India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துறைமுகம் வழியாக புயல் கரையை கடக்கும் என்பதை குறிக்க 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. 8ஆம் எண் கூண்டு – அதி தீவிர புயல் துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையை கடக்கும், 9 – அதி தீவிர புயல் துறைமுகத்தின் வலதுபக்கமாக கரையை கடக்கும், 10 – புயலால் பெரிய அபாயம் ஏற்படும், 11 – புயல் எச்சரிக்கையின் உச்சகட்டம். வானிலை மையத்துடன் தொலைத்தொடர்பு முறிந்தது என்று அர்த்தமாகும்.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்தது மருத்துவ சட்ட விதிகளுக்கு எதிரானது என்றார். மேலும், அறுவை சிகிச்சை அரங்கில் அனுமதித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
T20WC ஃபைனலில் விளையாடும் வாய்ப்பு கடைசி நிமிடத்தில் பறிபோனதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். ஃபைனலில் ஆடுவதற்கு தயாராக இருங்கள் என்றே தன்னிடம் கூறப்பட்டதாகவும், ஆனால் டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக ரோஹித் வருத்தத்துடன் நீங்கள் இல்லை என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரோஹித் கேப்டன்சியில் விளையாட முடியவில்லை என்ற வருத்தம் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
‘அமரன்’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுடன் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பவர்கள் கமெண்ட் பண்ணுங்க.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள சூழலில் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படவுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும், 3வது டெஸ்ட் போட்டிக்குள் சரியாகிவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் வரும் 24ஆம் தேதி தொடங்க உள்ளது.
போதைப்பொருள்கள் கடத்தலின் கேந்திரமாக தமிழகம் விளங்குவதாக இபிஎஸ் வருத்தம் தெரிவித்தார். பலவகைப்பட்ட போதைப்பொருள்கள் தமிழகம் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக செய்திகள் வருவதாக குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதை DGPயே ஒப்புக்கொண்டதாகவும் சாடினார். போலீசுக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.
‘ஆவின் டிலைட்’ பால் உற்பத்தி நிறுத்தப்படவில்லை என தமிழக அரசின் சமூக ஊடக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. 90 நாள்கள் வரை கெட்டுப்போகாத ‘ஆவின் டிலைட்’ பால் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆவின் நிர்வாகம், UHT பாலை ‘டிலைட்’ என்பதற்கு பதிலாக, ‘Nice UHT Treated Toned Milk’ என்ற பெயரில் விற்பனை செய்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது.
தவெக நிர்வாகி சரவணன் மறைவுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது x பதிவில், என் மீதும், கட்சியின் மீதும் தீராப் பற்றுக்கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் திடீர் உடல்நலக்குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிப்பதாகக் கூறி, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன பங்குகள் இன்று பங்குச்சந்தையில் பட்டியலானது. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-ஆக வெளியான இந்நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். ₹27,870 கோடிக்கு நிதி திரட்ட ஐபிஓ வெளியான நிலையில், அதற்கு 2.7 மடங்காக விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால், Listing Gain எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் பங்குகள் 5% விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.
Sorry, no posts matched your criteria.