News November 4, 2024

கட்டில் உடைந்து தந்தை, மகன் உயிரிழப்பு

image

திண்டுக்கல் அருகே இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தூக்கத்திலேயே தந்தை, மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு கோபி கிருஷ்ணன் (35), மகன் கார்த்திக் (9) உடன் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த போது கட்டில் கால் முறிந்து விழுந்துள்ளது. இதில், கட்டிலின் மேல்பகுதியில் உள்ள இடைவெளியில் இருவரின் கழுத்துப் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானதாகக் கூறப்படுகிறது.

News November 4, 2024

சர்ச்சை பேச்சு: கஸ்தூரிக்கு பாஜக கண்டனம்

image

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை இழிவாகப் பேசியதாக தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர், தெலுங்கர் அனைவரும் அண்ணன் – தம்பியாக பழகிக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தான் பேசிய அவதூறு கருத்துக்களை கஸ்தூரி திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பிராமணச் சங்கக்கூட்டத்தில் தெலுங்கு மக்கள் பற்றி அவர் பேசியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

News November 4, 2024

இந்திய ஊடகங்கள் VS அமெரிக்க ஊடகங்கள்

image

உலகின் மூத்த ஜனநாயக நாடாக அமெரிக்கா இருந்தாலும், இந்திய ஜனநாயகம் சற்று முதிர்ச்சி அடைந்ததாகவே தெரிகிறது. இந்திய ஊடகங்கள் கட்சி சார்புநிலை எடுத்தாலும், மக்களிடம் இந்த கட்சிக்கு வாக்களியுங்கள், இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்றெல்லாம் நேரடியாக சொல்வதில்லை. ஆனால், அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களுக்கு ஊடகங்கள் நேரடியாக பிரசாரம் செய்கின்றன. பணம் கொடுத்து லாபி செய்வதும் அங்கு சட்டப்பூர்வமாக உள்ளது.

News November 4, 2024

முதல்வர் படைப்பகத்தில் இவ்வளவு வசதிகளா…

image

சென்னை கொளத்தூரில் ₹2.85 கோடி மதிப்பீட்டில் ஸ்டாலின் திறந்து வைத்துள்ள ‘முதல்வர் படைப்பகத்தின் முக்கிய அம்சங்கள்: * படிக்க, பணியாற்ற, உணவு சாப்பிட என மொத்தம் 3 தளங்கள் * 51 பேர் படிப்பதற்கான படிப்பு தளமும், நூலகமும் உள்ளது * 38 பேர் ஒரே நேரத்தில் பணியாற்றும் வகையில் Co -Working Space அமைக்கப்பட்டுள்ளது * நுழைவுக் கட்டணம் ₹5 முதல் ₹10 வரை. இதுபோல தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அரசு தொடங்கலாமே?

News November 4, 2024

ALERT: இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தென் தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

News November 4, 2024

மாற்றி மாற்றிப் பேசும் கமலா ஹாரிஸ்

image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்கள் வேற லெவலில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸின் பிரசாரம் சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்படுகிறது. இந்தியர்கள் அதிகமுள்ள இடங்களில் தன்னை இந்திய வம்சாவளியாகவும், கருப்பினத்தவர் அதிகமுள்ள இடங்களில் தன்னை கருப்பினத்தவர் என்றும், அவர் மாறி மாறிப் பேசுவதாக எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.

News November 4, 2024

நவம்பர் முதல் வாரம் – வரிசைகட்டும் OTT ரிலீஸ்

image

* Amazon Original வெப் சீரிஸாக ராஜ் – டீகே இயக்கத்தில் சமந்தா, வருண் தவான் நடித்த “Citadel: Honey bunny” நவ. 7-ல் வெளியாகிறது * ரஜினி – டி.ஜெ.ஞானவேல் கூட்டணியில் வெளியான வேட்டையன் நவ. 8 Amazon OTT-ல் ரிலீஸாகிறது * டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ARM படம் நவ. 8 Disney + Hotstar-ல் வெளியாகிறது * சீனு இராமசாமி இயக்கத்தில் வெளிவந்த கோழிப்பண்ணை செல்லத்துரை Amazon OTT-ல் நவ. 5-ல் தேதி வெளியாகிறது.

News November 4, 2024

6 மாதத்திற்கு மூடப்பட்ட கேதர்நாத் கோயில்…

image

உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோயில் குளிர்காலத்தை முன்னிட்டு 6 மாதங்களுக்கு மூடப்பட்டது. கங்கோத்ரி நுழைவுவாயில் அடைக்கப்பட்ட ஒரு நாளைக்கு பிறகு கேதர்நாத் கோயில் (நவ.3) மூடப்பட்டது. நிறைவு விழாவில் 15,000 பக்தர்கள் கலந்துகொள்ள, இந்திய ராணுவத்தினர் சடங்கு இசையை வாசித்தனர். காலை 4 மணிக்கு தொடங்கிய சடங்குகளை அடுத்து கோயில் 8:30 மணிக்கு மூடப்பட்டது.

News November 4, 2024

வாழ்க வசவாளர்கள்: CM ஸ்டாலின்

image

புதுசு, புதுசாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைப்பதாக CM ஸ்டாலின் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். திமுக வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் எதிர்க்கின்றனர் என்று கூறிய அவர், வாழ்க வசவாளர்கள் என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், குறை சொல்பவர்கள் எல்லாம் அரசின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

News November 4, 2024

அமெரிக்க அதிபரை முடிவு செய்யும் இந்தியர்களின் வாக்கு

image

அமெரிக்க அதிபர் தேர்தலில், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கும். அமெரிக்காவில் சுமார் 52 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர்களில், 26 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது. இவர்களில் 96% பேர் நிச்சயம் வாக்களிப்பார்களாம். முக்கிய மாகாணங்களில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால், இவர்களின் வாக்குகளைபெற வேட்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

error: Content is protected !!