News November 5, 2024

சென்னைக்கு வந்த இர்ஃபான்: பறந்தது அதிரடி நோட்டீஸ்!

image

யூடியூபர் இர்பான், தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக மருத்துவர் நிவேதிதாவுக்கு மருத்துவத் துறை அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இர்பானை ஆபரேஷன் தியேட்டருக்குள் எப்படி அனுமதித்தீர்கள்? உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று சென்னை வந்துள்ள இர்ஃபான் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார் என தெரிகிறது.

News November 5, 2024

விஜய்யை நினைத்து சீமானுக்கு அச்சம்: காங்கிரஸ்

image

விஜய்யைப் பார்த்து சீமானுக்கு பயம் வந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். விஜய் வருகை நாதக கட்சியின் எதிர்காலத்தை காலி செய்துவிடுமோ என சீமான் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் விஜய் பக்கம் சென்று விடுவார்களோ என்ற அச்சம் சீமானுக்கு இருப்பதாகவும், அதனால் தான் அவதூறாக பேசுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 5, 2024

தமிழ் சொல் அறிவோம்

image

➤Whatsapp – புலனம் ➤Youtube – வலையொளி ➤Instagram – படவரி ➤We Chat -அளாவி ➤Skype – காயலை ➤Bluetooth – ஊடலை ➤Wifi – அருகலை ➤Hotspot – பகிரலை ➤Broadband – ஆலலை ➤Online – இயங்கலை ➤Offline – முடக்கலை ➤Thumbdrive – விரலி ➤Hard disk – வன்தட்டு ➤GPS – தடங்காட்டி ➤Telegram – தொலைவரி ➤Messenger – பற்றியம் ➤CCTV – மறைகாணி ➤OCR – ஒளிஎழுத்துணரி ➤LED – ஒளிர்வி முனை ➤3D – முத்திரட்சி ➤2D – இருதிரட்சி.

News November 5, 2024

நவ.9 “கேம் சேஞ்சர்” டீசர்

image

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “கேம் சேஞ்சர்” படத்தின் டீசர் வரும் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிப்பதால், தமிழ் & தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு, ஜன.10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

Content Creators-க்கு Insta கொடுத்த புது அப்டேட்

image

நீங்க Insta Content Creator-ஆ? அதிகமான DM-களை படிக்க முடியாமல் திணறுகிறீர்களா? உங்களுக்காக புதிய அப்டேட் தந்துள்ளது இன்ஸ்டாகிராம். இனி Content Creators-கள் DMs வரும் மெசேஜ் ரெக்வஸ்ட்களை Recent, Most followers என்ற அடிப்படையில் பிரித்துப் பார்க்கலாம். மேலும், வெரிஃபைடு அக்கவுண்ட், பிசினஸ், பிற வகையினர் (அ) சப்ஸ்க்ரைபர் என ஃபில்டர் செய்யும் வசதியையும் இன்ஸ்டா வழங்கியுள்ளது.

News November 5, 2024

1,013 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

image

NLC நிறுவனத்தில் காலியாகவுள்ள 1,013 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.6) கடைசி நாளாகும். Trade Apprentice, Technician Apprentice, Degree Apprentice உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் https://www.nlcindia.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ITI, Diploma, D.Pharm & Any UG Degree. உதவித்தொகை: ₹8,766 – ₹12,524. கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News November 5, 2024

மதரஸாக்கள் இயங்கலாமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி

image

உ.பி.யில் மதரஸா சட்டத்தை அலகாபாத் ஐகோர்ட் கடந்த மார்ச்சில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, CJI சந்திரசூட் இன்று விசாரித்தார். அப்போது, “மதரஸா சட்டம், அரசியல் சாசனத்தின் எந்த விதிகளுக்கும் புறம்பானதாக இல்லை. எனவே, இச்சட்டத்தை ரத்து செய்யும் உத்தரவு நீக்கப்படுகிறது” என தீர்ப்பளித்தார். இதன் மூலம் உ.பி.யில் உள்ள 16,000 மதரஸாக்கள் தடையின்றி இயங்கும் சூழல் உருவாகியுள்ளது.

News November 5, 2024

விஜய் என் மகன்… நெல்லை மூதாட்டி

image

விஜய்யின் சினிமா வெற்றிக்கு முக்கிய காரணம் பக்கத்து வீட்டுப் பையனை போன்ற அவரின் தோற்றமே. தமிழகத்தில் பல பெண்களும் விஜய்யை தங்கள் மகனாக, அண்ணனாக பார்க்கிறார்கள். அப்படி தான் நெல்லை மன்னார்கோவிலை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டி, விஜய்யை செந்தூரப்பாண்டி படம் பார்த்ததிலிருந்தே தன் மகனாக நினைப்பதாகத் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்வராக அல்ல, பிரதமராக வர வேண்டும் என்றும் கூறினார்.

News November 5, 2024

ODI தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்

image

பெண்கள் ODI தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (654 புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்திற்கு வந்துள்ளார். தீப்தி சர்மா (538 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 19வது இடத்திற்கு வந்துள்ளார். ஸ்மிருதி மந்தனா (728 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தீப்தி சர்மா (378 புள்ளி) 4ஆவது இடத்தில் உள்ளார்.

News November 5, 2024

Recipe: நெத்திலி வடை செய்வது எப்படி?

image

நெத்திலி மீனை கழுவி, முள் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி, ப.மிளகாய், ரவை, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும். இக்கலவையை மிக்ஸியில் அரைத்து, வடைமாவு பதத்திற்கு பிசையவும். வாணலியில் தே.எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை வடைகளாக தட்டிப்போட்டு, இருபக்கமும் பொன்னிறமாக நன்கு வெந்ததும் எடுத்தால் சுவையான நெத்திலி வடை ரெடி.

error: Content is protected !!