News November 14, 2024

ரூ.30 கோடி சம்பளம்.. ஆனால் ஆள் கிடைக்கலை

image

ஆண்டுக்கு ரூ.30 கோடி சம்பளம், அதாவது மாதம் ரூ.2.50 கோடி சம்பளம் என்றால், நம்மில் பலர் என்ன வேலை வேண்டுமானாலும் செய்வோம். எகிப்தில் இதே சம்பளத்தில் வேலை இருந்தும் யாரும் சேரவில்லை. ஏன் தெரியுமா? கடல் மத்தியில் உள்ள லைட் ஹவுசில் விளக்கு போடும் வேலையே அது. சில நேரம் கடல் அலை லைட் ஹவுஸ் உயரத்துக்கு எழும். இதனால் யாரும் சேரவில்லை. நீங்கள் அந்த வேலை செய்வீங்களா? உங்கள் பதிலை கீழே பதிவிடுங்க.

News November 14, 2024

50% பிராமணர்களிடம் செல்போன் இல்லை: SV சேகர்

image

பிராமணர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதாக எஸ்.வி. சேகர் கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “50% பிராமணர்கள் 500 ரூபாய் செல்போன் கூட இல்லாமல் இருக்கிறார்கள். பிணம் சுமக்கும் பிராமணர்கள் இருக்கிறார்கள். பிராமணர்களுக்கு 10% இடஒதுக்கீடு கொடுங்க. யாரும் பிராமின்னு சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால்தானே நாங்க NON BRAHMIN-னு சொல்வாங்க. ஐயர்னு சொல்லுங்க” என்றார்.

News November 14, 2024

BADASS விமானம் பார்த்துள்ளீர்களா?

image

கடினமான சூழல்களிலும் விட்டுக் கொடுக்காது போராடுபவர்கள் BADASS என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றனர். தற்போது விமான நிறுவனம் ஒன்றுக்கும் அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏவுகணைத் தாக்குதல், ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியிலும் விமானத்தை இடைவிடாமல் இயக்குவதால் இப்பெயர், லெபனானைச் சேர்ந்த விமான நிறுவனத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. போரின்போதும் பயணிகள் அதில் பயணித்து வருகின்றனர்.

News November 14, 2024

இது 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்

image

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காற்றின் தரக்குறியீடு 428 ஆக பதிவாகியுள்ளது. இந்த காற்றை சுவாசிப்பது 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காற்று மாசு காரணமாக அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இன்று 300 விமானங்கள், 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மாசை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

News November 14, 2024

கிரிவலம்: தி.மலைக்கு இன்று சிறப்புப்பேருந்துகள்

image

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் நாளை அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப்பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. சென்னையில் இருந்து இன்று 250, நாளை 350 சிறப்புப்பேருந்துகள் விடப்படுகின்றன. இதேபோல் மற்ற பகுதிகளில் இருந்தும் இன்று 150 சிறப்புப்பேருந்துகள் கூடுதலாக விடப்பட்டுள்ளன.

News November 14, 2024

34 நாட்களில் 48 லட்சம் திருமணம்! வேற எங்கே..!

image

இந்தியாவில் அடுத்த 34 நாட்களில் 48 லட்சம் திருமணங்கள் நடக்கப் போவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2K கிட்ஸ் தலைமுறையினர் சீக்கிரம் திருமணம் செய்வதில் வேகம் காட்டி வருகின்றனர். 90S கிட்ஸ்களை போல அல்லாமல், வேலைக்கு சேர்ந்ததுமே திருமணம் என்பதில் இவர்கள் தெளிவாக உள்ளனர். இதன் காரணமாக, இந்தியாவில் ஜெட் வேகத்தில் திருமணங்கள் நடக்கின்றன. இதை படித்து முடிக்கும் நேரத்தில் 20 திருமணங்கள் நடந்திருக்கும்.

News November 14, 2024

நல்ல தமிழில் பெயர் வையுங்கள்: உதயநிதி

image

துணை முதல்வர் உதயநிதி, திமுகவினருக்கு அன்புக் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளார். ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் இல்லத் திருமணத்தில் அவர் கலந்துகொண்டார். அங்கு பேசிய அவர், “சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளும் திமுகவினர், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் வையுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

News November 14, 2024

ஏறு முகத்தில் SK கெரியர்..!

image

நடிகர் சிவகார்த்திகேயன் வசூல் ரீதியாக தொடர்ந்து கெத்து காட்டி வருகிறார். அவர் கடைசியாக நடித்த 5 படங்களில் 4 படங்கள் வசூலை வாரிக்குவித்துள்ளன. அவரது ‘டான்’ திரைப்படம் ₹120 கோடி, ‘பிரின்ஸ்’- 40 கோடி ‘அயலான்’- ₹90 கோடி, ‘மாவீரன்’- ₹90 கோடி, ‘அமரன்’- ₹250 கோடி என மொத்தம் ₹600 கோடி வசூலை ஈட்டியுள்ளன. இதில் ‘பிரின்ஸ்’ படம் மட்டுமே எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை.

News November 14, 2024

பொங்கலுக்கு இலவச வேட்டி-சேலை: அரசு முக்கிய அறிவிப்பு

image

பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி-சேலையை ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்குகிறது. இந்தாண்டு எப்போது அது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் காரணமாக தயாரிப்புப் பணிகள் தாமதமடைந்ததாகவும், எனினும் ஜன.15க்கு முன்பே வழங்கப்பட்டு விடும் என்றும் கூறினார்.

News November 14, 2024

காலிஸ்தான் தீவிரவாதியை தூக்க இந்தியா முயற்சி

image

கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் தீவிரவாதி அர்ஷ்தீப் சிங்கை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கடந்த அக்.28ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது 50 கிரிமினல் வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. கடந்த 2022-ல் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், 2023-ல் அவரை தீவிரவாதியாக இந்திய அரசு அறிவித்தது.

error: Content is protected !!