News November 13, 2024

ஏற்கவே முடியாது: ஆளுநர் ரவி கடும் கண்டனம்

image

கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு ஆளுநர் ரவி கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு மருத்துவர் மீதான தாக்குதல் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், மருத்துவர்கள் மீதான எந்தவொரு வன்முறையையும் ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

3ஆவது டி20 போட்டி: அடுத்தடுத்து அரைசதம்

image

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் 2 பேர் அடுத்தடுத்து அரைசதம் விளாசி அசத்தினர். சாம்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்த போதிலும், அபிஷேக் ஷர்மா அதிரடியாக 24 பந்துகளில் அரைசதம் விளாசி அவுட் ஆனார். இதையடுத்து, மறுமுனையில் இன்னொரு வீரரான திலக் வர்மாவும் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதேநேரத்தில், கேப்டன் சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் அவுட் ஆனார்.

News November 13, 2024

சுக்கிரன் பார்வை: ஆடம்பரத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்

image

சுக்கிரன் விசாகம் நட்சத்திரத்தில் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்கள் ஆடம்பரத்தில் திளைக்கப் போகிறார்கள். ⁍ துலாம்: வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. ⁍ மகரம்: அதிர்ஷ்டம் தேடி வரும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் விருத்தி அடையும். குழந்தை பாக்கியம். ⁍ கன்னி: சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் கொடுக்கும். வீடு யோகம் அமையும்.

News November 13, 2024

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: ராமதாஸ்

image

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடே என ராமதாஸ் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வர இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், தோல்வி அடைந்து விடுவோம் என இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் திமுக நிச்சயம் தோல்வியுறும் எனவும் அவர் ஆருடம் கூறியுள்ளார்.

News November 13, 2024

24 பந்துகளில் அதிரடி அரைசதம்: அபிஷேக் அசத்தல்

image

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், 24 பந்துகளில் இந்திய அணி வீரர் அபிஷேக் ஷர்மா அரைசதம் விளாசியுள்ளார். முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 ரன்கள், 2ஆவது டி20 போட்டியில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட்டாகி விமர்சனத்துக்கு ஆளானார். இந்நிலையில், செஞ்சூரியனில் நடைபெறும் 3ஆவது போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். எனினும் அடுத்த பந்தில் அவுட்டானார்.

News November 13, 2024

குளிர்காலத்தில் உதடுகள் வெடிப்பு ஏற்படுகிறதா?

image

* குளிர் காலங்களில் உதடுகள் வெடிப்புக்கு முக்கிய காரணம் நீரிழப்பு. அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதே அதற்கு முக்கிய காரணம். * உதடுகளில் வெடிப்பு இருந்தால், தோள்களை கடிக்க வேண்டாம். * அதுபோன்ற சமயங்களில் வைட்டமின் பி, கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். * வெளியே செல்லும் முன் லிப் பாம்/ பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்துங்கள்.

News November 13, 2024

மீண்டும் டக் அவுட் ஆன சஞ்சு சாம்சன்

image

SA அணிக்கு எதிரான 3வது போட்டியில் IND அணியின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் மீண்டும் டக் அவுட் ஆனார். 2வது போட்டியில் யான்சென் பந்தில் ஆட்டமிழந்ததை போல இந்த போட்டியிலும் போல்ட் ஆனார். IND அணிக்காக டி20 போட்டிகளில் அதிகமுறை (6) டக் அவுட் வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து 2 சதமடித்த சஞ்சு அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட் ஆனது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 13, 2024

எதிர்க்கட்சி தலைவரை இப்படியா விமர்சிப்பது?: EPS

image

ஒரு எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ஊர்ந்து சென்றார், கரப்பான் பூச்சி போல் சென்றார் என முதல்வர் பதவியை மறந்து ஸ்டாலின் விமர்சித்து வருவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவினர் யாரையும் தவறாக விமர்சிக்கவில்லை எனவும், ஆளுங்கட்சியினர் தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுப்போம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், அதிமுக திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

ODI தரவரிசையில் முதலிடம் பிடித்த அஃப்ரிடி

image

ODI பவுலர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. இதில் பாக்., வேகப்பந்துவீச்சாளர் சாஹின் அஃப்ரிடி 3 இடங்கள் முன்னேறி முதல் இடம் பிடித்துள்ளார். குல்தீப் யாதவ் 1 இடம் பின்தங்கி 4வது இடத்திலும், பும்ரா, சிராஜ் 2 இடங்கள் முன்னேறி முறையே 6, 8வது இடங்களிலும் உள்ளனர். ரஷீத் கான் (2), கேசவ் மகாராஜ் (3), பெர்னார்ட் (5), போல்ட் (7), ஜாம்பா (9), ஹேசில்வுட் (10) முதல் 10 இடங்களில் உள்ளனர்.

News November 13, 2024

ஹாஸ்பிடல்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

image

டாக்டர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, ஹாஸ்பிடல்களில் பாதுகாப்பை பலப்படுத்த TN அரசு உத்தரவிட்டுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் பிறப்பித்துள்ள உத்தரவில், மருத்துவர்கள், ஊழியர்களை தாக்குவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை என்பதை மக்கள் பார்வையில் படும்படி வைக்க கூறியுள்ளார். போலீஸ் ரோந்து, CCTV செயல்பாடு, காவல் உதவி செயலி பயன்பாட்டை உறுதி செய்யவும் ஆணையிட்டுள்ளார்.

error: Content is protected !!