News November 8, 2024

கமலா ஹாரிசுக்கு ராகுல் கடிதம்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கமலா ஹாரிஸூக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தலில் துடிப்புடன் போட்டியிட்டதற்கு வாழ்த்துகள். பைடன் நிர்வாகத்தின்கீழ் இந்தியாவும் அமெரிக்காவும் உலகளாவிய முக்கிய பிரச்னைகளில் தங்களது ஒத்துழைப்பை அதிகரித்துள்ளன. ஜனநாயக விழுமியங்களுக்காக பகிரப்பட்ட நமது அர்ப்பணிப்பு, இருநாடுகளின் நட்பை வழிநடத்தும் என்றும் கூறியுள்ளார்.

News November 8, 2024

கூட்டணி குறித்து திருமாவளவன் புதிய அறிக்கை!

image

2026 சட்டமன்றத்தேர்தல் கூட்டணி தொடர்பாக VCK தலைவர் திருமாவளவன் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம். திமுக கூட்டணியை சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News November 8, 2024

ரிட் மாண்டமஸ் என்றால் என்ன?

image

மாண்டமஸ் என்பதற்கு தமிழில் ‘நாங்கள் கட்டளையிடுகிறோம்’ என்று பொருள். கடமையைச் செய்ய மறுக்கும் (அ) தவறிய அரசாங்கம், அரசு அதிகாரிகள், கீழமை நீதிமன்றங்கள், ஆணையங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோருக்கு கட்டளை ஆணை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யும் மனு Writ of Mandamus எனப்படுகிறது. உயர் நீதிமன்றம் (அ) உச்ச நீதிமன்றத்தில் ரிட் மாண்டமஸ் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

News November 8, 2024

விசிகவை மனதில் வைத்து அன்புமணி பேட்டி?

image

2026 கூட்டணி அரசில் பாமக அங்கம் வகிக்கும் என விசிகவை மனதில் வைத்தே அன்புமணி கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, தவெக (அ) அதிமுக கூட்டணியில் சேரக்கூடும் என சொல்லப்படுகிறது. அப்போது விசிக இல்லாத திமுக (அ) தவெக (அ) அதிமுக கூட்டணியில் சேர்ந்து அரசில் அங்கம் வகிக்கும் திட்டத்துடன் அன்புமணி இப்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.

News November 8, 2024

உடனே விண்ணப்பிங்க: NMDCஇல் வேலைவாய்ப்பு

image

மத்திய அரசின் தேசிய கனிமவள வளர்ச்சி நிறுவனத்தில் (NMDC) 153 காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மைனிங் 56, எலெக்ட்ரிகல் 44 இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு, nmdc@jobapply.in இணையதளத்தில் அக்.21 முதல் நடைபெறுகிறது. இதற்கு நாளை மறுநாள் இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News November 8, 2024

RCEP கூட்டமைப்பில் இந்தியா இணைய வேண்டும்!

image

சீனாவின் ஆதரவோடு இயங்கி வரும் ஆசியா & பசிபிக் நாடுகளின் வர்த்தக கூட்டமைப்புகளில் இந்தியா இணைய வேண்டும் என நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதில் இணைவதால், இந்திய உற்பத்தித்துறை வலுப்பெறும் எனக் கூறிய அவர், நாட்டின் ஏற்றுமதியில் 40% பங்கு வகிக்கும் MSME நிறுவனங்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்றார். உள்நாட்டு வணிகம் பாதிக்கப்படும் என்பதால் முன்பு இந்தியா, RCEPஇல் இணைய மறுத்தது.

News November 8, 2024

விஜய் படத்தில் நடிக்க சத்யராஜ் மறுப்பு?

image

விஜய்யின் புதிய படத்தில் நடிக்க சத்யராஜ் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் தலைவா, மெர்சல் படங்களில் சத்யராஜ் ஏற்கெனவே நடித்துள்ளார். ஆதலால் புதிய படமான “தளபதி-69” இல் நடிக்க சத்யராஜை படக்குழு அணுகியுள்ளது. ஆனால், தவெக கட்சியை ஆரம்பித்து அரசியல்வாதியாக விஜய் மாறியதை சுட்டிக்காட்டி, அவருடன் கருத்து வேறுபாடு இருப்பதால் நடிக்க முடியாதென சத்யராஜ் கூறி விட்டதாக கூறப்படுகிறது.

News November 8, 2024

GREAT: பாலைவனத்தை பசுஞ்சோலையாக மாற்றிய நபர்

image

சாதாரண நிலத்தில் செடி, கொடிகளை வளர்ப்பது இயல்புதான். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத பாலைவனத்தில் செடிகளை நட்டு மரமாக வளர்ப்பது என்பது மிகக் கடினமாகும். ராஜஸ்தானின் எகல்கோரி கிராமத்தை சேர்ந்த 80 வயதான ரணராம் பிஸ்னோய் என்பவர் பாலைவனத்தில் 10 ஏக்கர் நிலத்தில் 50,000 மரங்களை இதுபோல வளர்த்துள்ளார். ட்யூப் மூலம் தண்ணீர் எடுத்து சென்று விட்டுள்ளார். இதனால் ட்ரீ மேன் என அழைக்கப்படுகிறார்.

News November 8, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் மிகப் பழமையான நாடு எது? 2) BDS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார்? 4) ‘Slumdog Millionaire’ படம் எத்தனை ஆஸ்கார்களை வென்றது? 5) ஆமைக்கு எத்தனை பற்கள் உள்ளன? 6) மின்னோட்ட வலிமையை அளக்க உதவும் கருவி எது? 7) தமிழில் உள்ள வல்லினம் எழுத்துக்கள் எவை? 8) Ichthyology என்றால் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 8, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹680 உயர்வு

image

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹1,320 குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹85 உயர்ந்து ஒரு கிராம் ₹7,285க்கும், சவரனுக்கு ₹680 உயர்ந்து ஒரு சவரன் ₹58,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், சில்லறை வர்த்தகத்தில் கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ஒரு கிராம் ₹103க்கும், கிலோவுக்கு ₹1,03,000க்கும் விற்கப்படுகிறது.

error: Content is protected !!