News November 1, 2024

தீராத நோய்களை தீர்க்கும் திருவதிகையீஸ்வரர்

image

சிவபெருமானின் அஷ்ட வீர தலங்களில், திரிபுரத்தை எரித்து வீரச்செயல் புரிந்த தலம் கடலூரை அடுத்துள்ள திருவதிகை வீரட்டேஸ்வரர் கோயிலாகும். திலகவதியாருக்கு சிவபதவி அளித்து, அப்பரின் சூலை நோய் நீக்கிய தலம் இது என சிவமகா அதிகாபுரி புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்குச் சென்று, வீரதீஸ்வரர் – பெரியநாயகிக்கு அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி, சரங்கொன்றை மலர் சாற்றி வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

News November 1, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 1, 2024

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த தினம் இன்று!

image

மொழிவாரி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்று 58 நாட்கள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இதனைத் தொடர்ந்து எழுந்த கிளர்ச்சி தென்னகம் முழுவதும் பரவியது. இதையடுத்து 1956 நவ.1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்டு இன்றுடன் 68 ஆண்டுகள் கடந்துள்ளன. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்த தினத்தை ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இன்று கொண்டாடுகின்றன.

News November 1, 2024

175 ஆண்டுகளை நிறைவு செய்த பதிவு அஞ்சல் சேவை!

image

இந்தியாவில் பதிவு அஞ்சல் சேவை தொடங்கி இன்றுடன் 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1849ஆம் ஆண்டு நவ.1இல் லண்டனில் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் கொல்கத்தாவிலும் பதிவுத் தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளையர் ஆட்சியில் சாதாரண தபால்களில் முக்கிய ஆவணங்களை அனுப்பி வைக்க தொடங்கப்பட்ட இந்த சேவை இன்று சுதந்திர இந்தியாவிலும் ட்ராக்கிங் வசதி கொண்ட நம்பிக்கைக்குரிய சேவையாக தொடர்கிறது என்றால் மிகையில்லை.

News November 1, 2024

சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!

image

தங்கம் வாங்குவதில் சீனாவை இந்தியா விஞ்சியதாக உலக தங்கக் கவுன்சில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தங்கம் விலை உயர்ந்து கொண்டே போனாலும், மக்கள் வாங்குவது மட்டும் குறைந்தபாடில்லை. ஜூலை முதல் செப்டம்பர் வரையில், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய நுகர்வோர் 51%க்கும் அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளனர். இக்காலகட்டத்தில், சீனர்கள் 165 டன் தங்கத்தை வாங்கிய நிலையில் இந்தியர்கள் 248.3 டன் தங்கம் வாங்கியுள்ளனர்.

News November 1, 2024

3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News November 1, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 1, 2024

இதனால்தான் காது கேட்கும் திறன் குறைகிறது

image

1) வயதானோருக்கான இயல்பான மாற்றங்கள், சுரப்பி, நரம்பு செயல்பாடு குறைதல் பாேன்றவை கேட்கும் திறனை பாதிக்கும் 2) நீண்டகாலம் மிகுந்த சத்தமான சூழலில் இருந்தால், காது நரம்பில் சேதம் ஏற்பட்டு கேட்கும் திறன் குறையும் 3) அதிக சத்தம் காரணமாக குறைபாடு ஏற்படலாம் 4) தொற்று (அ) அழற்சி, கேட்கும் திறனை குறைக்கும் 5) காது நரம்பு (அ) மூளையின் கேட்பாற்றல் பகுதி பாதிக்கப்பட்டால், கேட்கும் திறன் குறையும். SHARE IT.

News November 1, 2024

இம்மாதம் அமலாகும் 5 முக்கிய மாற்றங்கள்

image

*SBI கடன் அட்டைகளுக்கான பைனான்ஸ் கட்டணங்கள் 3.75%ஆக அதிகரிக்கப்பட்டிருப்பது இன்று அமலாகிறது *ICICI கிரெடிட் கார்டுகள் திருத்த விதிகள் நவ.15 முதல் அமலாகின்றன * ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைக்கப்பட்டது இன்று அமலாகிறது *உள்ளூர் பணப்பரிவர்த்தனைக்காக RBI-யால் அறிவிக்கப்பட்ட விதிகள் இன்று அமலாகின்றன * வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று உயர்ந்தது.

News November 1, 2024

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

image

தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, நவம்பர் முதல் வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் நவ. 7 முதல் 11 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என்றும் முன்னறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!