News October 21, 2024

நாளை முக்கிய அமைச்சரின் ஊழல் வெளியாகிறது

image

முக்கிய அமைச்சர் ஒருவரின் ஊழல் பட்டியலை நாளை வெளியிடப்போவதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. அந்த அமைச்சர் யார், அவர் செய்த மோசடி என்ன?, எத்தனை கோடி மோசடி என்ற முழு ஆதாரங்கள் வெளியிடப்படும். புகாருடன் நாங்கள் தயார்; விசாரித்து நடவடிக்கை எடுக்க DVAC தயாரா? என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறப்போர் சவால் விடுத்துள்ளது. நாளை முழுவதும் இந்த டாப்பிக் தான் செம ஹைலைட்ஸ் ஆக இருக்கும்போல.

News October 21, 2024

எந்த ராசிக்கு எந்தக் கல்?

image

ஒருவர் தனது ஜென்ம ராசிக்குரிய ரத்தினக் கல்லை ஜாதக ரீதியாக ஆராய்ந்து அணிந்து கொண்டால் நன்மைகள் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகிறது. அதன் விவரம் இதோ: ➤மேஷம் – பவளம் ➤ரிஷபம் – பச்சை ஜிர்கான் ➤மிதுனம் – மரகதம் ➤கடகம் – நீல முத்து ➤சிம்மம் – மாணிக்கம் ➤கன்னி – மரகதம் ➤துலாம் – பச்சை மணிக்கல் ➤விருச்சிகம் – செவ்வந்திக்கல் ➤தனுசு – புஷ்பராகம் ➤மகரம் – ஆம்பர் கல் ➤கும்பம் – கோமேதகம் ➤மீனம் – கனக புஷ்பராகம்.

News October 21, 2024

பாஜக முக்கிய தலைவர் சி.பி.யோகஸ்வர் ராஜினாமா

image

கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினர் சி.பி.யோகஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சன்னபட்னா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அவர், நாளை அல்லது நாளை மறுநாள் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைய உள்ளதாகவும், சன்னபட்னா தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News October 21, 2024

போதும், நிறுத்திக்கலாம்! ஒப்புக்கொண்ட இந்தியா – சீனா!

image

இந்தியா – சீனா எல்லையான கிழக்கு லடாக்கின் ‘கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி(LAC)’யில் மோதலை கைவிடுவது என்றும், கூட்டாக ரோந்து பணிகளை மேற்கொள்வது எனவும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க PM மோடி ரஷ்யா செல்வதற்கு முன்பாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆனால், எல்லையில் சீனா மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

News October 21, 2024

அட்டகத்தியை Out செய்த கெத்து

image

நடிகர் தினேஷின் திரைப் பயணத்தில் ’அட்டகத்தி’ படத்திற்கு என்று தனியிடம் உண்டு. அதன் காரணமாகவே அவரை அனைவரும் அட்டகத்தி தினேஷ் என அழைத்தனர். அதைப்போல் சமீபத்தில் வெளியாக ’லப்பர் பந்து’ படம் அவரின் கரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதிலும் குறிப்பாக கெத்து என்ற பெயர் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிலையில் அவர் நடிக்கும் ‘தண்டகாரண்யம்’ படத்தில் கெத்து தினேஷ் நடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 21, 2024

தமிழக சிறார்களில் 50% பேருக்கு ரத்தசோகை

image

தமிழகத்தில் உள்ள சிறார்களில் (10-19 வயது) 50% பேர், ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாநில பொது சுகாதார ஆய்வின் அடிப்படையில், பெண் குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், திருச்சி 84%, திண்டுக்கல், கள்ளக்குறிச்சியில் தலா 70%, கடலூரில் 61% சிறார்களுக்கு ரத்த சோகை நோய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

News October 21, 2024

தமிழ்நாடு – டெல்லி போட்டி டிரா

image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், தமிழ்நாடு – டெல்லி இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 674 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய டெல்லி அணி 266 ரன்களில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது. தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய டெல்லி அணி, 5ஆம் நாள் முடிவில் 193/8 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

News October 21, 2024

நாளை மறுநாள் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

image

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை மறுநாள் (அக்.23) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பாக அவர் ராகுல் காந்தியை சந்தித்து கல்பெட்டாவில் சாலை பேரணி நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கலின் போது சோனியா காந்தி, கார்கே மற்றும் காங்., கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

News October 21, 2024

இதற்கு இனி ஆதார் கட்டாயம்

image

ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. தொல்குடி, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், CM Arise ஆகிய திட்டங்களில் பயன்பெற ஆதார் கட்டாயம். நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் அதிகபட்சமாக ₹5 லட்சம் வரையும், CM Arise திட்டத்தில் தொழில் தொடங்க 35% வட்டி மானியத்துடன் ₹10 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது.

News October 21, 2024

புதிய லுக்கில் கலக்கும் STR

image

சிம்புவின் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் இப்படத்தை இயக்க உள்ளார். ’கோட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. அவரின் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த “கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்” பாடலில், கையில் கைக்குட்டை கட்டி ஒரு Symbol வைப்பார் சிம்பு. புது லுக் எப்படி இருக்கு?

error: Content is protected !!