பல் மருத்துவர்கள் சில யோசனைகளை முன்வைத்துள்ளனர். அவை என்னென்ன? குறைந்தது 2 நிமிடம் பல் துலக்க வேண்டும். அந்த 2 நிமிடத்தை அனைத்து பக்கமும் பல் துலக்க சமமாக பிரித்து பயன்படுத்த வேண்டும். பற்களும் ஈறும் இணையும் பகுதியில் கிருமி மறைந்திருக்கலாம். அதனால் அங்கு நன்கு துலக்க வேண்டும். SHARE IT.

News October 20, 2024

கவாஸ்கர், சச்சின், கோலி வரிசையில் சர்பராஸ் கான்

image

நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட் முதலாவது இன்னிங்ஷில் டக் அவுட் ஆன சர்பராஸ் கான், 2ஆவது இன்னிங்ஷில் 150 ரன்கள் அடித்தார். இதன்மூலம் முதல் இன்னிங்ஷில் டக் அவுட் ஆகி 2ஆவது இன்னிங்ஷில் சதமடித்த 9ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்தார். இதற்கு முன்பு, மாதவ் ஆப்தே (163), கவாஸ்கர் (118), வெங்சர்க்கார் (103), அசாருதீன் (109), சச்சின் (136), தவான் (114), கோலி(104), கில் (119) அச்சாதனையை புரிந்துள்ளனர்.

News October 20, 2024

ஹிஸ்புல்லா மிகப்பெரும் தவறிழைத்து விட்டது: இஸ்ரேல்

image

தனது வீடு மீது ட்ராேன் தாக்குதல் நடத்தி, ஹிஸ்புல்லா அமைப்பு மிகப்பெரிய தவறு இழைத்து விட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில், பாதுகாப்பான எதிர்காலத்துக்காக எதிரிகள் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தொடர்வதை இதனால் நிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலியர்களை துன்புறுத்த யார் நினைத்தாலும் கடும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!