India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்ஜாமின் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்ததையடுத்து, நடிகை கஸ்தூரியை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமின்கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, கஸ்தூரியை கைது செய்வதற்காக போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்தொடருக்கு முன்பாக சமீபத்தில் இந்திய வீரர்களுக்கு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. அதில் விராட் கோலி மற்றும் ஷுப்மான் கில் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது.
வாக்காளர் அடையாள அட்டையில் சிலருக்கு முகவரி உள்ளிட்ட சில தகவல் மாறியிருக்கும். இதை எப்படி திருத்துவது என தெரியாமல் இருப்பர். இதற்காக EC சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. வருகிற 16, 17, 23, 24ஆம் தேதிகளில் உங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடியில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாமுக்கு சென்று புகைப்படம், முகவரி சான்று நகல் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பித்தால் உடனே திருத்தம் செய்யப்படும். SHARE IT
தமது அரசியல் வாழ்வில் மோடியைப் போல எந்த பிரதமரும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் பிரசாரம் செய்ததை பார்த்ததில்லை என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். புனேவில் பேசிய அவர், தனக்கு 53 ஆண்டுகால அரசியல் அனுபவம் உண்டு என்றும், இத்தனை ஆண்டுகளில் மோடி, அமித்ஷா போல சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்த பிரதமர், உள்துறை அமைச்சரை கண்டதில்லை என்று சாடினார்.
தவெக மாநாட்டை அடுத்து விஜய்யின் அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட ஏதுவான தொகுதி எது என ஆய்வு செய்ய கட்சி நிர்வாகிகளுக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டது. அதன்படி, நிர்வாகிகள் அளித்த பட்டியலில் நாகப்பட்டினம் தொகுதி முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் தூத்துக்குடி, அரியலூர் தொகுதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இன்ஸ்டாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. வெள்ளை உடையில் மஞ்சள் Colour Tone-ல் அட்டகாசமாக நயன் போஸ் கொடுத்துள்ளார். அவரது கண்களில் உள்ள ஈர்ப்பு விசைக்கு பவர் கூடிக்கொண்டே போவதாக ரசிகர்கள் வர்ணிக்கின்றனர். இந்த ஆண்டு அவர் நடிப்பில் எந்த படமும் ரிலீசாகவில்லை என்றாலும், அவரது வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படம், வரும் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
WhatsApp பயனாளர்களிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபடுவதை ஒரு கும்பல் எப்போதும் வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில், WhatsApp-இல் தற்போது போலி திருமண அழைப்பிதழை டிஜிட்டல் மூலம் தயாரித்து ஒரு கும்பல் அனுப்பி மோசடி செய்கிறது. அந்த அழைப்பிதழை OPEN செய்தால் அதிலிருக்கும் ரகசிய APK file பதிவிறக்கமாகி, போன் ஹேக் செய்யப்படும். பிறகு முக்கிய தகவல் கசியவும், பண மோசடிக்கும் வழிவகுக்கும்.
தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற திரைமறைவு வேலைகள் துவங்கிவிட்டதாக சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். பல ஆண்டுகளாக போராடி கல்வெட்டுகளை தமிழகம் கொண்டு வந்தால், கட்டிடம் இன்மை என்ற காரணம் கூறி மீண்டும் மாற்ற முயல்வதா எனவும் அவர் வினவியுள்ளார். மேலும், சரஸ்வதி நாகரிகம் என்றால் கோடிகளை அள்ளித்தருவார்கள். தமிழ் நாகரிகம் என்றால் கட்டிடம் பழசு என காரணம் கூறுவார்கள் எனவும் சாடியுள்ளார்.
WhatsApp-க்கு இந்தியாவில் தடை விதிக்கக்கோரும் மனுவை SC தள்ளுபடி செய்தது. இந்திய தகவல் தொழில்நுட்ப சட்ட (2021) விதிகளுக்கு WhatsApp கட்டுப்பட மறுப்பதாகவும், ஆதலால் இந்தியாவில் அதன் செயல்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் கேரளாவைச் சேர்ந்த பொறியாளர் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, அதை SC தள்ளுபடி செய்தது.
Sorry, no posts matched your criteria.