India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் முதல் துணை பிரதமர், பிளவுபட்டு கிடந்த இந்திய தேசத்தை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்த அரசியல் தீர்க்கதரிசி சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் இன்று. இந்தியா சுதந்திரம் அடைந்த போது 565 சமஸ்தானங்கள் இணையாமல் முரண்டு பிடிக்க, ராஜதந்திரம் மற்றும் ராணுவ நடவடிக்கை மூலம் வழிக்கு கொண்டு வந்தார். வழக்கறிஞராக பொதுவாழ்வை துவங்கிய அவர், இந்திய அரசியலில் மறைக்க முடியாத வரலாறாய் வாழ்ந்து மறைந்தார்.
டெல்லி அணி ரிஷப் பண்ட்டை தக்கவைக்காத பட்சத்தில், ஐபிஎல் ஏலத்தில் அவரை வாங்க CSK ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஏலத்தில் பண்ட்டை வாங்கும் யுக்தி தொடர்பாக CSK நிர்வாகத்துடன் தோனி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு அடுத்ததாக CSK அணியில் ஒரு கீப்பர் தேவை என்பதாலும், பண்ட் கேப்டனாக சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதாலும் CSK அவரை வாங்கும் என கூறப்படுகிறது.
இன்று 11 மணிக்கு <<14496796>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1)ஜஸ்ட் ரூம் எனஃப் தீவு – USA 2) Chartered Accountant 3) பூர்வாஞ்சல் 4)அணுக் கோட்பாடு 5)42 6) பூச்சிகளைப் பற்றிய படிப்பு 7) ஹூட் பிடோஹுய் 8) ஜார்ஜ் ஹார்ட். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தீபாவளியையொட்டி, Gpay மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு பயனருக்கும் அந்நிறுவனம் ₹1,001 கேஷ் பேக் ஆஃபர் வழங்குகிறது. நவ.7க்குள் இச்சலுகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் அந்த செயலியில் உள்ள 6 லட்டுகளை சேகரிக்க வேண்டும். EB bill, ரீசார்ஜ் போன்ற வழக்கமான பரிவர்த்தனைகள் மூலம் இந்த 6 லட்டுகளை பெறலாம். அதன் பிறகு அந்த லட்டுகளை ஸ்கிராட்ச் கார்டுகளாக கிளைம் செய்து கேஷ்பேக் பெறலாம்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2ஆவது சீசன், நவ.5இல் தொடங்கவுள்ளது. சர்வதேச, இந்திய அளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்கும் செஸ் போட்டி நவ.11ஆம் தேதிவரை அண்ணா நூற்றாண்டில் நூலக வளாகத்தில் நடக்கவுள்ளது. இத்தொடரின் மொத்த பரிசுத்தொகை ₹70 லட்சமாகும் (மாஸ்டர்ஸ் பிரிவு ₹15 லட்சம், சேலஞ்சர்ஸ் பிரிவு ₹6 லட்சம்). இதில் வெல்பவர் அடுத்தாண்டு நடைபெறும் தொடரில் நேரடியாக பங்கேற்க தகுதிபெறுவர்.
இன்று (அக்.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இரும்பு மங்கை, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை படைத்த இந்திரா காந்தி 1984ம் ஆண்டு இதே தினத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 முறை பிரதமர், அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர், எமர்ஜென்சியை அமல்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கினார். இந்திராவை கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எமர்ஜென்சி இன்றும் அவரது அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருக்கிறது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, விருதுநகர், தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அக்.10 ஆம் தேதி வெளியான ‘வேட்டையன்’ கலவையான விமர்சனங்களை பெற்றது. திரைக்கு வந்து 3 வாரங்களுக்கு மேல் ஆன நிலையில், நவ.8 ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி ராமர் கோயிலின் முதல் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நேற்று (அக்.30) மாலை நடைபெற்ற தீபத் திருவிழாவில், சரயு நதிக் கரையின் ராம் கி பைடி உட்பட 55 படித்துறைகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான மண் அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டதும், 1,121 வேதாச்சாரியார்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்ததும் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றன. விளக்குகளின் எண்ணிக்கை டிரோன்கள் மூலம் கணக்கிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.