India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜல்லிக்கட்டு படத்தில் அவரது ‘ஆப்பிரிக்கா அங்கிள்’ கேரக்டரில் நடித்து, பட்டித்தொட்டி எல்லாம் பேமஸ் ஆனவர் கருப்பு சுப்பையா. இந்நிலையில், கட்டபொம்மன் படத்தில் அவருக்கு கவுண்டமணி ஈயம் பூசுவது போல ஒரு சீன் வரும். அதில் அவர் மீது பெயிண்ட் பூசப்பட்டது. இதற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ.300. ஆனால், பெயிண்ட் அடித்ததால் வியர்வை வெளியேறாமல், ரத்தத்தில் கழிவுகள் கலந்து சில ஆண்டுகளிலேயே அவர் இறந்தார்.
1) உடலில் 85% ரத்தத்தை தண்ணீர் உருவாக்குகிறது. 2) 75% தசைகளை உருவாக்குகிறது. 3) உணவில் உள்ள சத்துகளை உடல் உறிவதற்கு தண்ணீர் மட்டுமே ஒரே மருந்து. 3) உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது. 4) 22% எலும்புகளை உருவாக்குகிறது. 5) ஆக்சிஜனை நாம் சுவாசிக்க ஏதுவாக அதை ஈரப்பதம் ஆக்குகிறது. 6) உணவை ஆற்றலாக எரிக்கிறது. 7) கை, கால் மூட்டுகள் நம் தசைகளை குத்தாதவாறு குஷனை ஏற்படுத்துகிறது. Share It
முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா, 2ஆவது டெஸ்ட்டில் எழுச்சி பெறும் என ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியே மிஞ்சியுள்ளது. முதல் இன்னிங்சை தொடங்கிய IND வெறும் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தது. அதுவும் கேப்டன் ரோகித் விக்கெட். 9 பந்துகளை எதிர்கொண்ட அவர் முட்டை ரன்னில் வெளியேறினார். 15 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 1 ரன்னுடன் களத்தில் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. விழுப்புரம், தி.மலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக கனமழையும், தஞ்சை, திருவள்ளூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
குடும்ப சொத்தை பிரிப்பதில் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஷர்மிளாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சரஸ்வதி பவர் நிறுவனத்தில் இருந்த தனக்கு சொந்தமான பங்குகளை ஷர்மிளா சட்டவிரோதமாக அவரது பெயருக்கு மாற்றியதாக ஜெகன், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அண்ணன் -தங்கை உறவு சிதைந்து விட்டதாகவும், இனி அவருடன் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஜெகன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Pink Auto திட்டத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மகளிரின் பாதுகாப்பிற்காக GPS பொருத்திய 250 ஆட்டோக்கள் வழக்கப்படும் (₹1 லட்சம் மானியம்). கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு, ஓட்டுநர் உரிமம். வயது வரம்பு: 25-45. சென்னையில் உள்ள விதவைகள் & ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை. விண்ணப்பிக்கக் கடைசி தேதி: நவ 23. கூடுதல் தகவலுக்கு இந்த லிங்க்கை <
புனேவில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 7, அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசி., தரப்பில் அதிகபட்சமாக கான்வே 76, ரச்சின் 65, சான்ட்னர் 33 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்த சிவா (28), தனது மனைவி லட்சுமியை, பிரசவத்திற்காக அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் அன்று நடந்த விபத்தில் படுகாயமடைந்த சிவா, கர்னூல் GH-ல் சேர்க்கப்பட்டார். மனைவிக்கு பிரசவ வலி வரவே, அதே ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டார். ஆனால், நேற்று சிகிச்சை பலனின்றி சிவா உயிரிழக்க, 1 மணி நேரம் கழித்து அவரது மனைவி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
ஆரம்ப காலங்களில் ஆபாச படங்களை தயாரிப்பதும், வெளியிடுவதும் மிகவும் சவாலானதாக இருந்தது. அதேபோல் தொடக்க காலத்தில் படங்களின் தரம் மிக மோசமாக இருந்தது. அதன் காரணமாக, நீல நிறத்தில் தான் படக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு தெரிந்தது. மேலும், ஆபாச பட கேசட்களை விற்பனை செய்தவர்கள் நீலநிற கவர்களில் வைத்து கொடுத்தனர். இப்படியாக பல காரணங்களால் ஆபாச படங்கள் Blue Films என அழைக்கப்பட்டன.
மக்களுக்கு பயனளிக்கும் அசத்தலான ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ₹ 239, ₹ 399 மற்றும் ₹ 969 ஆகிய 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தரப்படுகிறது. இந்த ரீசார்ஜ்களை செய்தவர்கள், விபத்தில் உயிரிழந்தால் ₹ 1லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றால் ₹ 25 ஆயிரமும் காப்பீட்டு தொகையாக ஏர்டெல்லே வழங்குகிறது. Share It.
Sorry, no posts matched your criteria.