News November 6, 2024

அதிமுக கூட்டணிக்கு துண்டு போடவில்லை: இ.கம்யூ

image

அதிமுக கூட்டணிக்கு துண்டு போடவில்லை என்று இ.கம்யூ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கூட்டணி வைக்கும் திட்டத்துடனேயே அதிமுகவை விமர்சிப்பதில்லையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தேர்தலில் விமர்சித்தோம். மற்ற நேரத்தில் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று பதில் கேள்வியெழுப்பினார். அதிமுக கூட்டணியில் இ.கம்யூ சேருமா? உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.

News November 6, 2024

படிக்கவே ஆர்வமில்லாத Gen-Z கிட்ஸ்…அதிர்ச்சி தகவல்

image

Android மோகத்தில் Gen-Z யுகத்தினர் மூழ்கி விட்ட நிலையில், புத்தகம் படிக்கும் பழக்கம் அறவே குறைந்துள்ளது. National Literacy Trust (NLT) அமைப்பு நடத்திய ஆய்வில் கிடைத்த 76,131 பதில்களின் அடிப்படையில், 5 முதல் 18 வயதுடையவர்களில் 34.6% பேர் மட்டுமே புத்தகம் படிக்க விரும்புகிறார்கள். இந்த ஆய்வு தகவல்கள் வயது, பாலினம், சமூக-பொருளாதார பின்னணி ஆகியவற்றின் அடிப்படையிலேயே சேகரிக்கப்பட்டது.

News November 6, 2024

அமெரிக்காவில் சாதனை படைத்த ‘புஷ்பா 2’

image

அமெரிக்காவில் ‘புஷ்பா 2’ படத்திற்கான 15,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையானதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் 15,000 டிக்கெட் முன்பதிவான முதல் இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் இப்படம் டிச.5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் சிறப்பு காட்சிக்கான புக்கிங் நேற்று தொடங்கியது.

News November 6, 2024

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

image

இலகுரக ஓட்டுநர் உரிமம் (LMV) வைத்திருப்பவர்கள், 7500 கிலோ எடைக்குள் இருக்கும் வாகனங்கள் ஓட்டத் தடையில்லை என்று SC தீர்ப்பளித்துள்ளது. மேற்சொன்ன வாகனங்களை ஓட்டிய LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள், அதிக விபத்துகள் ஏற்படுத்தியதாக ஆதாரங்கள் இல்லை என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. சிறிய ரக சரக்கு, போக்குவரத்து வாகனங்கள் இயக்குபவர்களுக்கு இத்தீர்ப்பு நிம்மதியளிக்கும்.

News November 6, 2024

JOB ALERT: தேசிய காப்பீடு நிறுவனத்தில் வேலை

image

தேசிய காப்பீடு நிறுவனம் (NICL) 500 காலி இடங்களுக்கு விண்ணப்பம் காேரியிருந்தது. உதவியாளர் நிலையிலான அந்தப் பதவிகளில், தமிழகத்தில் 35 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பப்பதிவு கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 11ஆம் தேதியே கடைசி நாளாகும். முதல்கட்ட ஆன்லைன் தேர்வு வரும் 30ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்வு டிச.28ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. SHARE IT.

News November 6, 2024

ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் ‘தக் லைஃப்’ படக்குழு!

image

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தின் சிறப்பு வீடியோ நாளை வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தாக வீடியோ வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சிம்பு, த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் நடிக்கும் புதிய படங்களின் அறிவிப்பும் நாளை வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

News November 6, 2024

JUST NOW: டிரம்ப் வெற்றிக்கு 23 வாக்குகளே தேவை

image

அமெரிக்க அதிபராக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் 270 பேரின் வாக்குகள் தேவை. இதுவரையிலான வாக்கு நிலவரப்படி, டிரம்புக்கு 247 வாக்குகள் கிடைத்துள்ளன. கமலா ஹாரிசுக்கு 210 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்கு எண்ணிக்கையில் 2 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும், ஆரம்பம் முதல் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அதிபராக தேர்வு செய்யப்பட அவருக்கு இன்னும் 23 வாக்குகள் மட்டுமே தேவையாகும்.

News November 6, 2024

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…

image

SBI வாடிக்கையாளர்களை குறிவைத்து நடக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில், ரிவார்ட் பாயிண்ட்ஸ் பெயரில் புதிய மோசடி நடக்கிறது. SBI ரிவார்ட் பாயிண்ட்ஸை பயன்படுத்த இன்றே கடைசி தேதி என மோசடியாளர்கள் SMS, வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்புகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற தகவல்களை SBI அனுப்புவதில்லை எனவும், அதுபோல் வரும் link-ஐ கிளிக் செய்யாதீர் என்றும் SBI கேட்டுக்கொண்டுள்ளது.

News November 6, 2024

இதுதான் திராவிட மாடலா..?: சீமான்

image

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது ஏன்? என திமுக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், 3,000க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகக் கண்டித்துள்ளார். மேலும், தற்காலிக மருத்துவர், தற்காலிக செவிலியர் என அரசு ஊழியர்களைத் தற்காலிகமாக்குவதுதான் திராவிட மாடலா? எனவும் விமர்சித்துள்ளார்.

News November 6, 2024

கஸ்தூரிக்கு சம்மன் அனுப்ப திட்டம்

image

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கஸ்தூரிக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவெடுத்துள்ளது. பிராமணர்களுக்குப் பாதுகாப்பு கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய கஸ்தூரி, தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசியது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரை நேரில் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!