India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போது, ஆண்டுதோறும் ₹1.30 லட்சம் கோடி மதிப்பிலான ஐபோன்கள் தயாரிக்கப்படும் நிலையில், வரும் காலங்களில் அது ₹2.53 லட்சம் கோடியாக உயரும் எனக் கூறப்படுகிறது. இதனால் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகுவதுடன், ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 26%ஆக உயரும்.
*நாள்தோறும் அதிகாலை 4-5 மணிக்குள் எழுந்துவிடுங்கள்.
*டீ, காபிக்கு முன் 1 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
*முடிந்தால் இரவு வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு, அந்த நீரை எழுந்ததும் குடிக்கலாம்.
*காலைக் கடன்களை முடித்துவிட்டு உங்களால் இயன்றவரை (30Min) நடைப்பயிற்சி செல்லுங்கள்.
*8 AMக்குள் காலை உணவை முடியுங்கள். இவ்வாறு *நாள்தோறும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான, மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு முதல் அதனை தவிர்க்க முடிவு செய்த TRB, மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டுக்கான தேர்வு அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
சித்தார் நடித்துள்ள ‘Miss You’ படத்தின் டீசரை, இன்று 11 AMக்கு படக்குழு வெளியிடுகிறது. ராஜசேகர் இயக்கியுள்ள இந்தப் படம் நவ.29ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இதேபோல, பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்திலிருந்து ‘ஊசி ரோசி’ பாடல் இன்று 6 PMக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இந்த படத்தின் ’போலீஸ்காரன கட்டிகிட்டா’ பாடல், படு பிரபலமானது.
*எலும்பு, பற்களுக்கு உறுதி தரும் சர்க்கரைவள்ளி கிழங்கு
*உள்ளுறுப்புகளுக்கு அசுர பலத்தை அள்ளித்தரும் தரும் பூலாங்கிழங்கு
*பாடாய்ப்படுத்தும்இடுப்பு வலிக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு.
*வயிற்று பூச்சியை அழித்தொழிக்க சேப்பக்கிழங்கு.
*முழங்கால் வலி முதல் முடக்குவாதம் வரை குணமாக முடவாட்டுக்கால் கிழங்கு.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 7.8% அதிகரித்துள்ளதாக, B2B இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்ஷன் சர்வீசஸ் லிமிடெட் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிலக்கரி இறக்குமதி 13.034 கோடி டன்னாக இருந்த நிலையில், தற்போது 14.06 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இறக்குமதி செய்யப்பட்ட அளவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகர் முழுவதும் சூறைக் காற்றுடன் அவ்வப்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
*ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளதால் இரைப்பை, கல்லீரலில் கிருமித்தொற்றை தடுக்கும்.
*ஒரு டீ ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா, மூச்சுத்திணறலின் தீவிரம் குறையும்.
*கருஞ்சீரகப் பொடியை உடலில் தேய்த்து குளித்தால் சரும நோய்கள் மட்டுப்படும்.
*மலச்சிக்கலில் இருந்து விடுபட தினம் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சாப்பிடலாம்.
அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை, 2023 நிதியாண்டில் 855% அதிகரித்துள்ளது. இது தொடர்பான USA உள்நாட்டு பாதுகாப்புத்துறை புள்ளி விவரப்படி, 2021 நிதியாண்டில் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பித்த நிலையில், 2023இல் 41,330 பேராக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் பாதி பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறல் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: இனியவைகூறல்
▶குறள் எண்: 96 ▶குறள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
▶ விளக்க உரை: தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
Sorry, no posts matched your criteria.