News July 9, 2025

பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர்

image

அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 21-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் 31-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 4 முதல் 9-ம் தேதி வரை மாணவர்கள், கல்லூரியைத் தேர்வு செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News July 9, 2025

இந்திய கடற்படையில் 1,040 காலியிடங்கள்

image

இந்திய கடற்படையின் பல்வேறு துறைகளில் உள்ள Group-B மற்றும் C பதவிகளில் 1,040 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இந்த மாதம் 18-ம் தேதி கடைசி நாளாகும். SC, ST, PH மற்றும் பெண்கள் தவிர்த்து மற்றவர்கள் ₹295 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். முழு விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

News July 9, 2025

நெகட்டிவ் ரிவ்யூ வர காரணம் என்ன? இயக்குநர் ஓபன் டாக்

image

நல்ல திரைப்படங்களுக்கு கூட நெகட்டிவ் ரிவ்யூ வருவது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘மெய்யழகன்’ படத்திற்குகூட இந்த நிலை வந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர்களிடம் பணம்பெறும் நோக்கத்துடன் 90% ரிவ்யூவர்ஸ் செயல்படுவதாக ‘மெய்யழகன்’ இயக்குநர் பிரேம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் சினிமா நெகட்டிவ் ரிவ்யூவால் பெரிய பிரச்சனையை சந்தித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது

image

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜகன் மோகன் ராவை சிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. ஐபிஎல்-2025 போட்டி டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஐபிஎல் போட்டியின்போது டிக்கெட் ஒதுக்கீடு தொடர்பாக சன்ரைசர்ஸ் நிர்வாகத்திற்கு அவர் மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டது.

News July 9, 2025

நாடு முழுவதும் நடந்த ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

image

நாடு முழுவதும் இன்று 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போக்குவரத்து, பள்ளிகள், வங்கிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டதால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. தெலங்கானாவில் பைக் பேரணி, கேரளாவில் பேருந்தை மறித்து போராட்டம், மும்பையில் வங்கி முன் போராட்டம், கர்நாடகாவில் பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

News July 9, 2025

PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

image

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

News July 9, 2025

அடுத்த தலைமுறைக்கான திட்டங்கள்: உதயநிதி பெருமிதம்

image

அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு CM திட்டங்களை கொண்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் ₹40 கோடியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல் அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயலிழந்து காணப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர் திமுக ஆட்சியில் அவை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News July 9, 2025

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? இதை கவனிங்க

image

30 வயது என்பது நடுத்தர வயதை நாம் நெருங்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் மைல்கல். இந்த வயதில் ஆரோக்கியம் பராமரிக்க: ➤கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். ➤வேலைபளு காரணமாக உணவை தவிர்க்க கூடாது. ➤தினமும் 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம் ➤தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி ➤மது, புகைப்பிடித்தல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ➤குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேச வேண்டும். இது புத்துணர்ச்சியை கொடுக்கும்.

News July 9, 2025

வீட்டை காலி செய்ய வந்த அதிகாரி.. இறந்து கிடந்த நடிகை

image

பாக்., <<17004189>>நடிகை Humaira Asghar <<>>மரணம் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. வாடகை வீட்டுக்கு ஓராண்டாக பணம் கொடுக்காததால் உரிமையாளர் வழக்குத் தொடுத்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, நடிகையை வீட்டில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் வந்தபோது துர்நாற்றம் வீசவே, கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவர் சடலமாக கிடந்தார். 15 நாளுக்கு முன்பு இறந்தது தெரிய வந்தது.

News July 9, 2025

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ திடீர் ராஜினாமா

image

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நேரு. அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடாவிடம் வழங்கியுள்ளார்.

error: Content is protected !!