News October 26, 2024

₹199, ₹299-க்கு தீபாவளி ஸ்பெஷல் தொகுப்பு: அரசு

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகளில் வரும் 28ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு மளிகைப்பொருள் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் கிடைப்பதை விட, மிக குறைந்த விலையில் பிரீமியம் ₹199 மற்றும் எலைட் ₹299 என இரண்டு வகையாக விற்கப்படும். இந்த மளிகை தொகுப்புகள், ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News October 26, 2024

Wikipedia மீது குண்டு போட்ட எலான் மஸ்க்

image

விக்கிப்பீடியாவிற்கு நன்கொடை வழங்குவதை மக்கள் நிறுத்த வேண்டும் என எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார். இடதுசாரி நபர்களால் விக்கிப்பீடியா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஹமாஸ் ஆதரவாளர்கள் 40 பேர், இஸ்ரேலுக்கு எதிராகவும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவாகவும் அந்த தளத்தில் எழுதியதாக Pirate Wires வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி மஸ்க் இதை தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

இந்திய அணி மோசமான தோல்வி

image

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்துள்ளது. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஷ்வால் 77, ஜடேஜா 42 என ஓரளவு சிறப்பான ரன்களை எடுத்தனர். நியூசி., இரு இன்னிங்ஸ்களில் முறையே 259 & 255 ரன்களும், இந்தியா 156 & 245 ரன்களும் எடுத்தன.

News October 26, 2024

தவெகவில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகல்

image

தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளனர். மாநாடு நடைபெறும் வேளையில் சிலர் கட்சியில் இருந்து விலகியது தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 26, 2024

இபிஎஸ்-க்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது – திமுக

image

இபிஎஸ் பேசுவது பற்றி எல்லாம் தாங்கள் கவலைப்படுவதில்லை என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் ஏதேதோ உளறிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும், அவரது சொந்த தொகுதியில் இருந்து மட்டும் 3,000 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 2026இல் அதிமுக ஆட்சியமைக்கும் என இபிஎஸ் கூறியிருந்தார்.

News October 26, 2024

தலைமுடியை பாதுகாக்க கடுகு எண்ணெய்

image

தேங்காய் எண்ணெய்யை விட கடுகு எண்ணெய் தலைமுடிக்கு சிறந்தது என அரோமோதெரபிஸ்ட் கூறுகின்றனர். கடுகு எண்ணெய்யில் இருக்கும் சல்பரில் காரத்தன்மை குறைவாக இருப்பதால் தலைமுடிக்கு நல்ல போஷாக்கு கொடுக்கும். இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தலைமுடி உறுதியாவதோடு பளபளப்பாகும். சன்ஸ்கிரீன் போல செயல்படுவதால், முடி பிரவுன் நிறத்தில் மாறுவதை தடுக்கும் என்கிறார்கள்.

News October 26, 2024

மாநாடு: இன்று நைட் வருகிறார் விஜய்?

image

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெக மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நாளை நடைபெறவுள்ளது. மாநாட்டு திடலுக்கு நாளை தனது இளைஞர் படையுடன் விஜய் வருவார் என கூறப்பட்ட நிலையில், இன்றிரவே வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தங்குவதற்கு ஏற்ப VIP ரூம் வசதியும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

News October 26, 2024

புதிய THEME உடன் களைகட்டும் தவெக மாநாடு!

image

விக்கிரவாண்டியில் ‘புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்’ என்ற கருத்துருவில் (தீம்) தவெக மாநாடு நடைபெறவுள்ளது. கட் அவுட்களில் உள்ள ஒவ்வொரு தலைவர்களின் கொள்கை வாசகங்களும் மாநாட்டுத் திடலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாநாட்டையும் ஒவ்வொரு கருத்துருவில் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. தவெகவின் கொள்கையை மையப்படுத்தியே நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

News October 26, 2024

ALERT: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை IMD விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அங்கு Yellow அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதுரையில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

News October 26, 2024

சீமானுக்கு தலைவலி கொடுக்கும் முன்னாள் தம்பிகள்

image

சீமான் மீதான அதிருப்தியில் நாதகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து தற்போது புதிய இயக்கமொன்றை கண்டிருக்கின்றனர். ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம் போல திமுக, அதிமுக என எந்தப் பக்கமும் தாவிடாமல், தனித்து செயல்பட அவர்கள் முடிவெடுத்திருப்பது சீமானுக்கு தலைவலியாக மாறியுள்ளது. சீமானுக்கு எதிராக அவர்கள் பல அஸ்திரங்களை ஏவுவார்கள் என்று இணையத்தில் களமாடும் முன்னாள் தம்பிகள் ஆருடம் கூறுகின்றனர்.

error: Content is protected !!