News October 23, 2024

World record: T20-யில் 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

image

T20 WC Sub Regional Africa Qualifier Group B: காம்பியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. T20 வரலாற்றில் அதிகபட்ச ரன்களில் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 344 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய காம்பியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

News October 23, 2024

ITI மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

image

ITI-களில் மாணவர்களின் நேரடி சேர்க்கை அக்.30 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதிநாள் செப்.30 வரை இருந்த நிலையில், அக்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ITI-களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது. மேலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ₹750, மிதிவண்டி, சீருடை, பயிற்சி கருவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

முதல் போட்டியில் இந்தியா தோல்வி

image

ஜெர்மனியுடனான முதல் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் ஜெர்மனி வென்றது. 8 பெனால்டி கார்னர்கள், 1 பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தும் அதை இந்திய வீரர்கள் கோலாக மாற்ற தவறினர். 2014க்கு பிறகு முதல்முறையாக சர்வதேச போட்டி டெல்லியில் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி நாளை நடைபெற உள்ளது.

News October 23, 2024

Apply Now: ₹1.08 லட்சம் சம்பளம்… மத்திய அரசில் வேலை!

image

POWERGRID நிறுவனத்தில் காலியாகவுள்ள 802 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Jr Officer Trainee, Diploma Trainee உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: Diploma, BA, BE, BBA, BBM, CA. வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹21,500 – ₹1,08,000. தேர்வு முறை: எழுத்து தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.12. கூடுதல் விவரங்களுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 23, 2024

ரஷ்யாவுக்கு 3000 வீரர்களை அனுப்பிய வடகொரியா

image

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவ 3,000 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக SK நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறும்போது, டிசம்பருக்குள் 10,000 வீரர்களை அனுப்ப ரஷ்யாவுடன் NK ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், சூழலுக்கு ஏற்ப அவர்கள் களமிறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே SKவின் குற்றச்சாட்டுகள் போலி என ரஷ்யா மறுத்துள்ளது.

News October 23, 2024

இந்தியா – சீனா தீர்மானம் குறித்து காங். கேள்வி

image

எல்லைப் பிரச்னையில் இந்தியா- சீனா இடையே தீர்மானம் ஏற்பட்டுள்ள விவகாரத்தில், காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். எல்லையில் 65 ரோந்து புள்ளிகளில் 26 இடங்களை இந்தியா இழந்த நிலையில், இப்போது அது ஒப்பந்தமாகிவிட்டதா எனவும், சீனத் தரப்பில் குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் எழுத்துப்பூர்வமானதா அல்லது வாய்மொழியானதா என்று அவர் அரசிடம் வினவியுள்ளார்.

News October 23, 2024

தீபங்களும் ஏற்ற வேண்டிய இடங்களும்

image

ஒருவர் தனது வீட்டில் உள்ள இடங்களுக்கு ஏற்ப தீபமேற்றி வழிபடுவதால் ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரிக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. அதன் விவரம் இதோ: *கோலமிட்ட வாசல்-5 *திண்ணை – 4 *மாடக்குழி – 2 *நிலைப்படி – 2 *வாசல்படி – 2 *முற்றம் – 4 *பூஜையறை – 2 *சமையலறை – 1 *தோட்டம் – 16 விளக்கு ஏற்றி வைத்து, ‘தீப லட்சுமியே நமோ நம’ என்ற மந்திரத்தை 24 முறை சொல்லி வணங்கினால் சர்வ மங்கலமும் உண்டாகும்.

News October 23, 2024

ராகுலை விட்டுக் கொடுக்காத கம்பீர்

image

கே.எல்.ராகுலுக்கு அணி நிர்வாகம் பக்கபலமாக இருக்கும் என கம்பீர் தெரிவித்துள்ளார். சமூகவலைதள விமர்சனங்கள், வல்லுநர்களின் கருத்துகள் Playing 11-ஐ தீர்மானிப்பதில்லை எனவும், BAN-க்கு எதிராக ராகுல் நன்றாக விளையாடினார் எனவும் கூறியுள்ளார். NZ-க்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட், 2ஆவது இன்னிங்ஸில் 12 ரன்களில் அவுட்டானதால் ராகுல் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.

News October 23, 2024

சமிக்ஞையில் பேசும் ஆப்பிரிக்க மரம்!

image

ஆப்ரிக்காவில் காணப்படும் அகாசியா வகை மரங்களிடம் விந்தையான குணம் ஒன்றுள்ளது. இதன் இலைகளை ஒட்டகச்சிவிங்கிகள் உண்டால் அந்த அச்சுறுத்தலில் இருந்து தப்ப உடனே, எத்திலீன் என்ற வாயுவை வெளியிடுகிறது. இது காற்றில் பரவி அப்பகுதியில் உள்ள மற்ற அகாசியா மரங்களை எச்சரிக்கிறது. உடனே அவ்வகை மரங்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கி தனின் எனும் வேதியியல் சுரப்பை வெளியிடும். இதனால் அந்த இலைகளை விலங்குகள் உண்ணாது.

News October 23, 2024

டிசம்பரில் பாஜகவுக்கு புதிய தலைவர்?

image

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பின்பு பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தலைவராக உள்ள ஜெ.பி. நட்டா அமைச்சரான நிலையில், டிசம்பர் 2ஆவது வாரத்திற்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தென் மாநிலத்தை சேர்ந்தவரை தலைவராக்க பாஜக மூத்த தலைவர்கள் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!