India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனா நேற்று தனது 11 பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, இணையத்தில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அவற்றை பார்த்த பலரும் நமக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா? என்று புலம்பும் அளவுக்கு குழந்தையாக பார்த்த ஆராதனா, தற்போது தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறார். 2018ல் வெளியான கனா படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை மழலை குரலில் பாடி நம் வீட்டு தேவதையாக மனதைக் கவர்ந்தார்.
பெரும்பாலான ஹாஸ்பிடல்களில் டாக்டர்களின் இடதுபுறத்திலேயே நோயாளிகள் அமர வைக்கப்படுகிறனர். நோயாளிகளின் இதயம், வயிறு, கல்லீரல் உள்ளிட்ட பகுதிகளை டாக்டர்கள் வலதுபுறத்தில் இருந்து எளிமையாக பரிசோதிக்க இது வழிவகுக்கிறது. மேலும், பெரும்பாலான மருத்துவர்கள் வலதுகை பழக்கமுடையவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதன் பின்னணியில் எவ்வித அறிவியல் காரணங்களும் இல்லை.
தீபாவளியையொட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 27) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 24,610 முழுநேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர கடைகள் என மொத்தம் 34,774 ரேஷன் கடைகள் அன்றைய தினம் செயல்படும் என அத்துறையின் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களைப் பெற்று தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பெண் நடன இயக்குனரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜானி மாஸ்டருக்கு நம்பல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர் தற்போது சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காளான் உணவு சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு, பல அற்புதமான நன்மைகளையும் தருகிறது. இதில் உள்ள டோகோபெரோல்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, சருமத்திற்கு பொலிவையும் வழங்குகிறது. பாலி சாக்கரைட்ஸ், நார்ச்சத்து, தாமிரம் கொழுப்பைக் கட்டுப்படுத்தி எடையைக் குறைக்க உதவுகின்றன. குறிப்பாக, பினோலிக், இரும்பு, துத்தநாகம், செலினியம் ஆகிய சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவுகின்றன.
IND அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் NZ அணி நிதானமாக விளையாடி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த NZ அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்களிலும், வில் யங் 18 ரன்களிலும் அஸ்வின் சூழலில் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். தற்போது வரை NZ 39 ஒவர்களில் 127/2 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 70*, ரவீந்திரா 17* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
➤முருங்கைக் கீரை சமைக்கும்போது, சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து சமைத்தால் இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். ➤எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் வாடிப்போன காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக மாறிவிடும். ➤வடைக்கு மாவு அரைக்கும்போது, சிறிது தயிர் & தேங்காய் எண்ணெய்விட்டு அரைத்தால் வடை மிருதுவாக இருக்கும். ➤தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.
‘சார்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர், இயக்குநர் போஸ் வெங்கட் உள்ளிட்ட படக் குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை கண்டுகளித்தனர். பின்னர் பேசிய விமல், “சார் போன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும். ஓடிடி, திரையரங்கு என்பவை வெவ்வேறானவை. இரண்டும் திரைத்துறைக்கு மிகுந்த ஊக்கத்தை வழங்குகிறது” எனக் கூறியுள்ளார்.
விஜய்யின் தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜரின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் திராவிட, தலித்திய பாதையில் விஜய் செல்வார் என அனுமானிக்க முடிகிறது. இந்நிலையில், சுதந்திரப் போராட்ட பெண் ஆளுமைகளான வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாளின் கட் அவுட்டுகள், மாநாட்டில் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கத்திற்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு ₹2 குறைந்து ஒரு கிராம் ₹110க்கும், கிலோவுக்கு ₹2,000 குறைந்து ஒரு கிலோ ₹1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத அளவில் வெள்ளி விலை, 5 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹9,000 அதிகரித்தது நடுத்தர மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
Sorry, no posts matched your criteria.