News November 5, 2024

‘அமரன்’ OTT ரிலீஸ் எப்போது?

image

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ₹60 கோடிக்கு நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம், SK-வின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

News November 5, 2024

நாய் திருடர்களை சுற்றி வளைத்த போலீஸ்

image

நாய் திருடர்கள் 4 பேரை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 19 நாய்களை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், தெரு மற்றும் வீட்டு நாய்களை கடத்தி விற்கும் Organized Network-ஐ சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அண்டை மாநிலமான நாகாலாந்தில் நாய் கறிக்கு அதிக டிமான்ட் இருப்பதால், இந்த கடத்தல் நடைபெறுகிறது.

News November 5, 2024

மார்டின் லூதர் கிங் பொன்மொழிகள்

image

*கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது. *சிலரின் வன்முறைகள் அல்ல, பலரின் மெளனங்களே என்னைப் பயமுறுத்துகின்றன. *நீங்கள் முழு படிக்கட்டுகளையும் பார்க்க வேண்டியதில்லை, வெறுமனே முதல் அடியை எடுத்துவையுங்கள். *ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே. *நான் அன்போடு ஒட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். வெறுப்பு என்பது தாங்க முடியாத ஒரு சுமை.

News November 5, 2024

உலக தலைவர்கள் மௌனம் ஏன்?: பவன்

image

கனடாவில் இந்துக்கள் மீது ஏவப்பட்ட வன்முறை இதயத்தை தாக்குவதாக பவன் கல்யாண் வேதனை தெரிவித்துள்ளார். உலகின் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதாகவும், உலக தலைவர்கள் இன்னும் ஏன் அமைதிகாக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்துக்களின் துன்பங்களை உலகம் ஒப்புக்கொள்ளவும், நிவர்த்தி செய்யவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 5, 2024

New York வாக்குச்சீட்டில் இடம்பெற்ற ஒரே இந்திய மொழி

image

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில், நியூயார்க் மாகாண வாக்குச்சீட்டுகளில் பெங்காலி மொழி இடம்பெற்றுள்ளது. அம்மாகாண வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்ற ஒரே இந்திய மொழியும் பெங்காலி தான். அம்மொழி பேசும் வாக்காளர்களுக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலம் தவிர்த்து மொத்தம் 4 மாற்று மொழிகள் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

News November 5, 2024

ஃபேமிலி சீக்ரெட்டை பகிர்ந்த VJS மகன்

image

தங்கள் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவது அம்மா மற்றும் தங்கை என்ற இரு பெண்களே என விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தெரிவித்துள்ளார். அந்த இருவர்தான் குடும்பம் உற்சாகமாக இருக்க காரணம் எனவும் கூறியுள்ளார். மேலும், அப்பா தன்னுடைய ஒவ்வொரு கேரக்டர் குறித்தும் தன்னுடன் நிறைய நேரம் விவாதிப்பார் எனவும் அதன் காரணமாகவே தனக்கு சினிமா ஆசை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 91 ▶குறள் : இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். ▶ விளக்க உரை: ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

News November 5, 2024

டிரம்ப் vs கமலா: இன்று தொடங்கும் யுத்தம்!

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். மொத்தம் 538 எலக்ட்ரால் காலேஜ் ஓட்டுகள் உள்ளன. இதில் 270க்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெறும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்திய நேரப்படி இன்று மாலை 5.30க்கு வாக்குப்பதிவு தொடங்கும்.

News November 5, 2024

ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி இழப்பு

image

அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் உலக நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் காரணமாக பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்தது. அதன் காரணமாக ₹6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 941.88 புள்ளிகள் குறைந்து 78,782.24 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 23,995.35 புள்ளிகளுடன் முடிவுற்றது.

News November 5, 2024

இந்தியர்களுக்கு Offer அறிவித்த தாய்லாந்து

image

இந்தியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கான காலக்கெடுவை அந்நாட்டு அரசு காலவரையின்றி நீட்டித்துள்ளது. வரும் 11ஆம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 60 நாள்கள் தாய்லாந்தில் தங்கலாம். தேவைப்பட்டால் அங்குள்ள Immigration அலுவலகம் சென்று மேலும் 30 நாள்களுக்கு தங்கள் இருப்பை நீட்டித்து கொள்ளலாம்.

error: Content is protected !!