News October 22, 2024

விஜய் ஆற்றப்போகும் உரையை வடிவமைப்பது இவரா?

image

தவெக முதல் மாநாட்டில் விஜய் ஆற்றப்போகும் உரையை இயக்குநர் H.வினோத் வடிவமைத்துத் தரவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இருவருக்கும் ‘Thalapathy 69’ படப்பிடிப்பின்போது, நெருங்கிய நட்புறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்கத்தின் காரணமாக அரசியல் களத்தின் பழைய முக்கிய நிகழ்வுகள் குறித்து வினோத்திடம் அவர் மிக ஆர்வமாக விவாதித்ததோடு, தனியாக கலந்துரையாடியுள்ளார்.

News October 22, 2024

வெளிநாட்டு தமிழறிஞர்களும் அவர்களின் நூல்களும்

image

➤தியோடோசியஸ் வால்டர் – திருச்சபை வரலாறு (1725) ➤தொம்மாசோ ரோஸ்ஸி – புனிதர் வரலாறு (1736) ➤ஃபேப்ரிசியஸ் – நாணயங்கள் பெருந்தொகுப்பு (1740) ➤ராட்லர் – இந்திய தாவரங்கள் ஆய்வு (1776) ➤காலின் மெக்கென்ஸி – கல்வெட்டுகள் பெருந்தொகுப்பு (1783) ➤எல்லிஸ் – திருக்குறள் ஆங்கிலம் நூல் (1796) ➤ஜான் டுபோயிஸ் – தமிழரின் பழக்க வழக்கங்கள் (1792) ➤மிரோன் வின்சுலோ – 68,000 சொற்கள் அடங்கிய தமிழ்-ஆங்கில அகராதி (1862)

News October 22, 2024

IND vs NZ: ரிஷப் பண்ட் விளையாடுவாரா?

image

NZ-க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தேவையான ஃபிட்னஸுடன் பண்ட் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது, விபத்தில் அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் அடிபட்டதால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். இருப்பினும் 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் களமிறங்கினார்.

News October 22, 2024

அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு

image

கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியாகி உள்ளது. மேலும் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மிச்செலின் துபாய் 24H 2025, ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப், போர்ஸ் 992 GT3 கோப்பை பிரிவுகளில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்க உள்ளது.

News October 22, 2024

2026 காமன்வெல்த் போட்டி: ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்

image

2026 பிரிட்டனில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்மிண்டன், கிரிக்கெட், துப்பாக்கிச்சுடுதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளும் இடம்பெறவில்லை. இந்திய வீரர்களுக்கு பதக்க வாய்ப்புள்ள விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

News October 22, 2024

SK உடன் மோதும் கவின்

image

தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ ஆகிய படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பில் உள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’. கவின் தனது ரொமாண்டிக் இமேஜுக்கு பங்கம் வந்தாலும் பரவாயில்லை என்று பிச்சைக்காரன் தோற்றத்தில், ஜோடிகூட இல்லாமல் நடித்துள்ளார். இந்தப் படம் தனக்கு நல்ல நடிகன் என்ற பெயரை வாங்கித்தரும் என கவின் உறுதியாக நம்புவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News October 22, 2024

புயல் கூண்டின் வகைகளும், அதன் அர்த்தமும்..! (1/2)

image

புயல் தீவிரத்தின் அடிப்படையில் துறைமுகங்களில் 11 வகையான புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகிறது. <<14421970>>1ஆம் எண் கூண்டு<<>> – புயல் உருவாகக்கூடிய வானிலை, 2ஆம் எண் கூண்டு – புயல் உருவானது, 3ஆம் எண் கூண்டு – காற்றோடு மழை பொழியும், 4 – துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம், 5 – துறைமுகத்தின் இடதுபக்கமாகப் புயல் கரையை கடக்கும், 6 – துறைமுகத்திற்கு வலது பக்கமாகப் புயல் கரையை கடக்கும் என்று அர்த்தம்.

News October 22, 2024

புயல் கூண்டின் வகைகளும், அதன் அர்த்தமும்..! (2/2)

image

துறைமுகம் வழியாக புயல் கரையை கடக்கும் என்பதை குறிக்க 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. 8ஆம் எண் கூண்டு – அதி தீவிர புயல் துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையை கடக்கும், 9 – அதி தீவிர புயல் துறைமுகத்தின் வலதுபக்கமாக கரையை கடக்கும், 10 – புயலால் பெரிய அபாயம் ஏற்படும், 11 – புயல் எச்சரிக்கையின் உச்சகட்டம். வானிலை மையத்துடன் தொலைத்தொடர்பு முறிந்தது என்று அர்த்தமாகும்.

News October 22, 2024

இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்!

image

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்தது மருத்துவ சட்ட விதிகளுக்கு எதிரானது என்றார். மேலும், அறுவை சிகிச்சை அரங்கில் அனுமதித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News October 22, 2024

சாம்சனுக்கு கடைசி நிமிடத்தில் பறிபோன வாய்ப்பு

image

T20WC ஃபைனலில் விளையாடும் வாய்ப்பு கடைசி நிமிடத்தில் பறிபோனதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். ஃபைனலில் ஆடுவதற்கு தயாராக இருங்கள் என்றே தன்னிடம் கூறப்பட்டதாகவும், ஆனால் டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக ரோஹித் வருத்தத்துடன் நீங்கள் இல்லை என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரோஹித் கேப்டன்சியில் விளையாட முடியவில்லை என்ற வருத்தம் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!