News October 24, 2024

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

image

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.

News October 24, 2024

அக்.24: வரலாற்றில் இன்று

image

*1801 – மருது பாண்டியர்கள் மறைந்தநாள்.
*1857 – உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணி செபீல்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
*1914 – இந்திய ராணுவப் போராளி லட்சுமி சாகல் பிறந்தநாள்.
*1962- இந்தோ-திபெத்திய எல்லைக்காவல் நாள்.
*1966- நடிகை நதியா பிறந்தார்
*1976- இந்தி நடிகை மல்லிகா செராவத் பிறந்தநாள்
* 1980 – நடிகை லைலா பிறந்தார்
*2014 – நடிகர் SS ராஜேந்திரன் மறைந்தநாள்.

News October 24, 2024

யமுனையில் ரசாயனம்.. பாஜக மீது அதிஷி தாக்கு

image

யமுனை நதியில் ரசாயன நுரை பொங்கிவர பாஜகவே காரணம் என்று டெல்லி CM அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானா, உ.பி.யில் உள்ள ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவு திறக்கப்படுவதால் யமுனைநதி மாசடைந்து விட்டதாகவும் சாடியுள்ளார். டெல்லியில் காற்று மாசு, தண்ணீர் மாசு ஏற்படுவதற்கு பாஜகவின் மோசமான அரசியலே காரணம் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 24, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 24, 2024

JOB Alerts: ரயில்வேயில் வேலைவாய்ப்பு

image

ரயில்வேயில் (தென் மேற்கு) காலியாக உள்ள பணி இடங்களுக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. குரூப்-சி பதவிகளில் 46 இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதற்கு செஸ், ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேலைக்கு www.rrchubli.in, www.swr.indianrailways.gov.in இணையதளங்களில் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News October 24, 2024

டி20 கிரிக்கெட்: அதிவேக சதமடித்த வீரர்கள்

image

1) சாஹில் செளஹான் (எஸ்தோனியா) – 27 பந்துகளில் சதம்
2) ஜான் நிகோல் (நமீபியா) – 33 பந்துகளில் சதம்
3) சிக்கந்தர் ரசா (ஜிம்பாப்வே) – 33 பந்துகளில் சதம்
4) குஷால் மலா (நேபாளம்) – 34 பந்துகளில் சதம்
5) ரோஹித் ஷர்மா (இந்தியா) – 35 பந்துகளில் சதம்
6) டேவிட் மில்லர் (தெ.ஆப்பிரிக்கா) – 35 பந்துகளில் சதம்

News October 24, 2024

FLASH: 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி. மலை, கள்ளக்குறிச்சியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.

News October 24, 2024

ரோஹித் சாதனையை முறியடித்த சிக்கந்தர்

image

டி20 கிரிக்கெட்டில் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்த சாதனையை ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா முறியடித்துள்ளார். 2017இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் சதமடித்திருந்தார். இதேபோல் தெ.ஆப்பிரிக்க வீரர் மில்லரும் 35 பந்துகளில் சதமடித்திருந்தார். இந்த சாதனையை சிக்கந்தர், கம்பியாவுக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் சதமடித்து முறியடித்து, புதிய சாதனை படைத்தார்.

News October 24, 2024

85, 85, 85 .. மகாராஷ்டிரா காங்கிரஸ் கூட்டணி முடிவு

image

மகாராஷ்டிரா தேர்தலில் தலா 85 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி, சரத்பவார் கட்சி முடிவு செய்துள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நவ.20இல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி, சரத்பவார் கட்சி ஆகியன கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எஞ்சியுள்ள 18 தொகுதிகளை சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்குவது குறித்து இன்று முடிவு செய்யவுள்ளன.

News October 24, 2024

ஸ்பைடர்மேன் பட ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

ஹாலிவுட் படமான ஸ்பைடர்மேன் படங்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் உள்ளனர். இதுவரை ஸ்பைடர்மேன் படங்கள் 3 பாகங்கள் வெளிவந்து வசூலை வாரி குவித்துள்ளன. இந்நிலையில், 4ஆவது பாக திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு கோடை காலத்தில் தாெடங்க இருப்பதாகவும், டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!