News October 22, 2024

விஜய்யை பார்த்து சீமானுக்கு பயம்

image

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை பார்த்து சீமான் பயப்படுகிறார் என்று நாதக முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் பிறர் வளர்ச்சியடைய சீமான் அனுமதிப்பதில்லை என சாடிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் நாதக பெரிய வீழ்ச்சியை சந்திக்கும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கும் வேலைகளை சீமான் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

News October 22, 2024

NTET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

மருத்துவப் பேராசிரியர் (NTET) தேசிய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.22) கடைசி நாளாகும். சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவப் படிப்புகளில் முதுநிலை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அக்.25 கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <>https://ntet.ntaonline.in/<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு : 011 4075 9000

News October 22, 2024

SEBI தலைவருக்கு ரூட் கிளியர்..?

image

SEBI தலைவர் மாதபி புரி மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பதவிக்காலம் முடியும் வரை (2025 பிப்ரவரி) அவர் பொறுப்பில் தொடருவார் என்றும் கூறப்படுகிறது. அதானி நிறுவனங்களில் பங்கு, ICICI வங்கியிடம் ஊதியம் பெற்றது, ZEE குழும தலைவரிடம் லஞ்சம் கேட்டது என அவர் மீது அடுக்கடுக்காக புகார் அளிக்கப்பட்டது.

News October 22, 2024

நித்தியானந்தா நேரில் ஆஜராக வேண்டும்; ஐகோர்ட்

image

நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுவதாக ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. நித்திக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. ஆனால், நீதிமன்றத்திற்கு அவர் வருவதில்லை. சம்பந்தப்பட்ட வழக்குகளில் முதலில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லுங்கள் என்று அறிவுறுத்திய நீதிபதி, நித்தியானந்தா சொத்துகளை இந்திய நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

News October 22, 2024

அதிமுக சீனியர்களுக்கு இபிஎஸ் எச்சரிக்கையா?

image

தளவாய் சுந்தரத்தை அதிமுகவில் இருந்து நீக்கி, கட்சியில் தனக்கு எதிராக அணி திரண்டுவரும் சீனியர்களுக்கு இபிஎஸ் வார்னிங் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமாரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், போட்டி பொதுக் குழு, சிலருக்கு கல்தா என்ற செய்தி அனைத்துமே வதந்திதான். அதில் எள்ளளவிற்கும் உண்மையில்லை என்று தெரிவித்தார்.

News October 22, 2024

இந்திய ரசிகர்களுக்காக ஒலிம்பிக்ஸில் மாற்றம்

image

LA 2028 ஒலிம்பிக்ஸில், கிரிக்கெட் போட்டிகள் நியூயார்க்கில் நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் (12.30 மணி நேரம் நேர வித்தியாசம்) நடத்தினால், அதிக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட இந்தியாவில் அதிகாலையில் போட்டிகள் ஒளிபரப்பாகும். ஆனால் நியூயார்க்கில் (9.30 மணி நேரம் வித்தியாசம்) நடத்தினால், மாலையில் பிரைம் டைம்மில் ஒளிபரப்பாகும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News October 22, 2024

பாலியல் வழக்கில் நடிகர் முகேஷ் மீண்டும் கைது

image

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011இல் முகேஷ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக முகேஷிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் வேறொரு பாலியல் வழக்கில் கைதான அவர், ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

News October 22, 2024

Wild Life: விலங்குகளின் கேட்கும் திறன்

image

இயற்கை பேரிடர்களை விலங்குகள் முன்பே கணிப்பதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர். மனிதனின் கேட்கும் திறனுக்கும் அப்பால் உள்ள இந்த அலைநீளங்களில் வெளிப்படும் Infra Sound-ஐ கேட்கும் திறன் விலங்குகளுக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இயல்புக்கு மாறாக எழும் அகஒலியை உணர்ந்து, வனத்தில் காண்டாமிருகம், சமவெளிகளில் நாய், கடலுக்குள் திமிங்கலங்கள் தமக்குள் செய்தி பரிமாறி பாதுகாப்பு தேடி ஓடுகின்றன.

News October 22, 2024

நாளை புயல், நாளை மறுநாள் தீவிர புயல்

image

வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல், நாளை மறுநாள் தீவிர புயலாக வலுப்பெறும் என IMD தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஒடிஷாவுக்கு தென்கிழக்கே 700 கி.மீ., சாகர் தீவுகளுக்கு தெற்கு- தென்கிழக்கே 750 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. தீவிர புயல் ஒடிஷா, மேற்கு வங்காளம் இடையே, 24ஆம் தேதி இரவு முதல் 25 ம் தேதி காலை வரை கரையை கடக்கும் எனவும் IMD கணித்துள்ளது.

News October 22, 2024

தீபாவளி: பொதுமக்கள் கவனத்திற்கு

image

* அதிக மாசு மற்றும் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்.
* அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்
* ஹாஸ்பிட்டல், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்
* அரசு அனுமதித்துள்ள கால அளவுகளில் காலை 6 – 7 மணி வரை, இரவு 7 -8 மணி வரை மட்டும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

error: Content is protected !!