India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பங்குச் சந்தையில் நடப்பாண்டில் இதுவரை IPO மூலம் நிதி நிறுவனங்கள் ₹1.19 லட்சம் கோடி நிதி திரட்டியுள்ளன. அதிகபட்சமாக ஹுண்டாய் நிறுவனம் ₹27,870 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்நிலையில், IPO மூலம் அதிகம் நிதி திரட்டிய பங்குச்சந்தைகள் வரிசையில் உலகளவில் இந்தியா 2வது இடம்பிடித்துள்ளது. ₹2.20 லட்சம் கோடி திரட்டி அமெரிக்கா முதல் இடத்திலும், ₹89,800 கோடி திரட்டி சீனா 3வது இடத்திலும் உள்ளது.
சிவப்பரிசி 3 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பிறகு அதே நீருடன் குக்கரில் 3 விசில் வரும்வரை
வேக விடவும். பிறகு அடி கனமான பாத்திரத்தில் காய்ச்சிய பசும்பால் & வடிகட்டி வைத்த வெல்லப் பாகை ஊற்றி, அரிசிக் கலவையை சேர்க்கவும். நீர் வற்றும்வரை கொதிக்க வைக்கவும். பின் முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியை நெய்யில் வறுத்து, அந்த கலவையில் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான சிவப்பரிசி பொங்கல் ரெடி.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் (16) சாம்பியன் பட்டத்தை வென்றார். சிட்னியில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் அவர், சீனாவின் ஹெலனை எதிர்கொண்டார். தொடர்ந்து அசத்திய அனாஹத் 3-1 என்ற செட் கணக்கில் கோப்பையை வசப்படுத்தினார். நடப்பு ஆண்டில் நார்த் கோஸ்ட் தொடர் உள்ளிட்ட 7 சர்வதேச கோப்பைகளை அவர் வென்றிருப்பது கவனிக்கத்தக்கது.
டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை ஏப்ரல் மாதம் முதல் கணினிமயமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அரக்கோணம், ராமநாதபுரத்தில் இந்நடைமுறை சோதனையில் இருக்கும் நிலையில், சென்னையிலும் ஓரிரு வாரங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தமிழகத்தில் முழுமையாக பில் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும். இதனால், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ₹10 பணம் வசூலிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக <<14570010>>கைதான துணை நடிகை<<>> மீனா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சின்னத்திரை, வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், ஆனால் சிறிய வேடங்கள் மட்டுமே தனக்கு கிடைத்ததாகவும் கூறியுள்ளார். இதனால், விரைவில் செட்டிலாக நினைத்து துணை நடிகைகளுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
உடலின் நச்சு நீக்கியாக செயல்பட்டு மேனியை பளபளப்பாக வைத்திருக்க கிரீன் ஹெர்பல் ஜூஸை குடிக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சுரைக்காய், பச்சை ஆப்பிள், துளசி, வெள்ளரி, இஞ்சி, புதினா, மல்லி அனைத்தையும் சிறிதளவு எடுத்து அரைத்து வடிக்கட்டி சிட்டிகை மிளகு, சீரகப் பொடி கலந்து காலையில் தொடர்ந்து பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் மேனியின் பொலிவும் கூடும் எனக் கூறுகின்றார்கள்.
➤8ஆவது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பிஹாரில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று தொடங்குகிறது. ➤புரோ கபடி லீக்: 46வது லீக் போட்டியில் ஹரியானா அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. ➤சென்னை GM செஸ்: சேலஞ்சர்ஸ் பிரிவில் லைவ் ரேட்டிங் தரவரிசையில் தமிழக வீரர் பிரணவ் (5 புள்ளி) முதலிடத்தை பிடித்தார். ➤ISL கால்பந்து தொடர்: ஒரிசா – மோகன் பாகன் அணிகள் இடையேயான போட்டி ‘டிரா’ ஆனது.
➤பிலிப்பைன்ஸின் எதிர்ப்பை மீறி சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் அதன் எல்லையை வரையறுத்து சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது. ➤ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளம் மீது அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ➤அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 2,000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. ➤ஸ்பெயினில் வலென்சியா மாகாண அரசைக் கண்டித்து 1.5 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், நீலகிரி, சிவகங்கை, தேனி, நெல்லையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மீதமுள்ள 30 மாவட்டங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது. செப்., மாதத்துடன் ஒப்பிடும்போது, அக்., மாதத்தில் கிருஷ்ணகிரியில் 0.63 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தர்மபுரியில் நிலத்தடி நீர் 1.35 மீட்டர் குறைந்துள்ளது. சென்னை, மதுரையில் கனமழை பெய்தாலும், நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.
சிலருக்கு வீடு வாங்கலாமா? அல்லது நிலமாக வாங்கி வைக்கலாமா? என்ற சந்தேகம் இருக்கும். முதலீடு அடிப்படையில் பார்க்கும்போது நிலம் வாங்குவதே புத்திசாலித்தனமான முடிவு என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நிலத்தின் மதிப்பானது நீண்டகாலத்தில் உயரும். அதேநேரம் வீட்டின் மதிப்பு குறையும் என்கிறார்கள். எனவே, முதலீட்டிற்காக வாங்குவதாக இருந்தால் நிலமாக வாங்கி வைக்கவே பரிந்துரைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.