India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வட கடலோர மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஊழியர்களிடையே அதிகரித்து வரும் பணி அழுத்தத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகளவில் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றும் ஊழியர்களில் இந்தியர்கள் (சராசரியாக 46.7 மணிநேரம்) 2ஆம் இடத்தில் உள்ளனர். அதிக வேலைப்பளு, மன அழுத்தம், பணியிடப் பிரச்னை காரணமாக ஏற்படும் ஊழியர்களின் இறப்பு எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ராஜஸ்தானில் இன்று கோர விபத்து நிகழ்ந்தது. ஜெய்ப்பூரில் இருந்து 50 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று டோல்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. டோல்பூர் அருகே அதிகாலை வந்த போது, எதிரே வந்த டெம்போ வேனுடன் பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டெம்போவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்தவர்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 65% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று காலை வரை இயல்பாக 65 மி.மீ. மழை பெய்ய வேண்டிய இடத்தில் 156.7 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இயல்பை விட 177% கூடுதலாக மழை பெய்துள்ளது. வழக்கமாக பெய்யும் 122.4 மி.மீ மழைக்கு பதிலாக 338.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு அக்.25 முதல் நவ.5 வரை 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மட்டும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களிலும், ரயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் ஆம்னி பஸ்களையும், விமானங்களையும் மட்டுமே மக்கள் நம்பி இருந்தனர். இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சரித்திர பின்னணியில், 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படம் தமிழ், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
IND அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என NZ அணி முன்னிலை பெற்றது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் NZ அணி தனது 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 5ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது அதில் யாங் (48*), ரச்சின் ரவீந்திரா (39*) இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இதனால் NZ அணி 27.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து அபார வென்றது.
வங்கக்கடலில் அக்டோபர் 23ஆம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் இதுவாகும். மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஷா, மேற்குவங்கத்தை நோக்கி செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பிரபல பான் இந்தியா நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் (80) இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை மரணம் அடைந்தார். கன்னட நடிகரான கிச்சா சுதீப், நான் ஈ, பாகுபலி போன்ற திரைப்படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஆவார். பல பேட்டிகளில் தனது தாயின் பெருமைகளை அவர் பேசியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.