News October 31, 2024

தீபாவளியில் 2 கின்னஸ் சாதனைகளை படைத்த அயோத்தி

image

அயோத்தி ராமர் கோயிலின் முதல் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நேற்று (அக்.30) மாலை நடைபெற்ற தீபத் திருவிழாவில், சரயு நதிக் கரையின் ராம் கி பைடி உட்பட 55 படித்துறைகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டதும், 1,121 வேதாச்சாரியார்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்ததும் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றன. விளக்குகளின் எண்ணிக்கை டிரோன்கள் மூலம் கணக்கிடப்பட்டது.

News October 31, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 31, 2024

”லக்கி பாஸ்கர்” படம் எப்படி? திரை விமர்சனம்

image

90’களில் நேர்மை தவறாத பேங்க் கேஷியராக இருக்கும் பாஸ்கர் குமார், கடன் – குடும்பச் சூழலால் நேர்மை தவறுகிறார். அதன் பிறகு, என்ன நடந்தது என்பதே கதை. வேகமாக நகரும் காட்சிகள், திரைக்கதை, துல்கரின் நடிப்பு போன்றவை படத்தின் பிளஸ். பெரிய குறைகள் தெரியவில்லை. ஸ்டாக் மார்க்கெட், பேங்க் மோசடி காட்சிகள் கிளாப்ஸ் பெறுகிறது. ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை கூடுதல் பலம். இயக்குநர் வங்கி அட்லூரிக்கு வாழ்த்துகள்.

News October 31, 2024

புகையிலைப் பொருள்கள் விற்போருக்கு எச்சரிக்கை!

image

பள்ளிகள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைக்காரர், உற்பத்தியாளர், ஏஜெண்டுகள் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனைக்கு எதிரான வழக்கில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனைகளை ஆண்டுக்கு இருமுறை நடத்தவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் புகையிலை தடுப்பு மையத்தை நிறுவவும் அறிவுறுத்தியுள்ளது.

News October 31, 2024

₹6000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை

image

தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ₹6000 கோடி அளவிற்கு விற்பனையானதாக தமிழக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக 75% பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாகவும், தயாரிப்பு குறைந்த நிலையிலும் கூட கடந்தாண்டை விட, விற்பனை சிறப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95% பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளதாம்.

News October 31, 2024

ஆஸ்துமா பிரச்னையா? தீபாவளிக்கான சில டிப்ஸ்

image

தீபாவளியன்று காற்றுமாசு பல மடங்கு அதிகரிக்கும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க: *வெளியில் செல்லும் போது மாஸ்க் அவசியம் *இன்ஹேலரை அருகில் வைத்துக் கொள்ளவும் *முடிந்தளவு பட்டாசு வெடிப்பதை குறைப்பது நல்லது. *பாதிப்புள்ள குழந்தைகள் பெரிய வெடிகளை தவிர்த்து, பெற்றோரின் மேற்பார்வையில் சின்ன வெடிகளை வெடித்து மகிழலாம் *இந்த சூழ்நிலையில் வெந்நீர் பருகுவது நல்லது.

News October 31, 2024

பயத்தில் காய்ச்சலே வந்துவிட்டது: துஷாரா விஜயன்

image

எவ்வளவு உச்சத்தை தொட்டாலும், நமது கால்கள் எப்போதும் தரையில் இருக்க வேண்டும் என்ற தன்னடக்கத்தை ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்டதாக நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். ரஜினி, அமிதாப் போன்ற ஜாம்பவான்களுடன் நடிப்பதை நினைத்து ஏற்பட்ட பயத்தில் படப்பிடிப்பின் முதல் நாளே தனக்கு காய்ச்சலே வந்துவிட்டதெனக் கூறிய துஷாரா, அவர்களுடன் நடித்ததை பெரும் பாக்கியமாக உணர்வதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

News October 31, 2024

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

image

அல்பேனியாவில் நடைபெறும் ‘சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2024’ போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. பெண்களுக்கான 59 கிலோ Free-style பிரிவில் இந்தியாவின் மான்சி அஹ்லாவத் 5-0 என கனடாவின் பியூர்கார்டை வீழ்த்தி வெண்கலம் வென்றார். மான்சி அனைத்து வயது பிரிவு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் சீனியர் (BRZ 2024), U23 (BRZ 2022), U20 (BRZ 2018), U17 (SILVER 2016) பதக்கம் வென்றுள்ளார்.

News October 31, 2024

‘அமரன்’ திரை விமர்சனம்

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘அமரன்’ படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது. SK, சாய் பல்லவி இருவரும் தங்களது கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துள்ளனர். அவர்களது காதல் காட்சிகள் மற்றும் GV பிரகாஷின் இசை படத்திற்கு பெரும் பலமாக உள்ளது. இன்டர்வெல் காட்சி மாஸாகவும், திரைக்கதை விறுவிறுப்பாகவும் நகர்கிறது. வே2 ரேட்டிங்: 3/5

News October 31, 2024

₹1.6 லட்சத்தில் சம்பளம்… துறைமுகத்தில் வேலை!

image

இந்திய துறைமுகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய துறைமுக சங்கம் வெளியிட்டுள்ளது. உதவி & ஜூனியர் செயற்பொறியாளர் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: B.E., B.Tech. வயது வரம்பு: 21-30. சம்பளம்: ₹30,000 – ₹1,60,000. தேர்வு முறை : ஆன்லைன் & நேர்காணல் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.20. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>IPA <<>>லிங்க்கை கிளிக் செய்யவும்.

error: Content is protected !!