India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமாவளவனும், ஜவாஹிருல்லாவும் தேசத்துரோகிகள் என எச்.ராஜா விமர்சித்துள்ளார். ‘அமரன்’ திரைப்படத்தை விமர்சிப்பதாக கூறி தேசத்துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நாட்டை நேசிப்பவர்கள் இவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இவர்களை போன்றவர்களை அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும் எனவும், திராவிட கட்சிகள் சாதி, மொழி வெறியர்கள் எனவும் சாடியுள்ளார்.
MEA ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா அரசு தடைவிதித்தற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கனடாவில் அரசியல் ஆதரவு உள்ளதாக ஜெய்சங்கர் பேசியிருந்தார். அதனால் அந்த ஊடகத்தின் சமூக வலைதள பக்கத்திற்கு கனடா அரசு தடை விதித்தது. கனடாவின் செயல்பாடுகளை வைத்தே ஜெய்சங்கர் கூற்றின் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ளலாம் என இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது. SHARE IT.
IND vs SA இடையிலான முதல் T20 போட்டி இன்று இரவு 8.30க்கு தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர், 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளனர். பாண்டியா, அக்சர் படேல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். IPL மெகா ஏலம் வரவுள்ளதால், இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
காவல்துறை அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளதா என கே.பாலகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஜனநாயக ரீதியில் நடக்கும் போராட்டங்களுக்கு கூட அனுமதி கொடுக்க மறுப்பதாகவும், சமூக விரோத செயல்களை அடக்குகிறோம் என்ற பெயரில் என்கவுன்டர் செய்வது மனித உரிமைகளை மீறுகிற செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எல்லைமீறி செயல்படும் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
*பீட்ரூட்டை ஜூஸ் செய்து தினமும் அருந்தி வர அல்சர் பிரச்னை சரியாகும்.
*வாழைத்தண்டை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.
*பாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின், கண் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.
*ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நல்ல மாற்றம் ஏற்படும்.
தோனிக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து வியந்து போனதாக ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தெரிவித்துள்ளார். DC-யின் ஹோம் கிரவுண்டில் CSK-க்கு எதிராக ஆடிய போது, மைதானத்தில் எங்கு பார்த்தாலும் தோனியின் ஜெர்ஸி தான் தென்பட்டதாகவும், தோனி சிக்ஸ் அடிக்கும் போதெல்லாம் கோஷம் விண்ணைப் பொளந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒருவருக்கு இவ்வளவு ஆடியன்ஸ் இருப்பதை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
ஜக்கி வாசுதேவுக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜக்கி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வாதிட்டும், தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
‘அமரன்’ திரைப்படம் காஷ்மீர் மக்களின் வாழ்வியலையும், வாழ்க்கை சூழலையும், அங்குள்ள அரசியலையும் பதிவு செய்ய தவறிவிட்டதாக இயக்குனர் வசந்தபாலன் விமர்சித்துள்ளார். வழக்கமான தீவிரவாத மற்றும் ராணுவ படமாகவே இருக்கும் என நினைத்து முதலில் பார்க்காமல் விட்டதாகவும், ஆனால் நல்ல விமர்சனங்கள் வந்ததால் படம் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் SK கெரியரில் முக்கியமான படமாக இது அமைந்துள்ளது.
*மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம். *என்னால் ஒரு கதவு வழியாகச் செல்ல முடியாவிட்டால், வேறொரு கதவு வழியாகச் செல்வேன், அல்லது ஒரு கதவை உருவாக்குவேன். *ஒரு பெண்னின் இயல்பில் மிகப்பெரிய மாற்றங்கள் காதலால் ஏற்படுகின்றன, ஒரு ஆணின் இயல்பில் மிகப்பெரிய மாற்றங்கள் இலட்சியத்தால் ஏற்படுகின்றன. *இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுவதாக சொல்கிறோம்.
Sorry, no posts matched your criteria.