India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணுவத்தில் சேர தனக்கு ஆஃபர் வந்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் அவர், டெல்லியில் ராணுவ அதிகாரிகளுக்காக ‘அமரன்’ சிறப்புக் காட்சியை திரையிட்டோம். இந்த படத்தை பார்த்த அதிகாரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி. அதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் என்னிடம், உங்களுக்கு ராணுவத்தில் இணைய வாய்ப்பு தருகிறோம், நீங்கள் இணையலாம் என்றனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது’ என்றார்.
இன்று 10 மணிக்கு <<14488162>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) சீனர்கள் (7ஆம் நூற்றாண்டு) 2) குளிர் காலம் 3) நோய் இயல் 4) நெதர்லாந்து 5) லுஃப்ட்வாஃபே 6) Director General of Police 7) சான்ட்போனி 8) Fibre Glass. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
சுவிட்சர்லாந்தில் நடக்கும் உலக உள்ளரங்க வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை ஜெயஸ்ரீ ஜெய்குமார் இடம்பெற்றுள்ளார். காம்பவுண்ட் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற தொழில்முறை வில்லாளரான அவர் இது குறித்து பேசுகையில், தமிழ் இளையோர் மத்தியில் வில்வித்தையில் ஆர்வத்தை ஊக்குவிக்க இந்த போட்டியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, கரூர், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் இன்றும், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், தி.மலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யலாம் என கூறியுள்ளது.
விஜய்யின் தவெக மாநாடு குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். “விஜய் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தை இதுவரை எந்தக் கட்சி மாநாட்டிலும் பார்த்ததில்லை. அவரது பேச்சை கேட்டு எனக்கு புல்லரித்தது. பிஜேபியை பெயர் சொல்லாமல் பெயிண்ட் டப்பா எனக் கூறியுள்ளார். திமுகவை வெளிப்படையாகவே விமர்சித்துவிட்டார். பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்க மாட்டேன் என சொல்வதற்கே ஒரு தில் வேண்டும்” எனக் கூறினார்.
இந்தியாவில் சாம்சங் போன் பயன்படுத்துபவர்களுக்கு, மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சாம்சங்கின் குறிப்பிட்ட மாடல்கள் & கேலக்ஸி வாட்சில் பயன்படுத்தப்படும் பிராசஸர்கள் (Exynos 9820, 9825, 980, 990, 850 & W920) ஹேக்கர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்து உள்ளதாகவும், இதனால் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, உடனே OS update செய்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
போக்குவரத்துக் கழகங்களில் உடனடியாக நிரப்பப்பட வேண்டிய 2,877 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா – நியூசி., மோதும் 3-வது டெஸ்ட், மும்பையில் நவ.1 அன்று தொடங்குகிறது. 2-வது டெஸ்டில் 11 விக்கெட் வீழ்த்தினாலும், 3-வது போட்டியில் சுந்தர் இடம்பெறுவது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது. வான்கடே பிட்ச் வேகப்பந்துக்கு சாதகமானது என்பதால், 2 ஸ்பின்னர்கள் மட்டும் இடம் பெற வாய்ப்புள்ளது. சீனியர்கள் என்ற முறையில் அஸ்வின், ஜடேஜா இருவரும் தேர்வு செய்யப்பட்டால், சுந்தருக்கு இடமில்லாமல் போகும்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பகல் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், தீபாவளிக்கு ஜவுளி வாங்க முடியாமல் மக்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைவீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
நிறப்பிரிகை (Dispersion) காரணமாக சூரிய ஒளியில் இருந்து வரும் 7 நிறங்களில் சிதறல் அளவு குறைவான நீல ஒளி தவிர மற்ற நிறங்களை தூசி மண்டலம் கிரகித்து கொள்கிறது. இதனால் வானம் நீலமாக காட்சியளிக்கிறது. அதன்படி வானில் இருந்து பூமியைக் காண நேர்ந்தால், அதனை சூழ்ந்திருக்கும் (70%) கடல்நீர் மண்டலத்தின் பிரதிபலிப்பான நீலம் வெளிப்படுகிறது. அதனால் விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமி நீல நிறமாக தோற்றமளிக்கிறது.
Sorry, no posts matched your criteria.