India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களது படகுகளை மீட்குமாறு கோரிக்கை விடுத்த அவர், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து சுமூக தீர்வு காண வேண்டும் என்றார். நாகை, ராமேஸ்வரம் மீனவர்களை சமீபத்தில் இலங்கை படை சிறைப்பிடித்தது.
இன்று (நவ.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*1922 – தமிழக நாடகக் கலைஞரும், நாடக ஆசிரியருமான சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களின் நினைவு நாள்.
*1933 – தமிழகப் பத்திரிக்கையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் மோகன் ராம் பிறந்தநாள்.
*1935 – தென்னிந்தியத் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா பிறந்தநாள்.
*நவம்பர் 13 – உலக கருணை தினம்.
*இன்றைய பொன்மொழி – மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறிவிடும் தன்மை கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ODI போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இன்று (நவ.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
AUS அணிக்கு எதிரான BGT நவ.22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி பயிற்சி நடைமுறையை ரகசியமாக வைத்திருக்க விரும்புவதாக வெஸ்ட் ஆஸ்திரேலிய பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. IND பயிற்சி செய்யும் பெர்த்துக்கு பார்வையாளர்கள் வர அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஊழியர்களும் தொலைபேசிகளை எடுத்துச் செல்லக் கூடாது போன்ற கடுமையான விதிமுறைகளை BCCI விதித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவ.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
திமுக முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாக, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். மேலும், கோதண்டம் திறம்பட மக்கள் பணி ஆற்றியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்த கோதண்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு 2 முறை MLA-ஆக தேர்வானவர்.
கேரட் – தேங்காய் எண்ணெய் கலவை முகத்தை அழகுப்படுத்தும் என குஷ்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து விளக்கமளித்த சருமநல மருத்துவர் பூர்ணிமா, கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதாலும், தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்கும் என்பதாலும், குஷ்பு அவ்வாறு கூறியிருப்பார். ஆனால், அதுமட்டுமே சரும அழகை அதிகரித்துவிடாது. உணவு, வாழ்க்கை முறை அடிப்படையிலேயே சருமநலன் அமையும் என விளக்கமளித்துள்ளார்.
ஜார்க்கண்ட்டில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு 43 தொகுதிகளில் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 37 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 2ஆம் கட்ட தேர்தல் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.