India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈறு, பேன் பிரச்னைக்கு கிராம்பு பேக் தீர்வளிக்கும் என சருமநல மருத்துவர்கள் கூறுகின்றனர். பூண்டு சாறு (5ml) & கிராம்பு பொடியை (10g) வேப்ப எண்ணெய்யில் (25ml) கலந்து முடியின் வேர்வரை படும்படி நன்றாக தேய்த்து 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து பின் வெந்நீரில் அலச வேண்டும். இதை வாரத்திற்கு இருமுறை என ஒரு மாதம் செய்தால் பேன்கள் முற்றிலுமாக நீங்கிவிடும் என பரிந்துரைக்கின்றனர்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின குழந்தை ஒன்றின் தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற நாயகன் போராடுவதே ”கங்குவா”. சூர்யா தனது நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். கேமரா வொர்க்கும் சிறப்பாக உள்ளது. ஆனால், படத்தில் வலுவான எமோஷனல் காட்சிகளும், கனெக்ஷனும் இல்லை. DSP’யின் இசை நன்றாக இருந்தாலும், BGM ஆங்காங்கே பிசிறு தட்டுகிறது. முதல் பாதி பொறுமையை சோதிக்கிறது. Rating 2.25/5
தமிழகத்தில் உள்ள 37 அரசு மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் டீன்களுடன் மினிஸ்டர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று டாக்டர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிராக டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், ஹாஸ்பிடலில் டாக்டர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதன்பின், முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை 59 டி20 போட்டிகளில் விளையாடி 92 விக்கெட்டுகளை வீழ்த்தி, முன்னணி பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர் (90), பும்ரா (89), ஹர்திக் (88) ஆகியோரை பின்னுக்கு தள்ளினார். முதல் இடத்தில் சஹால் 96 விக்கெட்களுடன் நீடிக்கிறார்.
ஜனவரி முதல் ரேஷன் கார்டு உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை ₹1000 வழங்கப்படும் என அமைச்சர் KKSSR கூறியிருந்தார். இதனால், அனைத்து பெண்களுக்கும் ₹1000 வழங்கப்படவுள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள உதயநிதி, குறைகள் களையப்பட்டு “தகுதியுள்ள” அனைத்து மகளிருக்கும் ₹1000 வழங்கப்படும் என தெளிவுப்படுத்தியுள்ளார். இதன் மூலம், அனைவருக்கும் ₹1000 கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
அரசியலில் வெற்றி பெற மிக முக்கியமானது மக்களிடம் நன்கு பரிச்சயமாகி இருப்பது. ஆண்ட்ராய்டு யுகத்தில் பலரும் மக்களிடம் பெரிய அறிமுகத்தை பெறுகிறார்கள். அப்படி பிரபலமான Influencer ஒருவர் தான் டோலி சாய்வாலா. இவர் டீக்கடை வைத்து பலரையும் கவர்ந்திருக்கிறார். மகாராஷ்டிரா பாஜகவில் அவர் இணைந்ததும் பாஜக அவரை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியுள்ளது பாஜக. மக்களிடம் எளிதில் சென்று சேருவது தானே அரசியல்…
குத்துச்சண்டை பார்க்காதவர்களுக்கும் பரிச்சயமானவர் மைக் டைசன். குத்துச்சண்டையில் உச்சம் தொட்ட அவர், 19 ஆண்டுகள் கழித்து, தனது 58 வயதில் மீண்டும் ரிங்கில் இறங்குகிறார். பிரபல அமெரிக்க யூடியூபர் – பாக்ஸரான ஜாக் பால்(27) என்பவரை டைசன் எதிர்கொள்கிறார். ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ள இப்போட்டி 16ம் தேதி காலை 8:30 மணிக்கு இந்தியாவில் ஒளிபரப்பாகிறது. டைசன் பற்றிய உங்கள் நினைவுகளை Share பண்ணுங்க.
1) உலகின் முதல் வனவிலங்கு பூங்கா எங்கு தொடங்கப்பட்டது? 2) ITBP என்பதன் விரிவாக்கம் என்ன? 3) வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி எது? 4) இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் விமானி யார்? 5)செயற்கையாக மட்டுமே உருவாக்கப்படும் தனிமம் எது? 6) மரகதப்புறாவின் அறிவியல் பெயர் என்ன? 7) சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
நல்ல மதிப்பெண்கள் பெற்றும், உரிய நேரத்தில் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க வழி தெரியாமல் தவிப்பவர்களுக்காகவே ‘வித்யாலட்சுமி திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பிணை உத்தரவாதம் இல்லாமல், வட்டி மானியத்துடன் கல்விக் கடன் கொடுக்கப்படும். குடும்ப வருவாய் ₹8 லட்சம் வரை உள்ளோருக்கு, இத்திட்டத்தில் கடன் (₹7.5 லட்சம்) கிடைக்கும். மனு செய்வது முதற்கொண்டு அனைத்துமே ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம்.
ஆம்பூரில் மருத்துவர் இல்லாததால், கர்ப்பிணி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டாக்டர் கத்தியால் குத்தப்பட்டதைக் கண்டித்து, டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் அரசு ஹாஸ்பிட்டலில் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணி துர்காதேவியை தருமபுரி, சேலம் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகாக அலைக்கழித்ததால், அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.