India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
New-Gen Dzire என்ற புதிய பிரீமியம் ரக காரை நவ.11ஆம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள், 360° கேமரா, 80 Bhp பவர், 112 Nm டார்க் இழுவிசை, 3 சிலிண்டர் Z சீரிஸ் என்ஜின், 4.2 inch டிஜிட்டல் MID பொருத்தப்பட்டுள்ளன. லிட்டருக்கு 25.19 Km மைலேஜ் தரும். மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாகவுள்ள இதன் ஷோரூம் விலை ₹6.70 லட்சமாகும்.
ஜிடி 4 கார் ரேஸில் பங்கேற்கவுள்ள அஜித்குமாருக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “திராவிட மாடல் அரசு செயல்படுத்திய ஃபார்முலா 4 ரேசிங்கை வாழ்த்திய அஜித்துக்கு எங்கள் நன்றி. விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்” எனக் கூறியுள்ளார். தவெக மாநாட்டை அடுத்து, அஜித் பக்கம் திமுக சாய்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
சுக்கு, மிளகு, திப்பிலி, சதகுப்பை, சிறுநாகப்பூ, வாய்விடங்கம், கருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கோரைக் கிழங்கு, மல்லி, சித்தரத்தை, ஓமம், அதிமதுரம், கிராம்பு (தலா 50 gm) ஆகியவற்றை வறுத்து, அரைக்கவும். பின் வாணலியில் வடிக்கட்டிய வெல்லப் பாகினை ஊற்றி, கம்பி பதம் வந்தவுடன் அந்த கலவையை கொட்டி கைவிடாமல் கிளறவும். அதை இறக்கி வைத்து, சூடு ஆறிய பின் நெய் & தேன் விட்டுக் கிளறினால் தீபாவளி லேகியம் ரெடி.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக மாநாட்டில் விஜய் பேசியதற்கு, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் விஜய பிரபாகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பசும்பொன் சென்றுள்ள அவர், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் பேசிய அவர், அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும் போது அதை சரிசமமாக அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதை தேமுதிகவும் முன்வைக்கிறது என்றார்.
ஐரோப்பா GT 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்கவுள்ளார். இதற்காக, தனது கார் பந்தய உபகரணங்களில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் இலச்சினையை அவர் பயன்படுத்துகிறார். இதுதொடர்பாக அமைச்சர் TRB ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு விளையாட்டுத் துறை உலகளவில் செல்கிறது. AJITHEY நன்றி” எனக் கூறியுள்ளார். முன்னதாக, தவெக மாநாட்டில் கலந்து கொண்ட சிலர், ‘அஜித்தே கடவுளே’ என கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாவல் ஆசிரியரான எர்னெஸ்ட் ஹெமிங்வே, 1954ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த நூல் The Old Man And The Sea. ஆதரவற்ற மீனவர் கிழவன், கடலில் பிடித்த பெரிய மீனை கரைக்குக் கொண்டுவர அவர் படும்பாடும், அவரது மனப்போராட்டமும் தான் மூலக்கரு. அதை அப்படியே உள்வாங்கிய யோகியார் பாராட்டும் வகையில், ‘கடலும் கிழவனும்’ என்ற நூலாக மொழிபெயர்த்துள்ளார்.
கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரேணுகாசாமி என்ற ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பக்கவாத அபாயம் இருப்பதால் சிகிச்சை பெற தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க தர்ஷன் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று 6 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
RCB வீரர் விராட் கோலி மீண்டும் அணியின் கேப்டனாக விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2022-ல் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு கேப்டனாக இருந்த டூ பிளெசியாலும் கோப்பையை வெல்லவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒருமுறை கேப்டனாக கோப்பைக்கு முயற்சி செய்ய கோலி விரும்புவதாகத் தெரிகிறது.
Inverter AC என்றதுமே, அவை இன்வெர்ட்டரில் இயங்கும் என எண்ணத் தோன்றும். உண்மையில், Inverter ACக்கும், Inverter Power-க்கும் எந்த தொடர்பும் இல்லை. பொதுவான A.C, ஆன் செய்தவுடனே 100% இயக்க ஆற்றலுடன் இயங்கும். அதனை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. ஆனால், Inverter ACஇல் 30% வரை மின் ஆற்றலை சேமிக்க முடியும். அதே போல இயக்க ஆற்றலை கூட்டலாம் (180%) (அ) குறைக்கலாம் (30%). இதுதான் Inverter AC-இன் ஸ்பெஷாலிட்டி.
அரசு இலவச பஸ்களில் பெண்கள் பயணித்தாலும், அதற்கும் டிக்கெட் உண்டு. இந்நிலையில், திருப்பூரில் நேற்று, டிக்கெட் வாங்காமல் இலவச பஸ்ஸில் சென்ற பெண்ணுக்கு, ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, டிக்கெட் பரிசோதகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதத் தொகை திருப்பித் தரப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.