India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மத அடிப்படைவாதம், பெண்கள் உரிமை தொடர்பாக எழுதியதால் பல இஸ்லாமிய அமைப்புகள், பத்வா பிறப்பித்தன. இதையடுத்து வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் குடியேறிய அவர், 2022 ஜூலைக்கு பிறகு தனக்கு அனுமதி தரப்படவில்லை எனக் கூறி, அமித் ஷாவுக்கு நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.
திமுக கூட்டணியில் எவ்விதமாக புகைச்சலும் இல்லை என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். முதலில் எரிந்துகொண்டு வரும் அதிமுகவை அணைக்கும் வழியை இபிஎஸ் பார்க்க வேண்டும் என்றும், திமுக கூட்டணியை பற்றி அதிமுக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அவதூறுகளை பரப்பி திமுக கூட்டணியை உடைக்கலாம் என்ற எண்ணம் எப்போதும் பலிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஐசிசியின் கிரிக்கெட் குழு ஆலோசனை கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
WTC-இல் குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்தவும், ஒருநாள் போட்டியின் போது முதல் 25 ஓவர்களுக்குள் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படும், அதன் பிறகு ஒரேயொரு பந்து மட்டுமே பயன்படுத்தப்படும். Pink Ball டெஸ்ட் போட்டியை அதிகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 23 தொழிலதிபர்கள் ₹500 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளதாக தெரிவித்திருப்பதாக TOI தெரிவித்துள்ளது. ₹100-500 கோடியில் 262 பேர் உள்ளனர், அவர்களில் 19 பேர் பணியாளர்கள். மேலும் AY2013-14இல், ஒருவர் மட்டுமே வருமானம் ₹500Cr+ என்று கூறி ITR தாக்கல் செய்துள்ளார். AY2022-23 உடன் ஒப்பிடுகையில், ₹25 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் எண்ணிக்கை 1812ல் இருந்து 1798 ஆக குறைந்துள்ளது
வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எம்பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்., எம்பி கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பாஜக எம்பி அபிஜித் காங்கோபாத்யாய் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால், கோபமடைந்த கல்யாண் அருகிலிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததால், அவரின் கையை கண்ணாடி டம்ளரின் துண்டு கிழித்துள்ளது. அவரது கையில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான Paytm செப்டம்பரில் முடிவடைந்த காலாண்டில் ₹920 கோடி லாபம் ஈட்டியுள்ளது. Zomato நிறுவனத்தின் திரைப்படம் & கலை நிகழ்ச்சிகள் டிக்கெட்களை விற்பனை செய்து கொடுத்ததன் மூலம் இந்நிறுவனத்திற்கு ₹1,345 கோடி லாபம் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே செப்.காலாண்டில் ₹290 கோடி நஷ்டத்தில் இருந்த Paytm-இன் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவியுள்ளது.
ஏர்போர்ட்டில் டிராப் செய்ய வருபவர்கள், bye சொல்லிட்டு உடனே கிளம்புவதில்லை. இதனால் டிராபிக் ஜாம் அதிகரித்து, மற்ற passengers-க்கும் தாமதம் ஏற்படும். இதை தவிர்க்க நியூசிலாந்தின் டனிடன் ஏர்போர்ட், ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழியனுப்ப வருபவர்கள் 3 mins-க்கு மேல் கட்டிப்பிடித்து நிற்கக் கூடாது என்றும், அப்படி பாசத்தை காட்டணும்னா, அதை பார்க்கிங்கில் செய்யலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் பலருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. இதற்காக அழகு சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர். எண்ணெய் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று காரணமாக முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் ஏற்படும் அவற்றை விரட்ட வேப்பிலை கொழுந்து, மஞ்சள் ஆகியவற்றை அரைத்து தினமும் முகத்தில் பேக் போட்டு, 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகளும் நீங்கி விடும்.
விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள தவெகவின் முதல் மாநாடு வெற்றி பெற எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய், பொதுசேவை செய்ய வேண்டுமென கட்சி தொடங்கியுள்ளதாகவும், அவரின் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமில்லாமல், அதிமுக போராட்டங்களுக்கும் திமுக அரசு அனுமதி மறுத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நடிகர் விக்ரம் சினிமாவில் 34 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இன்று அடைந்துள்ள உயரத்தை அடைய அவர் பல தடைகளை சந்திக்க வேண்டியிருந்தது. 1990-ல் ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்பு நிராகரிப்பு, தோல்வி படங்கள், விபத்து ஆகியவை அவரை உடைத்து போட்டது. பொருளாதார தேவைகளுக்காக மற்ற நடிகர்களுக்கு டப்பிங் பேசினார். அவருடைய கடின உழைப்புக்கு ‘சேது’ படம் பலன் தந்தது.
Sorry, no posts matched your criteria.