India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக இத்தனை ஆண்டுகளாக என்ன கொள்கையை கூறி வந்ததோ, அதே கொள்கையை தான் விஜய்யும் கூறுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். ஒரே கொள்கைக்கு இரு கட்சிகள் எதற்கு என்று கேள்வி எழுப்பிய அவர், விஜய் திமுகவில் இணைந்து விடலாம் என்றும் ஆலோசனை வழங்கினார். மேலும், திமுகவின் கொள்கையையே தொடர்ந்து பேசி வருவதால் விஜய்க்கு அரசியல் ரீதியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்க்கடவுள் முருகன் சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை செய்து வணங்கிய தலம் சென்னை குன்றத்தூர் முருகன் திருக்கோயிலாகும். திருப்போரூரில் இருந்து திருத்தணிக்கு தனது பயணத்தின்போது இம்மலையில் முருகப்பெருமான் தங்கியதாக ஸ்தல புராணம் கூறுகிறது. கொற்றவை மைந்தனுக்கு விரதமிருந்து, இக்கோயிலுக்கு சென்று அரச மரத்தில் தொட்டில் கட்டி பிராத்தனை செய்தால் குழந்தை செல்வம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
➤சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது. ➤சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர்: ஆடவர் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் சாம்பியன் பட்டம் வென்றார். ➤ISL கால்பந்து தொடர்: 42ஆவது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் FC அணியை 1-5 என்ற கோல் கணக்கில் சென்னை FC வீழ்த்தியது. ➤மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரின் 5ஆவது சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் வென்றார்.
சென்னையை அடுத்த மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்துடன் கூடிய சூட்கேஸை வைத்துவிட்டு தப்ப முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள் பெட்டியை அங்கிருந்த இருக்கையில் வைத்துவிட்டு தப்ப முயன்றபோது போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில், இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதும், ரமணி (65) என்ற மூதாட்டியை கொன்று சடலத்தை சூட்கேஸில் அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
*நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையில் தான் எப்போதும் தேர்தல் நடத்தப்படும். *மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 24.4 கோடி. *தேர்தலுக்கு முன்பாக வாக்கு செலுத்தியவர்கள் 7.5 கோடி. * வாக்குச்சீட்டுகள் ஆங்கிலம், சைனீஸ், ஸ்பானிஷ், கொரியன், பெங்காலி மொழிகளில் வழங்கப்படும். *மொத்தம் உள்ள எலக்ட்ரால் காலேஜ் வாக்குகள் -538. *வெற்றி பெற தேவையானது -270.
இன்று(நவ.5) ஐப்பசி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளை நாக சதுர்த்தியாக இந்துக்கள் அனுசரிக்கிறார்கள். இன்று நாகர் சிலைகளுக்குப் பாலாபிஷேகம் செய்தும், நாக தேவதைகளை வணங்கியும், புற்றுக்குப் பால் ஊற்றியும் வழிபாடு செய்தால், நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. சதுர்த்தி நாள் என்பதால், விநாயகப் பெருமானுக்கு அருகம்புல், கொழுக்கட்டை படைத்து வணங்கினால் சங்கடங்கள் நீங்கி, வளம் சேரும்.
பாதாம், முந்திரி என உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இவற்றை ஊறவைத்தும் சாப்பிடலாம். இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள பேரிச்சம் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். சியா, சூரியகாந்தி மற்றும் பூசணி விதைகளையும் உட்கொள்ளலாம். டீடாக்ஸ் தன்மை கொண்ட பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. தினமும் 1 வாழைப்பழம் சாப்பிடுவது பல பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.
போர் காரணமாக இந்தியா செல்ல வேண்டாம் என கரோலினின் பெற்றோர் கூறியுள்ளனர். இது அவர்களுக்கு இடையில் பிரிவை ஏற்படுத்தியது. பின்னர் ஜோன்ஸ் என்பவரை கரோலின் திருமணம் செய்து கொண்டார். ஆனால் டாடா இன்னும் திருமணம் செய்யாதது பற்றி தெரியவரவே Email-ல் அவரை தொடர்பு கொண்டார். இருவருக்கும் இடையே மீண்டும் நட்பு மலர்ந்தது. டாடாவின் 80ஆவது பிறந்தநாளுக்கு கரோலின் இந்தியா வந்ததும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரத்தன் டாடாவிற்கு காதலி இருந்ததும், இந்தியா – சீனா இடையிலான போரால் அவர்கள் திருமணம் நின்றதும், அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகமான Ratan Tata: A Life மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் படித்த போது, கரோலின் என்ற பெண்ணை டாடா காதலித்தார். பாட்டிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் 1962-ல் அவர் இந்தியா வந்துள்ளார். கரோலின் இந்தியா கிளம்ப நினைக்கையில் சீனப் போர் தொடங்கியுள்ளது.
சென்னையில் நேற்று பேட்டியளித்த H.ராஜா கூறியதாவது: *விஜய் கட்சியின் தீர்மானங்களை பார்க்கும் போது, பேசாமல் அவர் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என தோன்றுகிறது. *அஜித் கிடைக்கமாட்டாரா என திமுக முயற்சி செய்து வருகிறது. *Dravidian Stock இருக்கும் இடங்கள் எல்லாம் வடிகட்டிய முட்டாள்கள் இருக்கும் இடம். *ஈவேரா ஒரு காட்டுமிராண்டி. *திராவிட கட்சிகள் வளர்ந்ததே சினிமாவால் தான்.
Sorry, no posts matched your criteria.