India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. ➤கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சீனா தெரிவித்தது. ➤பெரு முன்னாள் அதிபர் டோலிடோவுக்கு ஊழல் வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ➤சீனாவின் டியான்பிங்-3 செயற்கைக்கோள் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
திமுகவிற்கு எம்.பிக்கள் இருக்கலாம், ஆனால் வாக்கு சதவீதம் சரிவடைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். கூட்டணி இல்லாமலேயே அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கூட்டணி இல்லாமல் திமுகவால் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மானசா என்பவருக்கு ₹15,000 இழப்பீடு வழங்க தபால் துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மானசா பதிவுத் தபால் ஒன்றை அனுப்பிய போது ₹29.50க்கு பில் வந்ததாகவும், ஆனால் ஊழியர்கள் தன்னிடம் ₹30 வசூலித்ததாகவும் வழக்குத் தொடுத்தார். மென்பொருள் கோளாறு காரணமாக அதிக கட்டணம் வசூலித்ததை தபால் துறை ஒப்புக்கொண்டதால் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
விக்கிரவாண்டியில் நடைபெறும் தவெக மாநாட்டில் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக். 27 மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில், 6 மணியளவில் விஜய் உரையாற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது. மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிய பின் விஜய் மேடைக்கு வருகை தர உள்ளார். தொடர்ந்து, மாநாட்டு மேடையில் கட்சியின் கொள்கையை அவர் பிரகடனம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆபாச வீடியோவை வெளியிட்டது முன்னாள் நண்பர் தாரிஹ் என்று நடிகை ஓவியா குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் ஓவியா, இளைஞர் ஒருவருடன் படுக்கையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகியது. இதுகுறித்து போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தாரிஹ் என்பவரின் மோசமான நடத்தையை தெரிந்து கொண்டு விலகியதால், தன்னை பழிவாங்க போலி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளதாக ஓவியா தெரிவித்துள்ளார்.
சம்பா கோதுமை (ஒரு கப்), அவல் ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து, மாவு பதத்திற்கு அரைக்கவும். இந்த மாவில் உப்பு நீர் தெளித்து, உதிரியாக உடைத்து கொள்ளவும். பிறகு சூடான இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, அதன் மேல் மாவை பரப்பி 20 நிமிடங்கள் வரை நன்கு வேக வைத்து எடுக்கவும். அதை பாத்திரத்தில் கொட்டி துருவிய தேங்காய், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளறினால், சுவையான சம்பா கோதுமை புட்டு ரெடி.
கொடுமையில் மிகவும் கொடுமையானது தனிமையில் இருப்பது. அதுவும் இன்றைய இயந்திர வாழ்க்கையில், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலர் தனிமையால் அவதியடைவதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. வறுமை, மகிழ்ச்சியற்ற சமூக உறவுகளுடன் வாழ்பவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கு 30% அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிமென்ஷியாவால், ஒரு நபரின் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள டானா புயலால் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் உலக வானிலை அமைப்பு (WMO) உருவாக்கிய வெப்பமண்டல சூறாவளி பெயரிடும் அமைப்பின்படி, இந்த புயலுக்கு டானா என்று கத்தார் பெயரிட்டது. டானா என்ற சொல்லுக்கு அரபு மொழியில் ‘தாராள மனப்பான்மை’ என்று பொருள்.
தங்கத்தை போல் வெள்ளி விலையும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு ₹2 அதிகரித்து ஒரு கிராம் ₹112க்கும், கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹9,000 அதிகரித்து வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.
திமுக சிறப்பாக செயல்படுவதால் இபிஎஸ் பொறாமைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை செய்து வருவதாகக் கூறினார். இதனிடையே, மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும், ஜோசியரை போல அவர் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.