India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூரசம்ஹாரம் முடிந்து விட்டதால், இனி வீட்டில் ஷட்கோண கோலத்தில் 6 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். அதாவது, “ச,ர,வ,ண,ப,வ” என்ற 6 எழுத்திலும் தீபம் வைத்து வழிபட வேண்டும். அதேபோல் அகல் விளக்கில், நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்தக் கூடாது. ஒருமணி நேரம் விளக்கு நன்றாக எரியவிட வேண்டும். இதனால், கடன் தொல்லை நீங்கி, வீட்டில் பணம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
மேற்கு ஆசியாவில் நிகழும் மோதல்களுக்கு தீர்வுகாண இந்தியாவின் பங்கு முக்கியமானது என இஸ்ரேல் தூதர் ருவென் அசார் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மேற்கு ஆசியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம் எனக் கூறிய அவர், இதற்கு இந்தியாவின் உதவி முக்கியம் என்றார். இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு-ஈரான் இடையே மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நவ.28இல் தமிழகம் திரும்புகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆக.28ஆம் தேதி லண்டன் சென்றார். அரசியல் படிப்பை முடித்துவிட்ட நிலையில் இம்மாத இறுதியில் நாடு திரும்புகிறார். அதனைத் தொடர்ந்து டிச.1இல் கோவையில் நடைபெறவுள்ள பாஜக நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார்.
நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, நடைபெறவுள்ள BGT தொடரில் மிகவும் சிறப்பாக செயல்படுவார் என ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், கோலியின் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த காலங்களில் ஒன்று இனி வரவுள்ளதாக கூறினார். கோலி 2027-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து விளையாடுவார் ஆரூடம் கூறியுள்ளார். இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்றார்.
கோவை கள ஆய்வுப்பணிகள் மன நிறைவாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆய்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மேற்கு மண்டல திமுகவில் ஓட்டை விழுந்துவிட்டது போல அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுவது தவறு என்றும், திமுகவின் கோட்டையாக மேற்கு மண்டலம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2026இல் கொங்கு மண்டலத்தில் மீண்டும் பெரிய வெற்றியை திமுக பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்றைய மனித வாழ்வில் Smart Phone இல்லாத சூழலை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால், அத்தகைய ஃபோனால் தான் நம் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அடிக்கடி நெகடிவ் செய்திகள் பார்க்கும்போது, உடலில் Cortisol அளவு அதிகரிக்கிறது. இதனால் ஏற்படும் ரசாயன மாற்றம் இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என UK BioBank ஆய்வில் தெரியவந்துள்ளது.
தெலங்கானா அரசிடம் CM ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு இம்மாத இறுதியில் முடிகிறது. இதனை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஸ்டாலினின் முகமூடியை ராகுலும், ரேவந்த் ரெட்டியும் கழற்றியுள்ளனர் என்றார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது CM ஸ்டாலின் கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Bucket List என்பதற்கும் Wish List என்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இறப்பதற்குள் (பயணம்) என்னென்ன செய்ய வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களோ அச்செயல்களின் பட்டியல்தான் Bucket List. பொதுவாக ஒருபோதும் நடக்க சான்ஸே இல்லை எனும்படியான செயல்கள் இப்பட்டியலில் இடம் பெறுவதில்லை. Wish List என்பது வாங்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக எண்ணுகின்றவற்றின் (அதற்குப் பெரும் செலவு பிடிக்கும்) பட்டியலாகும்.
சூரியனைப் போற்றி வணங்கும் முக்கிய பண்டிகையான ‘சத் பூஜை’ வட மாநிலங்களில் நவ.5 அன்று தொடங்கியது. 3ஆம் நாளான இன்று ‘சந்தியா அர்க்யா’ எனப்படும் மாலை நேரப் பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியன் அஸ்தமனம் ஆகும்போது, தண்ணீருக்குள் இறங்கி வழிபடுவர். அந்த வகையில் சென்னையில் உள்ள வடமாநிலத்தவர்கள் சிலர் மெரினாவில் படையல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பானங்களுக்கு அச்சிடப்பட்ட பில் வழங்கும் நடைமுறை 2 வாரங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அரக்கோணம், ராமநாதபுரத்தில் இந்த நடைமுறை டெஸ்ட்டிங்கில் இருக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து அமல்படுத்தப்படவுள்ளது. டாஸ்மாக்கில் இனி கூடுதலாக பணம் வசூலிக்க முடியாது என்பதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.