India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடான ரஷ்யாவில் வெறும் 14 கோடி தான் மக்கள்தொகை. இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக பாலியல் அமைச்சகத்தை (Sex Ministry) கொண்டு வர ரஷ்ய அரசு பரிசீலிக்கிறது. கணவன் – மனைவி இடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக இரவு 10 மணி முதல் 2 மணி வரை இன்டர்நெட் சேவையை ரத்து செய்யவும், ஆண் – பெண் DATING-க்கு பணம் வழங்கவும் அரசு பரிசீலிப்பதாக தெரிகிறது.
திரைபிரபலங்கள் பலரும் தங்களின் பெயருடன் சாதி அடையாளத்தையும் போடுவது வழக்கம். ஆனால், முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் பலர் சாதி பெயரை பயன்படுத்துவதில்லை. தற்போது அப்படி தான் நடிகை நித்யா மேனன் (menon) என இருந்த தன்னுடைய பெயரை நித்யா மெனென் (menen) என மாற்றியுள்ளார். இனி நித்யா மேனன் என யார் அழைத்தாலும், அது spelling mistake. அது என்னுடைய பெயர் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் மதியம் 1.30 மணியளவில் பூமியின் 5 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவாகியுள்ளது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு, வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்ததாகவும், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
விஜய் – சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர். தவெக மாநாட்டில் தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் எனக் கூறியதால், விஜய்யை சீமான் தொடர்ந்து அட்டாக் செய்தார். இதனால், இரு கட்சியினருக்கும் சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் வெடித்தது. இந்நிலையில், அன்பு சகோதரர் எனக் குறிப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய்க்கு, தம்பி எனக் குறிப்பிட்டு சீமான் நன்றி கூறியுள்ளார்.
தமிழக போலீஸாரின் நடவடிக்கை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் 1997-ம் ஆண்டு 60 ரூபாயை வழிப்பறி செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்ததுமே அவர் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், நிலுவை வழக்குகளை முடிப்பதற்காக, காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட தனிப்படை, நேற்று அவரை கைது செய்தது. 28 வயதில் குற்றத்தில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்துக்கு இப்போது வயது 55.
பண்ருட்டியில் ஒன்றரை வயது குழந்தை யாழினியை குளிப்பாட்டுவதற்காக அதன் தாயார் பாத்ரூமுக்கு கொண்டு சென்றுள்ளார். சோப்பு எடுப்பதற்காக அவர் சென்ற நேரத்தில், கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீரை எடுத்து, குழந்தை தன் மீது ஊற்றியுள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தைகள் நடக்க தொடங்கியதுமே, மிக ஜாக்கிரதையாக பெற்றோர் கண்காணிக்க வேண்டும். சிறு அலட்சியமும் ஆபத்தாகும்!
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, கடலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஹைதராபாத்தில் 27 அடுக்குமாடிகளைக் கொண்ட டிரம்ப் டவர்ஸ் கட்டப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், அரசியலைக் கடந்து மாபெரும் தொழிலதிபர் ஆவார். ஹைதராபாத்தில் மஞ்சுரியா குழுமத்துடன் இணைந்து மாதாப்பூர், கானம்மேட் பகுதிகளில் இரு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 4 BHK, 5 BHK குடியிருப்புகள் தலா ரூ.5.5 கோடி என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் போதைப்பொருள் கடத்தியதாகப் பிரபல சீரியல் (சுந்தரி) நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து 5 கிராம் மெத்தபெட்டைமைன் போதைப்பொருளுடன் சிக்கியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் போதைப்பொருளை எங்கிருந்து வாங்கினார், வேறு யாருக்கேனும் விற்பனை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக இருக்கும் வரை, மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக ராகுல் காந்தி கூறுகிறார். அப்படி கொடுத்தால் OBC, SC, ST மக்களுக்கான இடஒதுக்கீடு தான் பாதிக்கப்படும். இது அரசியலமைப்புக்கு எதிரானது. காங்., “anti-OBC” ஆகவுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.