News November 12, 2024

BREAKING: திமுக EX எம்எல்ஏ கோதண்டம் காலமானார்

image

திமுக முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் (99) காலமானார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு 2 முறை திமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்வானவர் கோதண்டம். வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல், சென்னை பல்லாவரத்தை அடுத்த குன்றத்தூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், கட்சியினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

News November 12, 2024

தெலுங்கு மக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே: ஹைகோர்ட்

image

தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்து தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி கஸ்தூரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, மதுரை ஹைகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, தெலுங்கர்கள் வந்தவர்கள் அல்ல; அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியினர் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

News November 12, 2024

Stock Market: பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்யலாமா?

image

பென்னி ஸ்டாக்ஸில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது. அதிலும் ஒரேயொரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் மொத்த தொகையையும் இழக்கும் அபாயம் உள்ளது. விலை நிலையற்றதாக இருக்கும் இத்தகைய ஸ்டாக்ஸில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பொதுவாக குறைந்த அளவிலானத் தகவல்களையே வெளியிடும். அத்துடன், சில குழுக்கள் அவற்றின் விலையை வேண்டுமென்றே குறைத்து, முதலீட்டாளரை ஏமாற்ற முயற்சிக்கலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

News November 12, 2024

தென் ஆப்பிரிக்காவுக்கு மாறும் சாம்பியன்ஸ் டிராபி!

image

பாக். Hybrid Modelக்கு சம்மதிக்கவில்லை என்றால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு அனுமதி அளிக்காததால் இந்திய அணி பாக்.
செல்லாது, அதற்கு பதிலாக இந்தியாவின் போட்டிகளை மட்டும் யுஏஇயில் நடத்தும்படி என BCCI தெரிவித்திருந்த நிலையில், அதனை ஏற்க PCB மறுத்தது. இதனால் தொடரை நடத்தலாமா, விலகிவிடலாமா என PCB பரிசீலித்து வருகிறது.

News November 12, 2024

கஸ்தூரிக்கு முன்ஜாமின் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு

image

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கு பேசும் மக்களை அவமதித்ததாக கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாகி விட்ட கஸ்தூரி, முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியை சீர்குலைக்க விரும்பும் மற்றவர்களுக்கு இந்த வழக்கு பாடமாக இருக்க வேண்டுமென்று தமிழக அரசு வாதிட்டது.

News November 12, 2024

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவன் நான்: சீமான்

image

முஸ்லிம்களுக்காக ஒவ்வொரு முறையும் தான் குரல் கொடுத்ததாக சீமான் கூறினார். மசூதியில் தொழுதுவிட்டு, குண்டு வைப்பது போல படம் எடுத்த கமல்ஹாசனை முதலில் எதிர்த்தவன் நான் தான் என சீமான் கூறினார். மேலும், காஷ்மீரை பிரித்தது தவறு என குரல் கொடுத்த தன்னை ரோட்டில் வீசிவிட்டு, காஷ்மீரை பிரித்தது சரி; பிரித்த விதம்தான் தவறு எனக் கூறிய ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டு விட்டார்கள் என்றும் ஆதங்கப்பட்டார்.

News November 12, 2024

இது பாலியல் வன்கொடுமை ஆகாது : ஐகோர்ட்

image

திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக குடும்பம் நடத்தி உறவு வைப்பது Rape ஆகாது என்று கொல்கத்தா ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பெண் ஒருவர் தொடர்ந்த Rape வழக்கில் அவருடன் வாழ்ந்த நபருக்கு, விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை விதித்தது. இதை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த ஐகோர்ட், 2 பேர் சம்மதித்து உறவுவைத்து விட்டு, பிறகு பாலியல் வன்கொடுமை புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது என கூறி தண்டனையை ரத்து செய்தது.

News November 12, 2024

மிஸ் டீன் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஒடிஷா அழகி

image

மிஸ் டீன் யுனிவர்ஸ் 2024 அழகியாக ஒடிஷாவைச் சேர்ந்த த்ரிஷ்னா ராய் (19) தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில், பெரு மற்றும் நமிபியா அழகிகளை பின்னுக்கு தள்ளி, Miss Teen Universe 2024 பட்டத்தை அவர் வென்றுள்ளார். ராணுவ அதிகாரியின் மகளான இவர், ஃபேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய அழகிக்கான போட்டியிலும் இவர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2024

பத்திரப்பதிவு: ரூ.11,733 கோடி வருவாய்

image

பத்திரப் பதிவு துறையில் கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ.11,733 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், 2023-24 நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை ரூ.10, 511 கோடி வருவாய் கிடைத்ததாகவும், அந்த வருவாய் 2024-25 நிதியாண்டில் அக்டாேபர் வரை கூடுதலாக ரூ.1,222 கோடி கிடைத்துள்ளது என்றும் கூறினார்.

News November 12, 2024

மீனவர் கைது விவகாரம்: ஸ்டாலின் மீண்டும் கடிதம்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்காேரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!