India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல பிராண்டான NIKEன் லோகோவை வடிவமைக்க கிராஃபிக் டிசைனர் கரோலின் டேவிட்சன் 35 டாலர்கள் ஊதியமாகப் பெற்றார். 1971ல் படித்துக் கொண்டிருந்தபோதே இந்த லோகோவை வடிவமைத்தார். லோகோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் டேவிட்சன் 500 பங்குகளை பரிசாக வழங்கினர். அதன் மதிப்பு இன்று (3 மில்லியன் டாலர்) இந்திய ரூபாயில் ₹25.2 கோடியாகும்.
ODI போட்டிகளில் PAK எதிராக அதிக வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் WI அணியை, ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது. PAK எதிரான வெஸ்ட் இண்டீஸ் (71 வெற்றிகள், 137 ஆட்டம்) வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற PAK-க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் AUS (71 வெற்றிகள், 109 ஆட்டம்) WI சாதனையை சமன் செய்துள்ளது. இலங்கை, இங்கிலாந்து, இந்திய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
வளர்ச்சியே இல்லாத விழுப்புரம் மாவட்டத்தில் என்ன மாதிரியான வளர்ச்சியை Deputy CM உதயநிதி ஆய்வு செய்ய வருகிறார் என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்தவித திட்டமிடலும் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், கஞ்சா, போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையை முதலில் செயல்படச் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார்.
தினசரி 250 மிலி அளவில், ஒருமாதம் தொடர்ந்து பீட்ரூட் ஜுஸ் வந்தால் உயர் ரத்த அழுத்தம் (BP) குறையும் என லண்டன் ராணி மேரி பல்கலை., ஆய்வில் தெரிய வந்துள்ளது. பீட்ரூட் மற்றும் இலைக் காய்கறிகளில் உள்ள அதிக நைட்ரேட் சத்துதான் BP குறைய காரணமாகிறது. ஆனால், தினசரி பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை நிறுத்தினால், அடுத்த 2 வாரங்களில் மீண்டும் BP பழைய நிலைக்கு வந்துவிடும். இதை ட்ரை செய்யும்முன், மருத்துவரை ஆலோசிக்கவும்.
ப்ரோ கபடி லீக் தொடரில், புனே அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியை புனேரி பால்டன் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 49-30 என்ற புள்ளி கணக்கில் புனேரி அணி வெற்றி பெற்றது. இதேபோல, மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
செல்போனை நீண்டநேரம் பார்ப்போருக்கு நாளடைவில் கண் நீர் அழுத்த நோய் வரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாததுதான் இதில் கொடுமையான விஷயம். இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. நாளடைவில் கண் பார்வை மொத்தமாக பறிபோய்விடும். மின்விளக்கை பார்த்தால் சுற்றி வளையங்கள் தெரிவது, தலை வலி, ஒரு பொருளை பார்த்தால் நடுப்பகுதி மட்டும் தெரிவது ஆகியவையே இதன் ஆரம்ப அறிகுறிகள். Share It.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் mudhalvarmarunthagam.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்று மக்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. B.Pharm, D.Pharm சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இலங்கையை சேர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டிலேயே 3.5 கோடிக்கு சொந்தமாக இலங்கையில் ஒரு தீவை வாங்கியுள்ளார். நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவில், ரிலாக்ஸ் செய்ய வசதியாக ஒரு ஆடம்பர வில்லா கட்ட திட்டமிட்டுள்ளாராம். இவருக்கு மும்பையில் ஜூஹுவில் ரூ.7 கோடி மதிப்பில் ஃப்ளாட் உள்ளது. மோசடி வழக்கில் சிறையில் உள்ள சுகேஷின் கேர்ள்பிரண்ட் இவர் என்றும் சொல்லப்பட்டது.
இந்தியாவில் அதிகார வலிமை மிக்க 20 அரசியல் தலைவர் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 8ஆவது இடத்தில் உள்ளார். இந்தியா டுடே வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அமித்ஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர், ராகுல் காந்தி (4) மற்றும் சந்திரபாபு நாயுடு 5ஆவது இடத்திலும் உள்ளனர். நிதிஷ்குமார், யோகி ஆதித்யநாத் முறையே 6 மற்றும் 7ஆவது இடங்களில் உள்ளனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டால், தடுப்பூசிகளுக்கு தடை விதிப்பார் என்று கூறப்படுகிறது. தடுப்பூசிகளை எதிர்க்கும் ராபர்ட் எப்.கென்னடி ஜூனியர், தற்போது டிரம்புக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார். அவரது கருத்துகளை ஆதரித்துள்ள டிரம்ப், மருத்துவ விஷயங்கள் பற்றி கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளதால் தடுப்பூசிகளுக்கு தடை, குடிநீரில் இருந்து ஃப்ளூரைடை நீக்குவது போன்ற முடிவுகள் எடுக்கக்கூடும்.
Sorry, no posts matched your criteria.