India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 3வது ODI போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. NZ நிர்ணயித்த 233 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி, 44.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 100, ஹர்மன் ப்ரீத் 59*, யாஸ்திகா பாட்டியா 35 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூசி., மகளிர் அணிக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 42 ஓவர்களில் 221 ரன்களை எடுத்துள்ளது. இந்திய ஸ்டார் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா, நிலைத்து நின்று ஆடி 122 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஓபனராக ரன் எடுப்பதில்லை என்ற விமர்சனத்துக்கு இந்த சதம் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மந்தனா.
டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் போன்றவற்றைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க கெமிக்கல் Repellent & Coil-களை நம்மில் பலர் பயன்படுத்துகிறோம். இவை சுவாசப் பிரச்னை & பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றுக்கு பதிலாக, இயற்கையான புகைமூட்டிகளை பயன்படுத்தலாம். சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும் மனோமகுட தூப சூரணத்தை வாங்கிவந்து நெருப்புத்தணலில் போட்டு அதன் புகையை வீடு முழுவதும் காட்டினால் கொசுக்கள் பறந்தோடும்.
ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது தொடரப்பட்ட வழக்கு திரும்ப பெறப்பட்ட நிலையில், அந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணையை 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்கவும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆணையிட்டுள்ளார்.
90களில் வெளியாகி பெரிய ஹிட் படமானது ஜுமான்ஜி. Board game மூலம் விளையாடுபவர், வேறொரு உலகிற்கு சென்று சவால்களை எவ்வாறு சந்திக்கிறார் என்பதே கதை. 1995-ல் முதல் பாகமும், 2017-ல் பிரபல நடிகர் டிவெய்ன் ஜான்சன் நடிக்க 2-வது பாகமும் வெளியானது. இப்படத்தின் 3-வது பாகம் தற்போது தயாராகி வரும் நிலையில், படம் 2026 டிசம்பர் 11ல் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் செயலி முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் வேலை செய்யவில்லை என்றும், மெசேஜ் அனுப்ப முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மாலை 5:14 முதலே இந்த பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி மெட்டா நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் வேலை செய்கிறதா?
செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை நவ.7-க்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், தடயவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம், செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது. விசாரணை முழுவதும் நிறைவு பெறாததால், வழக்கினை நீதிபதி ஒத்திவைத்தார்.
Googlepay, Phonepe போன்ற UPI செயலிகளுக்கு போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் JioFinance செயலியை அறிமுகம் செய்துள்ளது. டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு உள்பட கட்டணங்கள் செலுத்துதல், UPI பரிவர்த்தனை, e-wallet உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இது வழங்கும். இச்செயலிக்கு RBI ஆன்லைன் ‘Payment Aggregator’ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இது மற்ற UPI செயலிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு, நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது செசாத், இந்தியாவை சின்ன குழந்தையை அடிப்பது போல நியூசிலாந்து அடித்துள்ளார்கள் என்றார். மேலும், பேப்பரில் தான் இந்தியா புலி, சொந்த மண்ணிலேயே தோற்க இந்திய அணி பழகிவிட்டது போலும் என்று கிண்டலடித்துள்ளார்.
ஐபோன் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா தன் சாதனை பயணத்தை தொடங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி ($6 bns) மதிப்புக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதே வேகம் தொடர்ந்தால் கடந்த ஆண்டின் சாதனையான $10 பில்லியனை தாண்டிவிடும் எனத் தெரிகிறது. ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.