News October 24, 2024

விசிக மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைப்பு

image

விசிகவில் 234 சட்டசபை தொகுதிகளிலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், தற்போதைய மாவட்ட நிர்வாகம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. தமிழக கட்சிகளில், அதிக மாவட்ட செயலாளர்கள் கொண்ட கட்சி இதுவாகும். இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் 3 வாரங்களில் முடிக்கப்பட உள்ளன.

News October 24, 2024

+2 மாணவியை கடத்திய பெண் கராத்தே மாஸ்டர்!

image

சென்னையில் 17 வயது + 2 மாணவி, இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. போலீஸ் விசாரணையில் அந்த மாணவியுடன் அவரது கராத்தே மாஸ்டரான 27 வயது பெண், லெஸ்பியன் உறவில் இருந்ததும், திருமணம் செய்யும் நோக்கில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில், அவர்களை தூத்துக்குடியில் மடக்கிய போலீஸார் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கராத்தே மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

News October 24, 2024

வாய் கொப்பளிக்க எந்த உப்பை பயன்படுத்த வேண்டும்?

image

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பது உடலுக்கு நன்மை பயக்குமென சித்த மருத்துவம் கூறுகிறது. அதனை முறைப்படி எப்படி செய்வது என பார்க்கலாம். தீ நுண்ணுயிர் தொற்று, வாய் துர்நாற்றம், தொண்டை வலி, பற்களிடையே ரத்தக்கசிவு இருந்தால் 200 ml, வெந்நீரில் 20 g கல் (அளவு கூடினால் செரிமான பிரச்னை ஏற்படலாம்) உப்புப் போட்டு வாய்க் கொப்பளிக்கலாம். கொப்பளிக்க தூள் உப்பையோ, இந்துப்பையோ பயன்படுத்தக்கூடாது.

News October 24, 2024

விளையாட்டு துளிகள்

image

➤NZ-க்கு எதிரான IND மகளிர் அணியின் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரின் முதலாவது ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. ➤ஜோஹர் கோப்பை: 2வது ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 0-4 என்ற கணக்கில் ஆஸி அணியிடம் தோல்வி அடைந்தது. ➤SAFF லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி, 1-3 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது. ➤ISL தொடர்: சென்னையில் நடக்கும் போட்டியில் இன்று சென்னை FC, கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

News October 24, 2024

அஜீரணப் பிரச்னையை விரட்டி அடிக்கும் கடுக்காய் தேநீர்

image

வயிறு உப்புசம், வாயு தொந்தரவு, புளி ஏப்பம் போன்ற செரிமான பிரச்னைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற கடுக்காய் தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கடுக்காய், சுக்கு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை பொடித்து நீரில் கலந்து, கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான கடுக்காய் தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News October 24, 2024

ரேஷன் கடைகளில் வங்கி கணக்கு..

image

ரேஷன் கடை மூலம் மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு A/C தொடங்கி, வங்கி சேவை வழங்க அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேவிங்ஸ், FD, லோன் திட்டங்கள் குறித்த கையேடு விநியோகிக்கவும், சேமிப்பு A/C விண்ணப்பம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடை வாயிலாக தொடங்கப்படும் கணக்கிற்கு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

News October 24, 2024

மீள்வார்களா இந்திய சிங்கப்பெண்கள்!

image

IND-NZ மகளிர் அணிகளிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் WC T20யில் களமிறங்கிய IND அணி லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தது. மேலும் WC T20யில் NZயிடம் ஏற்பட்ட தோல்விக்கு சொந்த மண்ணில் IND பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News October 24, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤நார்வேயின் சுவால்பார்ட் தீவில் உள்ள சர்வதேச விதை பெட்டகத்தில் 30,000 புதிய விதை மாதிரிகள் சேமிக்கப்பட்டன. ➤போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 19 குற்றவாளிகளை மெக்சிகோ ராணுவம் சுட்டுகொன்றது. ➤நைஜீரியா டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்தது. ➤புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான ‘பட்டிங்டன்’ பெயரில் அசல் பாஸ்போர்ட்டை வழங்கி இங்கிலாந்து அரசு கெளரவித்தது.

News October 24, 2024

டாஸ்மாக் முன் செல்ஃபி.. போலீசாருக்கு புதிய உத்தரவு

image

பணியிடத்தில் சீருடையுடன் செல்ஃபி எடுத்து உயரதிகாரிக்கு அனுப்ப போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் பணியிடங்களுக்கு போலீசார் குறித்த நேரத்தில் செல்வதில்லை என புகார்கள் எழுகின்றன. இதனால், பணியிடங்களுக்கு உரிய நேரத்திற்கு சென்று செல்ஃபி எடுத்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 10 மணிக்கு TASMAC கடை மூடியதும் அதன் முன்பு செல்ஃபி எடுத்து உயரதிகாரிகளுக்கு அவர்கள் அனுப்புகின்றனர்.

News October 24, 2024

யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது: நிர்மலா

image

உலக வங்கி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அவர் பேசுகையில், “இன்று உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. ஆனால், இதை பயன்படுத்தி யார் மீதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தாது. மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பொருளாதார சக்தியாகவும் இந்தியா இருக்கிறது. எனவே, அமெரிக்காவோ, சீனாவோ யாராலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது” என பெருமிதத்துடன் பேசினார்.

error: Content is protected !!