India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதின், டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும் புதினுடன் டிரம்ப் பேசியதாகவும், அப்போது உக்ரைன் போரை தீவிரப்படுத்த வேண்டாமென கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மறுத்துள்ள கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அதில் உண்மையில்லை என்றும், புனையப்பட்ட கதை எனவும் விளக்கமளித்துள்ளார்.
மகப்பேறு விடுப்பு முடிந்து திரும்பும் பெண் காவலர்கள், ஏற்கனவே இருந்த ஸ்டேஷனில் தான் பணியமர்த்தப்படுகின்றனர். இதனால் அவர்களின் உடல்நிலை மோசமடைவதோடு, குழந்தைகளையும் கவனிக்க முடியாத சூழல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், மகப்பேறு விடுப்பு முடிந்து திரும்பும் பெண் போலீசாருக்கு அவர்களின் பெற்றோர்/கணவர் வசிக்கும் மாவட்டங்களிலேயே 3 ஆண்டுகளுக்கு பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தவெகவில் ஒரே மாதத்தில் 75 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்த விஜய், தற்போது புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக தனி இணையதள செயலி உருவாக்கப்பட்டு அதன்மூலம் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் பலர் விண்ணப்பிப்பதால், செயலி சிறிது நேரம் முடங்கியது. பின்னர் சரி செய்யப்பட்டு விண்ணப்பப்பதிவு மீண்டும் தொடங்கியது.
EPFO-ன் அதிகபட்ச சம்பள வரம்பு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஊழியர் சம்பளத்தில் 12%, நிருவனம் சார்பில் 12% EPFO-ற்கு அளிக்கப்படுகிறது. சம்பள உயர்த்தப்படுவதால், ஊழியர்களின் PF-க்கு அளிக்கப்படும் தொகை அதிகமாகும். கடந்த 2014ம் ஆண்டில் ஊதிய உச்சவரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேசிய சுகாதார திட்ட இயக்குநராக இருந்த ஷில்பா பிரபாகர், சுற்றுலா துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகு, கால்நடைத் துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வரின் துணைச் செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு நவ.13, 20ல் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. 48 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடக்கவுள்ள நிலையில், சுமார் 2.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளது. இந்த 48 தொகுதிகள் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அன்றைய தினம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
POWERGRID நிறுவனத்தில் காலியாகவுள்ள 802 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.12) கடைசி நாளாகும். Jr Officer Trainee, Diploma Trainee உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: Diploma, BA, BE, BBA, BBM, CA. வயது: 18-27. சம்பளம்: ₹21,500 – ₹1,08,000. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு. விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு <
மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் குக்கி, மெய்டி இன மக்களிடையே நிலவும் மோதலால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஜிரிபாம் பகுதியில் சிஆர்பிஎப் படை வீரர்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழை, குளிர் காலங்களில் காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் வருவது சகஜம். ஆனால், இந்த காலங்களில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், இதய நோயாளிகள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக அதிகாலையில் வாக்கிங், ஜாகிங் செல்வதை தவிர்ப்பதோடு, குளிர்ந்த நீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
நடிகை ரம்யா பாண்டியனின் ஹனிமூன் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன். கடந்த 8ஆம் தேதி தனது காதலன் லோவல் தவானை திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவரும் ரிஷிகேஷில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் ‘என்ஜாய் ரம்யா’ என வாழ்த்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.