News November 10, 2024

RAIN ALERT: 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை முதல் 15ஆம் தேதி வரை வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை நாகை, மயிலாடுதுறை, நாளை மறுதினம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. 13ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

News November 10, 2024

ஆங்கிலம் அறிவோம்: Five Finger Discount என்றால் என்ன?

image

Five Finger Discount என்பதற்கும், தள்ளுபடிக்கும் தொடர்பில்லை. பணக்காரராக இருந்தாலும்கூடச் சிலர் இதுபோன்ற கடைகளுக்குச் செல்லும்போது யாருக்கும் தெரியாமல் ஏதாவது ஒரு பொருளைத் திருடுவர். இதனை Five Finger Discount எனலாம். பொதுவாக இதுபோன்ற திருட்டுகளை Shoplifting எனக் குறிப்பிடலாம். இதுபோன்ற மனநிலையை kleptomania என்பார்கள். கிரேக்க மொழியில் kleptos என்றால் திருடுதல். Mania என்றால் மனநலப் பிறழ்வு.

News November 10, 2024

டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

image

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது இரங்கல் அறிக்கையில், மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைவு செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார். மேலும், தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை குணச்சித்திரப் பத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 10, 2024

பங்குச் சந்தை வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா?

image

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பங்குகள் மூலம் கிடைக்கும் Dividend வருமானம் இதர வருமானமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பங்குகளை வாங்கி 12 மாதங்களுக்குள் விற்றால் STCG லாபத்துக்கு 20% வரியும், அந்த காலத்திற்கு மேல் விற்றால் LTCG லாபத்துக்கு 12.5% வரியும் (நிதியாண்டில் ₹1.25 லட்சம் வரைக்கும் வரியில்லை) செலுத்த வேண்டும். முதலீட்டாளர் தமது IT வரி வரம்பிற்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டும்.

News November 10, 2024

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் நிவின் பாலி

image

‘புறநானூறு’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நிவின் பாலி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

News November 10, 2024

BREAKING: எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் காலமானார்

image

பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் (66) இன்று காலமானார். மதுரையில் உள்ள இல்லத்தில் குளியலறையில் அவர் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மர்ம தேசம், விடாது கருப்பு போன்ற மர்ம நாவல்கள், சிறுகதைகள், படங்களுக்கு வசனங்கள் எழுதியவர் இந்திரா செளந்தர ராஜன். அவரின் மறைவுக்கு எழுத்தாளர்கள், அவருடைய வாசகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News November 10, 2024

கரப்பான் போல ஊர்ந்தவர்.. இபிஎஸ்க்கு CM பதிலடி

image

பதவிக்காக கரப்பான்பூச்சி போல இபிஎஸ் ஊர்ந்ததாக <<14574892>>CM ஸ்டாலின் <<>>குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசு திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை தொடர்ந்து ஸ்டாலின் சூட்டுவதாக இபிஎஸ் விமர்சிக்கிறார். இதற்கு விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். கருணாநிதி புகழ் எட்டுத் திக்கும் பரவி இருப்பதாகவும், அவர் பெயரை வைக்காமல், இபிஎஸ் பெயரையா வைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

News November 10, 2024

Sunday Special: ஆந்திரா நாட்டுக்கோழி வறுவல்

image

அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் நாட்டுக் கோழிக்கறி (500g) சேர்த்து வதக்கி, மல்லி, மஞ்சள், உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள், நீர் சேர்க்கவும். சிக்கன், மசாலாவுடன் சேர்ந்து நன்றாக வெந்து கெட்டியானதும், வறுத்த பொட்டுக்கடலை மாவைப் போட்டு இறக்கினால் ருசியான ஆந்திரா நாட்டுக்கோழி வறுவல் தயார்.

News November 10, 2024

வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? இது உங்களுக்குதான்

image

வருமான வரி செலுத்துவோருக்கு IT வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், வருமான வரி செலுத்துவோர், அவர்களின் சுய விவரங்களை அவ்வப்போது IT கணக்கில் UPDATE செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக 2 இணையதள முகவரிகளையும் IT வெளியிட்டுள்ளது. அவை என்ன என்று பார்க்கலாம்.
1) https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login
2) https://pan.utiitsl.com/

News November 10, 2024

இந்தியாவில் மோசமான வானிலைக்கு 3,200 பேர் பலி

image

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் மோசமான வானிலைக்கு 3,200 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அமைப்பு ஒன்று இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 274 நாள்களில் 255 நாள்கள் மோசமான வானிலை நிலவியதாகவும், இதில் 32 லட்சம் ஹெக்டர் பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும், 9,457 கால்நடைகள் இறந்ததாகவும், 2.35 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!