News November 8, 2024

நிலம் வழங்கியவர்களை சந்திக்கும் விஜய்

image

மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களை கௌரவிக்க TVK தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27இல் விக்கிரவாண்டியில் TVK மாநாடு நடைபெற்றது. மாநாட்டு திடல் அமைக்க 80 ஏக்கர் மற்றும் வாகனங்கள் நிறுத்த 150 ஏக்கர் நிலத்தை அப்பகுதி விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வழங்கினர். இவர்களை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் நேரில் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

News November 8, 2024

ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள்!

image

பங்குச் சந்தையில் ₹5 லட்சத்தை, ‘Fundamental Analysis’ முறைப்படி முதலீடு செய்தால், மாதம் ₹50,000 வரை சம்பாதிக்கலாம் என இணையத்தில் விளம்பரங்கள் வருகின்றன. இந்த ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாமென வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதர முதலீட்டு இனங்களை விட, பங்குச்சந்தை சற்றே கூடுதல் வருவாய் தரக்கூடும் என்பது உண்மைதான். ஆனால், FA முறையில் இன்றைக்கு அல்ல, என்றைக்குமே அதீத வருவாய்க்கு சாத்தியம் இல்லை.

News November 8, 2024

DANGER: இளைஞர்களே.. அடிக்கடி இதை செக் பண்ணுங்க!

image

இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை தாக்கி வந்த பிராஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer), தற்போது இளைஞர்களையும் அதிக அளவில் தாக்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்றில் ஷாக் தகவல் வெளியாகியுள்ளது. ஃபாஸ்ட் புட், உடற்பயிற்சியின்மை, இரவில் தூக்கமின்மை போன்ற காரணங்களால் இளைஞர்களிடம் பிராஸ்டேட் கேன்சர் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி பிராஸ்டேட்டை செக் செய்யுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News November 8, 2024

தவெகவுடன் கூட்டணி: டிடிவி தினகரன் பதில்

image

தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி என்ற யூகத்திற்கு பதில் கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2026இல் அக்கட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும் என்றும் கூறினார்.

News November 8, 2024

குழந்தைகளின் கற்றல் திறனை பாதிக்கும் காற்று மாசு?

image

காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண் துகள்களால் குழந்தைகளின் கற்றல் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 8,600 குழந்தைகளிடம் (9-11 வயது) நடத்திய ஆய்வில், காற்றில் உள்ள 15 ரசாயனங்களில் அம்மோனியம் நைட்ரேட் குழந்தைகளிடையே இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News November 8, 2024

CJI சந்திரசூட் அளித்த 5 சூடான தீர்ப்புகள்..!

image

சுப்ரீம் கோர்ட் CJI-ஆகவும், அரசியல் சாசன அமர்வு நீதிபதியாகவும் சந்திரசூட் வழங்கிய டாப் 5 தீர்ப்புகள்: 1) ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும் சட்டப்பிரிவை நீக்கியது. 2) சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற விதியை நீக்கியது. 3) தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு. 4) ஆளுநர்களை விட மாநில அரசுக்கே அதிகாரம் அதிகம் என்ற தீர்ப்பு. 5) அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி.

News November 8, 2024

ஆவின் பால் விலை உயராது: அமைச்சர்

image

பால் ஊக்கத்தொகை குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஆவின் மையங்களில் வேறு பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்த அவர், ஆவின் சேவை அடிப்படையில் இயங்கி வருவதால், விற்பனை விலை உயர வாய்ப்பில்லை எனவும் உறுதிப்பட கூறியுள்ளார். முன்னதாக, தமிழகம் முழுவதும் ஆரோக்கியா (தனியார்) பால் விலை உயர்ந்ததால், ஆவின் பால் விலையும் உயரும் என கூறப்பட்டது.

News November 8, 2024

எனது மகன் சாதித்தது போல் மகிழ்ச்சி: ஷங்கர்

image

இயக்குநர் அட்லீ சாதித்தது, தனது மகன் சாதித்ததை போல் பெருமையாக உள்ளது என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். ஜவான் படத்தில் அட்லீயின் மெனக்கெடல், ஈடுபாடு, உழைப்பு ஆகியவை தன்னை பிரம்மிக்க வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், தன்னுடன் துணை இயக்குநராக இருந்தவர் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். மேலும், இதுபோன்ற வெற்றிகள் சாதாரணமாக கிடைத்துவிடாது எனவும் புகழாரம் சூட்டினார்.

News November 8, 2024

இந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?

image

நடனத்தில் அசத்தும் இந்த நடிகை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். தன்னைவிட, இவர் 16 வயது மூத்த நடிகரை கடந்த 2019ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021இல் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இன்னுமா இந்த நடிகை யாருனு தெரியலயா? கமெண்ட்ஸ்ல பாருங்க.

News November 8, 2024

விஜய் பேச்சை கடந்து போயிருக்கலாம்: திருமா

image

விஜய்யின் உரையை கண்டும் காணாமல் கடந்து போயிருக்கலாம் என்று திருமா கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்களை எப்படி கடந்து போவது. நம்மைக் குறிவைத்து அரசியல் சதிவலைகளைப் பின்னுகின்றனர். நம் மீது சந்தேகத்தை எழுப்பி நம்பகத்தன்மையை நொறுக்க முயற்சி நடக்கிறது எனக் கூறிய அவர், புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு எந்த தேவையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!