India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீவிரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என PM மோடி கூறியுள்ளார். ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் இன்று, தொழில்துறை தலைவர்கள் மத்தியில் பேசிய அவர், தீவிரவாதத்திற்கான நிதி உதவியை எதிர்த்து நாம் ஒற்றுமையுடன் செயல்பட அழைப்பு விடுத்தார். மேலும், சர்வதேச தீவிரவாதம் தொடர்பான விரிவான பிரச்னை UN சபையில் நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனமான Zomato, அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ₹6லிருந்து, ₹10 ஆக உயர்த்தியுள்ளது. பண்டிகை காலத்தில், சிறந்த சேவையளிக்க இக்கட்டண உயர்வு அவசியம் என்கிறது Zomato. ஒவ்வொரு ஆர்டருக்கும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உணவு விலையுடன், GST, restaurant charges, delivery fees என பல கட்டணங்கள் விதிக்கப்படும் நிலையில், இந்த உயர்வை எப்படி தாங்குவது என நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர்.
வயிறு உப்புசம், வாயு தொந்தரவு & செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற அன்னாசிப்பூ தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அன்னாசிப்பூ, சுக்கு, மிளகு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அன்னாசிப்பூ தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
கங்குவா படத்தின் ஒவ்வொரு சீனையும் 100 முறைக்குமேல் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், அதன் தாக்கம் அதிகரித்தபடி உள்ளது என பாடலாசிரியர் மதன் கார்கி பாராட்டியுள்ளார். அவர் தன் X பதிவில், காட்சிகளின் பிரமாண்டம், கலையின் நுணுக்கம், ஆழமான கதை மற்றும் கம்பீரமான இசை இவற்றுடன் சூரியாவின் பவர்ஹவுஸ் பெர்ஃபாமன்ஸும் இணைந்து, இப்படத்தை மிகச்சிறந்த படைப்பாக மாற்றியுள்ளதாக புகழ்ந்துள்ளார்.
மத்திய அரசின் பிராந்திய ராணுவத்தின் கீழ் தென் இந்தியாவில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கிளார்க், ஹவுஸ் கீப்பர் உள்ளிட்ட (224 பணியிடங்கள்) பொறுப்புகளில் சேர விரும்புவோர் கோவை PRS மைதானத்தில் நவ. 6-16 வரை நடக்கும் ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். கல்வித்தகுதி: 8, 10, 12 வகுப்பு. வயது வரம்பு: 18-42. தேர்வுமுறை: உடல்தகுதி & மருத்துவ பரிசோதனை. கூடுதல் தகவலை <
கடந்த சில நாள்களாக விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வரும் விவகாரத்தில், X தளத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடுமையாக சாடியுள்ளது. X மற்றும் மெட்டா நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், X தளம் குற்றச் செயல்களை செய்ய தூண்டுவதாக மத்திய அமைச்சகம் சாடியுள்ளது. VPN பயன்படுத்தி மிரட்டல் விடுத்த பயனர்களின் விவரங்களைப் பெற முடியாததால் இவ்வாறு சாடியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தெளிவான வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக தமிழிசை விமர்சித்துள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிட, பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், காங்கிரஸில் தகுதியான பலர் இருந்தும் பிரியங்காவை வேட்பாளராக நிறுத்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், நம்பிக்கையுடன் வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களை ஏமாற்றியவர் ராகுல் காந்தி எனவும் அவர் கடுமையாக சாடினார்.
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ரிஷப் பண்ட் முன்னேற்றம் கண்டுள்ளார். ஜெய்ஸ்வால் 4ஆவது இடத்திலும், ரிஷப் பண்ட் 3 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்திலும், விராட் கோலி (ஒரு இடம் சரிந்து) 8ஆவது இடத்திலும் உள்ளனர். தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பும்ரா மற்றும் ஜடேஜா முதலிடத்தில் தொடர்கின்றனர்.
WHATSAPP-இல் செய்தி அனுப்ப வேண்டும் எனில் கான்டாக்ட் பகுதி சென்று எண்ணை சேமிக்க வேண்டியுள்ளது. இதற்குப்பதில், WHATSAPP செயலியிலேயே எண்ணை சேமிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது கான்டாக்டில் எண்ணை சேமிப்பதால், மாெபைல் தொலைந்தால் எண்ணை இழக்க வேண்டியுள்ளது. ஆனால் WHATSAPPஇல் சேமித்தால், மொபைல் தொலைந்தாலும் எண் அப்படியே இருக்கும்.
மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக விஷமச் செய்தியை திமுக பரப்புவதாகக் குற்றஞ்சாட்டினார். கடந்த தேர்தலை விட திமுக 2024இல் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், 2026இல் அதிமுக ஆட்சியில் அமருவதை திமுகவால் தடுக்க முடியாது என்றும் சூளுரைத்தார்.
Sorry, no posts matched your criteria.