India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1) உலகின் மிகப் பழமையான நகரம் எது? 2) DNT என்பது யாரை குறிக்கும்? 3) இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி யார்? 4) தாவர வளர்ச்சியை அளவிட பயன்படும் கருவி எது? 5) Pomology என்றால் என்ன? 6) இறாலின் ரத்த நிறம் என்ன? 7) Furniture என்பதன் தமிழ் சொல் என்ன? 8) 5 கண்கள் கொண்ட பறக்கும் உயிரினம் எது? 9) சோடியம் என்பதன் வேதியியல் குறியீடு என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
பிரியங்கா சோப்ரா தான் தனது ரோல் மாடல் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘பிரியங்கா சோப்ரா பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. அவர் பெண்கள் பெரிதாக சிந்திக்க கற்றுக் கொடுக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸ் மூலம் இத்தாலிய நடிகை மெடில்டா, பிரியங்கா சோப்ரா போன்று உலகளவில் தலைசிறந்து விளங்கும் பெண்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது’ எனக் கூறியுள்ளார்.
ஐப்பசி திருவோணம் நட்சத்திரம் மிகவும் புனிதமானது என்று ஆன்மிக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அந்த நாள்தான் இன்று. திருவோண நட்சத்திரம், இறைவன் வெங்கடாசலபதி நட்சத்திரம். இந்த நாளில் காலையில் தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினால், நமக்கு தெரியாமல் செய்த பாவம் கூட நீங்கும். கோடிக்கணக்கான லிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. நேற்று கிராம் தங்கம் ரூ.7,285க்கும், சவரன் தங்கம் ரூ. 58,280க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.7,275க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58,200க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT.
அடுப்பில் சட்டி வைத்து நெய் ஊற்றி, வரகரிசி (250g) லேசாக வறுத்து எடுக்கவும். அதில் நீரூற்றி நன்கு வேக வைக்கவும். அத்துடன் குக்கரில் மலர வேக வைத்த பாசி பருப்பை உப்பு சேர்த்து கிளறவும். மற்றொரு சட்டியில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி, இடித்த மிளகு, சீரகம், முந்திரி சேர்ந்து பொன்னிறமாக வறுத்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பை கலவையுடன் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான வரகரிசி பொங்கல் ரெடி.
ஆளுநர் ஆர்.என். ரவியின் மதுரை, ராமநாதபுர நிகழ்ச்சிகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அந்த 2 நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் தெரியவில்லை.
நடப்பு மகர விளக்கு, மண்டல சீசனில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியபோது, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 70,000 பக்தர்கள் மட்டுமே சபரிமலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் உடனடி தரிசன அடிப்படையில் 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஐ.டி.பி.ஐ. வங்கியில் காலியாக உள்ள 1,000 இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. எக்சிகியூட்டிவ் சேல்ஸ் அண்ட் ஆபரேஷன் (இ.எஸ்.ஓ) நிலையிலான பதவிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 16ஆம் தேதி கடைசி நாளாகும். வேலையில் சேர விரும்புவோர், https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் நவ.22ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது. அஸ்வின் இசையில் ஆண்ட்ரியா குரலில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரட்டை அர்த்தம் உள்ள ‘போலீஸ் காரனை கட்டிகிட்டா’ பாடலை பலர் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் ராணுவ அதிகாரிகளை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ’விஜய் 69’படத்தின் ஷூட்டிங் சென்னை ஆபீஸர் அகாடமியில் நடைபெற்றது. அப்போது அங்கு இருக்கும் அதிகாரிகள் தங்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தனர். உடனே ஓகே சொன்ன விஜய் கிட்டத்தட்ட நூறு அதிகாரிகளின் குடும்பத்துடன் உரையாடி சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.