News November 6, 2024

அரசியலில் இருந்து சரத் பவார் ஓய்வு?

image

இனிவரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என சரத் பவார் அறிவித்துள்ளார். தான் ஆட்சி அதிகாரத்தில் இல்லை எனவும், தனது மாநிலங்களவை பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் எஞ்சியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எந்த இடத்திலாவது தான் நிறுத்தித்தானே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்தியாவின் மூத்த அரசியல்வாதியின் இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News November 6, 2024

இனி சிம் கார்டு இல்லாமலேயே பேசலாம்..!

image

Direct to Device – D2D என்ற புதிய தொழில்நுட்ப சோதனையை BSNL வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் ஆடியோ, வீடியோ கால் பேச சிம்கார்டுகள் தேவைப்படாது. D2D என்பது ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோளுடன் இணைக்கும் தொழில்நுட்பமாகும். காடுகளில் சிக்கிக் கொண்டாலோ, இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டாலோ இந்த புதிய டெக்னாலஜி பேருதவியாக இருக்கும்.

News November 6, 2024

பிரதமர் பயப்படுகிறார்: ராகுல்

image

இந்தியாவில் உள்ள சாதி பாகுபாடு உலகிலேயே மிக மோசமானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டை 50%-க்கும் மேல் அதிகரிக்க முடியாமல் செயற்கையான தடையை உருவாக்கி வைத்துள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் அந்த தடையை தகர்ப்போம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். மேலும் நிறுவனங்கள், நீதித்துறை, ஊடகங்களில் எத்தனை BC, OBC, SC உள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள பிரதமர் பயப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 6, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 92 ▶குறள் : அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். ▶ விளக்க உரை: முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

News November 6, 2024

விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

image

Wikipedia-வில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தகவல்கள் ஒரு சார்பாக இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் வருவதாகவும், இதன் பக்கங்களை உருவாக்குவது, திருத்தம் செய்வது போன்ற பணியில் ஒரு சிறிய ஆசிரியர் குழு இருப்பதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விக்கிப்பீடியாவை இடைத் தொடர்பாளராக கருதாமல், ஒரு வெளியீட்டாளராக ஏன் கருதக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

News November 6, 2024

என் தந்தையும் ‘அமரன்’ தான்: SK

image

‘அமரன்’ படத்தில் நடிக்க முக்கிய காரணம் தனது தந்தைதான் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவர் ஒரு SP, நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் போலவே தன்னுடைய வாழ்க்கையிலும் நடந்ததாக SK கூறியுள்ளார். மேலும், 21 ஆண்டுகளாக தந்தையின் நினைவில் மட்டுமே வாழ்ந்து வந்த தனக்கு, இந்த படத்தின் மூலம் அவரை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்ததாக உருக்கமாக பேசியுள்ளார்.

News November 6, 2024

இஸ்ரேல் ராணுவ அமைச்சர் டிஸ்மிஸ்

image

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் அந்நாட்டு PM நெதன்யாகு டிஸ்மிஸ் செய்துள்ளார். ராணுவ விவகாரங்களை கையாள்வதில் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த இஸ்ரேல் காட்ஸ், ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். போர் மற்றும் இஸ்ரேல் நீதித்துறை அமைப்பை மாற்றும் திட்டங்களில் நெதன்யாகு- கேலண்ட் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது.

News November 6, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவ. 6 (ஐப்பசி 20) ▶புதன் ▶நல்ல நேரம்: 09:45 AM – 10:30 AM, 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶ எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பஞ்சமி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு ▶ பரிகாரம்: பால் ▶ நட்சத்திரம்: மூலம் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி.

News November 6, 2024

இதுதான் தமிழ் ராக்கர்ஸ் டெக்னிக்..!

image

கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகி ஸ்டீபன் ராஜ், தங்களது உத்திகளை வாக்குமூலம் அளித்துள்ளார். புதுப்படம் ரிலீசானதும், முதல் காட்சிக்கு 5 டிக்கெட்கள் முன்பதிவு செய்து, தியேட்டரின் நடுப்பகுதி சீட்களில் அமர்வார்களாம். துணிக்கு அடியில் கேமரா வைத்து ரெக்கார்ட் செய்வார்களாம். ஒரு ரெக்கார்டிங்கிற்கு ₹5,000 சம்பளம். இதற்காக கேரளா, கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களுக்கு கூட செல்வார்களாம்.

News November 6, 2024

IND வீரர்களுக்கு கில்கிறிஸ்ட் அறிவுரை

image

NZ உடனான தோல்வி இந்திய வீரர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இந்த தோல்வியின் தாக்கம் வீரர்களின் தோள்களில் ஏறி சவாரி செய்யும் எனவும், அவர்கள் தங்களை தாங்களே கடினமான கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இதிலிருந்து வீரர்கள் மீள்வதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!