News October 21, 2024

இந்தியா கூட்டணியில் விரிசல் தொடங்குகிறதா?

image

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சியான RJD அறிவித்துள்ளது. தாங்கள் 18-20 தொகுதிகளில் வலுவாக உள்ள நிலையில், 12 சீட்களுக்கு குறைவாக ஒதுக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும், BJP-ஐ தோற்கடிக்க 60 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்போம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் இருப்பை தக்க வைப்பது, கூட்டணி தர்மம் என இந்தியா கூட்டணிக்கு ஒரே நெருக்கடி தான்.

News October 21, 2024

உங்கள் பெயரில் போலி சிம்மா? இதை செய்யுங்கள்!

image

உங்களுக்கு தெரியாமல், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகம் இருக்குமானால், <>TAFCOP<<>> என்ற இந்த தளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் செல்ஃபோன் நம்பரை உள்ளிட்டு தேடினால், உங்கள் பெயரில் உள்ள அத்தனை சிம் கார்டு விபரங்களும் தெரியவரும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாத எண் தென்பட்டால், ‘Not My Number’ என்ற பொத்தானை தட்டி, புகாரளித்து அந்த எண்ணை தடைசெய்யலாம்.

News October 21, 2024

தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதில், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக். 28 முதல் 30 வரை வழக்கமான பேருந்துகளுடன் சேர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 3 நாள்களில் சுமார் 5.83 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 21, 2024

ஊழலை ஒழிக்க PM மோடி சொல்லும் யோசனை

image

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என PM மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதால் ஊழலும், குடும்ப அரசியலும் ஒழியும் என்றும் கூறியுள்ளார். பணமில்லை என்றால் பஞ்சாயத்து தேர்தலில் கூட போட்டியிட முடியாது என்றிருக்கும் இன்றைய நிலையில், பின்னணி இல்லாத இளைஞர்கள், ஊழலை ஒழிக்கும் லட்சியத்துடன் அரசியலில் சாதிக்க முடியுமா? இதுபற்றி உங்கள் கருத்து?

News October 21, 2024

Recipe: மலபார் மட்டன் குருமா செய்வது எப்படி?

image

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், தக்காளி போட்டு தாளித்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். தனியே வேக வைத்த ஆட்டுக்கறித் துண்டுகள், மஞ்சள், உப்பு, பூண்டு, இஞ்சி, கரம் மசாலா, கசகசா போடவும். அதில் தேங்காய், சீரகம், ப.மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்து ஊற்றவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான மலபார் மட்டன் குருமா ரெடி.

News October 21, 2024

பகல் வேஷம் போட்றவங்களால ஏத்துக்க முடியல

image

தமிழக அரசின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியில் 2,226 கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளதாகக் கூறினார். மேலும், பக்தி பகல் வேஷம் போடுபவர்களால் அரசின் சாதனைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்தார்.

News October 21, 2024

AIR India பயணிகளுக்கு காலிஸ்தான் எச்சரிக்கை!

image

பயணிகள் யாரும் ஏர் இந்தியாவில் நவ.1-19ம் தேதி வரை பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னு தெரிவித்துள்ளார். சீக்கிய இனப்படுகொலையின் 40 வது ஆண்டு நினைவு விழா குறிப்பிட்ட தேதிகளில் அனுசரிக்கப்பட உள்ளதால், ஏர் இந்தியா விமானத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கடந்தாண்டும் அவர் இதேபோல் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

News October 21, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤இந்தோனேசியாவின் 8ஆவது அதிபராக சுபியாண்டோ (73) பதவியேற்றார். ➤வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 87 பேர் உயிரிழந்தனர். ➤மில்டன் சூறாவளி காரணமாக கியூபாவின் குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. ➤ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ரஷ்யா கோரிக்கை. ➤சீன ராணுவத்தின் சக்திவாய்ந்த ராக்கெட் படையை அந்நாட்டு அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார்.

News October 21, 2024

ஆண்கள் 6 முறை; பெண்கள் எத்தனை முறை தெரியுமா?

image

ஒரு ஆண் சராசரியாக ஒரு நாளைக்கு 12,500 வார்த்தைகளும், பெண் 22,000 வார்த்தைகளும் பேசுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பெண் சராசரியாக ஒரு நாளைக்கு 4 பொய்கள், 60 வயதிற்குள் 87,600 பொய்கள் சொல்கிறார். பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 30-64 முறை அழுகிறார்கள்; ஆண்கள் 6- 17 முறை அழுகிறார்கள். பெண்களுக்கு கேட்கும்திறன் அதிகம்; ஆண்களுக்கு பார்க்கும் திறன் அதிகம். வேறு என்னென்ன வித்தியாசம் இருக்கு. சொல்லுங்க!

News October 21, 2024

பெட்ரோலுக்கு இணையாக விலை உயரும் CNG?

image

வாகனங்களுக்கான CNG எரிவாயு விலை கிலோவுக்கு ₹4 – ₹6 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உற்பத்தி சரிவு, பற்றாக்குறை காரணமாக விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் 1 கிலோ CNG ₹90க்கு விற்பனையாகிறது. விலை உயர்ந்தால் 1 கிலோ ₹96 வரை உயரும் எனத் தெரிகிறது. இதனால், அதிகளவில் CNG வாகனங்களை பயன்படுத்தி வரும் கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையடைந்துள்ளனர்.

error: Content is protected !!