News November 4, 2024

Intelஐ கைப்பற்ற ஆப்பிள், சாம்சங் போட்டி

image

Intel நிறுவனத்தை கைப்பற்ற ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான Intel, AI தொழில்நுட்ப வளர்ச்சியால் ‘Nvidia’ நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் திணறி வருகிறது. இந்நிறுவனம் 3ஆவது நிதியாண்டில் ₹1.39 லட்சம் கோடி அளவிற்கு நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில், இந்நிறுவனத்தை கைப்பற்ற ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

News November 4, 2024

100 வயதை கடந்த வாக்காளர்கள் 2.5 லட்சம் பேர்!

image

இந்தியாவில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 லட்சம் என இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 100 வயதை கடந்தவர்கள் 47,392 பேர் உள்ளனர். உ.பியில் 39,000, கர்நாடகாவில் 17,937, ராஜஸ்தானில் 17,241, தமிழகத்தில் 16,306 பேர் 100 வயதை கடந்துள்ளனர். நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்த தகவல் கிடைத்துள்ளது.

News November 4, 2024

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நாளை தொடக்கம்

image

ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நாளை தொடங்குகிறது. கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடக்கும் இந்த முகாமில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். நவ. 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட வாரியாக பங்கேற்கிறார்கள். நவ. 8ஆம் தேதி சென்னை, கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

News November 4, 2024

BGT தொடருடன் ஓய்வு பெறும் நட்சத்திரங்கள்…

image

நவம்பர் 22-ஆம் தேதி பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெறவுள்ளது. நடப்பு WTC பைனலுக்கு இந்திய அணி முன்னேற, இந்த தொடரில் 4 வெற்றிகளை பெறுவது அவசியம். இந்த சூழலில், வீரர்களின் வயதை குறிப்பிட்டு, இத்தொடருடன் சிலர் ஓய்வு பெறுவார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. நட்சத்திர ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித், கோலி, அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் இருவர் ஓய்வு பெறுவார்கள் எனப்படுகிறது. இதில் உங்கள் கருத்து என்ன..?

News November 4, 2024

பண்டிகை கால விற்பனை 10% அதிகரிப்பு

image

பண்டிகை காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை 10% அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதில் வாஷிங் மெஷின்களின் விற்பனை 5%, டிவிகளின் விற்பனை 7%, ஃபிரிட்ஜ் விற்பனை 12% வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த விற்பனை குறைந்துள்ளதாகக் கூறுகின்றனர். கடந்தாண்டின் பண்டிகை கால விற்பனை அதற்கு முந்தைய ஆண்டை விட 30% அதிகரித்திருந்தது.

News November 4, 2024

இனி உண்மை சான்று பெற கட்டணம் கிடையாது

image

பட்டப்படிப்பு சான்றிதழ்கள் குறித்த உண்மை தன்மை சான்று வழங்க பல்கலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பட்டபடிப்பு முடித்தவர்கள் அரசுப் பணி, உயர் பணிகளில் நியமிக்கப்படும்போது, இச்சான்றிதழ் தேவைப்படும். இதனை பெற விண்ணப்பதாரர் ₹1,000 கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், கட்டணம் நீக்கப்பட்டதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

News November 4, 2024

அமரன் படம் எமோஷனலான அண்ணாமலை!

image

SK நடிப்பில் வெளியான அமரன் படம் குறித்து பாஜகவின் அண்ணாமலை எக்ஸ் தளத்தில், சீருடையில் இருக்கும் வீரர்கள் காட்டும் வீரம், தைரியம், நேர்மை போற்றத்தக்கது. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. 2014 இல் காக்கியில் இருந்தபோது உணர்ச்சிகரமான தருணங்களை அனுபவித்தேன். இக்கதையை திரைப்படமாக இயக்கிய, ராஜ்குமார், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டார்.

News November 4, 2024

வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை: துல்கர்

image

‘சுமதி’ கதாபாத்திரத்தில் நடிக்க எந்த இளம் நடிகையும் விருப்பம் தெரிவித்திருக்க மாட்டார்கள் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் மீனாட்சி செளத்ரி நடித்தது குறித்து பேசிய அவர், ‘சுமதி’ கதாபாத்திரத்தில் அவரை பார்த்த முதல் நாளே, அதற்கு அவர் பொருத்தமானவர் எனத் தோன்றியதாகக் கூறினார். வேறு யாரையும் கற்பனை கூட செய்து பார்க்காத வகையில் அவர் நடித்துள்ளதாகவும் பாராட்டினார்.

News November 4, 2024

இங்கெல்லாம் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.

News November 4, 2024

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்கனி டீ!

image

பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க விட வேண்டும். அதில் நெல்லிக்காயை (1) துருவி அதன் விழுதுகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பிறகு அதை வடிகட்டி, எலுமிச்சை சாறை (ஒரு ஸ்பூன்) சேர்க்க வேண்டும். பின்னர் தேன் கலந்து பருகினால் அந்த நாளே சுறுசுறுப்பாக அமைவதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் பலமாகும். இதில் தேனுக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்க்கலாம்.

error: Content is protected !!