News November 10, 2024

சனி – சுக்கிரன் சேர்க்கை: 5 நட்சத்திரங்களுக்கு ஜாலி!

image

சனியும் சுக்கிரனும் இந்தாண்டு இறுதியில் கும்பத்தில் சேர்வதால் பலன் பெறும் நட்சத்திரங்கள் • அஸ்வினி: அதிர்ஷ்டம், வெற்றி தேடி வரும். பதவி உயர்வு உண்டு. • ரோகிணி: திருமண தடங்கல் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி. • உத்திரம்: நல்ல வேலை கிடைக்கும். மகிழ்ச்சி கொட்டும். • சித்திரை: புதிய தொழில் தொடங்கும் நேரம். சாதனை செய்வீர்கள். • உத்திராடம்: எல்லா முயற்சியும் வெற்றியடையும். தொட்டதெல்லாம் துலங்கும்.

News November 10, 2024

திரைத்துறைக்கு பேரிழப்பு: இயக்குநர்கள் சங்கம்

image

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு என 400 படங்களில் முத்திரை பதித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள அச்சங்கம், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நடிகரை தமிழ் திரையுலகம் இழந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது. டெல்லி கணேஷை இழந்துவாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் இயக்குநர்கள் சங்கம் கூறியுள்ளது.

News November 10, 2024

தொடரை கைப்பற்றுமா இந்திய அணி

image

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தெ.ஆப்பிக்க அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்தப் போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணி; சாம்சன் (wk), அபிசேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (c), திலக் வர்மா, ஹிருத்திக் பாண்டியா, ரிங்கு சிங், அஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், வருண்.

News November 10, 2024

நியூசி.க்கு எதிரான தோல்வி: அஸ்வின் ஓப்பன் டாக்

image

நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு தானும் முக்கிய காரணம் என அஸ்வின் தெரிவித்துள்ளார். நியூசி. அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தன்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதை நினைத்து வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னால் முடிந்தவரை சிறப்பானதை கொடுக்கு முயன்றதாகவும், ஆனால் அது அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

டெல்லி கணேஷ் மறைவு – மோடி இரங்கல்

image

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். X பதிவில் ‘ டெல்லி கணேஷ் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவராக திகழ்ந்தவர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் கொண்டு வந்த தனித்துவத்திற்காக தலைமுறைகள் கடந்தும் பார்வையாளர்களால் அவர் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.’ என பதிவிட்டுள்ளார்.

News November 10, 2024

காங்.,க்கு மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள்: அமித் ஷா

image

வீர சாவர்க்கரை புகழ்ந்து பேசும்படி ராகுலிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்துவாரா என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மராட்டியத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பால் தாக்கரேவை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சியுடன், சிவசேனா(உத்தவ் அணி) கூட்டணி வைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மராட்டிய மக்கள் அவர்களுக்கு மீண்டும் தோல்வியை பரிசளிப்பார்கள் என்றும் சூளுரைத்தார். வரும் நவ.20இல் அங்கு தேர்தல் நடக்கிறது.

News November 10, 2024

’புஷ்பா-2’வில் குத்தாட்டம் போடும் ஸ்ரீலீலா

image

சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணியில் புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றிக்கு சமந்தா நடனத்தில் உருவான ‘ ஊ சொல்றியா’ பாடல் இந்தியா முழுவதும் ஹிட் அடித்ததும் ஒரு காரணம். ’புஷ்பா-2’ படத்தில் யார் அப்படி நடனமாடுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீலீலா Kissik பாடலுக்கு நடனமாடி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாட்டுக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?

News November 10, 2024

UNION BANKஇல் 1,500 காலி இடங்கள்.. 3 நாளே அவகாசம்

image

UNION BANK-இல் காலியாக இருக்கும் 1,500 லோக்கல் பேங்க் ஆபிசர் நிலையிலான பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு unionbankofindia.co.in இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான கால அவகாசம் வருகிற 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால் வேலைக்கு சேர விரும்புவோர் உடனே அந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். SHARE IT.

News November 10, 2024

ஊழல் மட்டுமே செய்யும் ஆட்சி தேவையா? மோடி

image

ஜார்க்கண்ட் மாநிலத்தை ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மாநிலத்தை ஆண்டவர்கள் ஊழல் செய்வதையே கொள்கையாக வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார். இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைப்பவர்களின் திட்டங்களை பாஜக முறியடிக்கும் எனவும் உறுதியளித்தார். இங்கு நவ.13இல் தேர்தல் நடைபெறுகிறது.

News November 10, 2024

2,123 நாட்களுக்கு பிறகு தொடரை இழந்த ஆஸி. அணி

image

ஆஸி. அணி தனது சொந்த மண்ணில் 2,123 நாள்களுக்கு பிறகு ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இன்று நடைபெற்ற பாக். அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், ஆஸி. அணியின் நீண்டகால சாதனை (சுமார் 6 ஆண்டுகள்) முறியடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, 2019இல் ஆஸி. அணி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!