News November 12, 2024

மொரிஷியஸ் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து!

image

மொரிஷியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நவீன் ராம்கூலமிற்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடான மொரிஷியஸில் கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சி (பிடிஆர்), மொரிஷியன் ஆயுதப்படை இயக்கம் (எம்எம்எம்) கூட்டணி வென்று ஆட்சி அமைக்கவுள்ளது.

News November 12, 2024

தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு: TNPSC தலைவர்

image

அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என TNPSC தலைவர் SK பிரபாகர் உறுதியளித்துள்ளார். அண்மையில் நடந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு முடிவும், டிப்ளமோ, ITI கல்வித்தகுதி கொண்ட தொழில்நுட்ப பணித் தேர்வு முடிவும் விரைவாக வெளியிடப்படும் என்றார். குருப்-2 & 2A தேர்வில் புதிதாக 213 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு காலிப் பணியிடங்கள் 2,540ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

News November 12, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) ஆசியாவின் மிகப்பெரிய தேர் எது? 2) pH என்பதன் விரிவாக்கம் என்ன? 3) Genealogy என்றால் என்ன? 4) இந்தியாவின் முதல் பெண் விமானி யார்? 5) விமானத்தின் வேகத்தைக் கணக்கிட பயன்படும் கருவி எது? 6) Apricot என்பதன் தமிழ் சொல் என்ன? 7) டைனோசர்களை விட பழைமையான கடல்வாழ் உயிரினம் எது? 8) மிளகாய்க்கு காரச்சுவையை வழங்கும் வேதிப்பொருள் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 12, 2024

Trump Effect – வரலாறு காணாத புதிய உச்சம் தொட்ட BitCoin

image

முன்னணி கிரிப்டோகரன்சியான BitCoin புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு BitCoin விலை சுமார் ₹75 லட்சத்தை எட்டியுள்ளது. அதிபர் தேர்தல் பரப்புரையில், டிரம்ப் அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகராக மாற்றுவேன் என உறுதியளித்திருந்தார். அவர் வென்றுள்ளதை அடுத்து, கிரிப்டோவின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே நிதிச் சந்தை ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். நீங்க Bitcoin பற்றி என்ன நினைக்குறீங்க…

News November 12, 2024

மிஸ் ஆன ‘பில்லா 3’ வாய்ப்பு

image

அஜித்தை வைத்து ‘பில்லா 3’ படத்தை இயக்குவதற்கு வந்த வாய்ப்பை வேண்டாம் எனக் கூறிவிட்டதாக இயக்குநர் விஷ்ணு வர்தன் தெரிவித்துள்ளார். 2, 3 முறை அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு ஏற்பட்டு மிஸ் ஆனதாகவும், சல்மான் கானுடன் படம் எடுக்கும் சூழல் அமைந்ததால் இந்த வாய்ப்புகளைத் தவற விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

1 மணி வரை இங்கெல்லாம் மழை கொட்டும்

image

தமிழகத்தில் பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிற்பகலுக்கு பிறகு மழை தொடங்கும் எனவும், டெல்டா பகுதிகளில் இரவு முதல் மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

விளையாட்டு துளிகள்

image

➤ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4-0 என மலேசியாவை வீழ்த்தியது. ➤ISL கால்பந்து தொடர்: சென்னை – மும்பை அணிகள் இடையேயான போட்டி 1-1 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது. ➤புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா அணி 40-27 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் அணியை வென்றது. ➤மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் இன்று தொடங்குகிறது.

News November 12, 2024

ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

image

ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை பாஜக நசுக்க விரும்புவதாக ராகுல் தொடர்ந்து பொய் பேசி வருவதாகவும், தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் பொய்களை பரப்புவதை கண்டிக்கும்படியும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜகவின் கொள்கைகள் குறித்து தவறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News November 12, 2024

இஸ்ரேலை கண்டித்த சவுதி பட்டத்து இளவரசர்

image

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கண்டனம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மற்றும் அரேபியத் தலைவர்களின் மாநாட்டில் பேசிய அவர், இத்தாக்குதல்களை இனப்படுகொலை என்று கூறி, இதில் சர்வதேச சமூகம் தலையிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், ஈரானின் இறையாண்மையை இஸ்ரேல் மதிக்க வேண்டும் எனவும் பாலஸ்தீன நாடு அமைந்தால்தான் இஸ்ரேலை நாடாக அங்கீகரிப்போம் என்றார்.

News November 12, 2024

நுரையீரல் கழிவுகளை நீக்கும் அமுக்கரா தேநீர்

image

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றும் ஆற்றல் அமுக்கரா இலைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அமுக்கரா இலை (3-4), மிளகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

error: Content is protected !!