News November 15, 2024

6 அறிவு எது தெரியுமா?

image

6 அறிவு எவை எவை என்பதை தொல்காப்பியம் இவ்வாறு விளக்கியுள்ளது.
*ஓரறிவு: தொடுதலால் உணர்வது
*இரண்டறிவு: தொடுதல், சுவைத்தல்.
*3ஆம் அறிவு: தொடுதல், சுவைத்தல், முகர்தல்.
*4ஆம் அறிவு: தொடுதல் சுவைத்தல், முகர்தல், பார்த்தல்
*5ஆம் அறிவு: தொடுதல் சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல்.
*6ஆம் அறிவு: தொடுதல் சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல் மற்றும் சிந்திப்பது.

News November 15, 2024

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை 1 மாதம் நிறுத்தம்

image

நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை, அடுத்த ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக INDSRI FERRY SERVICES PVT LTD வெளியிட்டுள்ள அறிவிப்பில், வானிலை காரணமாக நவ.19 – டிச.18 வரை, பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாகை – காங்கேசன்துறை இடையே நவ.15-18ஆம் தேதி வரை, கப்பல் சேவை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

புதினை விமர்சித்த ரஷ்ய செஃப் மர்ம மரணம்

image

உக்ரைனுக்கு எதிரான போரை விமர்சித்த ரஷ்ய சமையல் கலைஞர், மர்ம முறையில் உயிரிழந்தார். அலெக்ஸி ஜிமின் என்பவர் அதிபர் புதினை விமர்சித்ததுடன், இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்து வேலைபார்த்து வந்தார். மேலும், உக்ரைனுக்கு நன்கொடையும் வழங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், செர்பியாவில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என செர்பிய போலீஸ் கூறியுள்ளது.

News November 15, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறல் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: இனியவைகூறல்
▶குறள் எண்: 99
▶குறள்:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
▶விளக்க உரை: இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர், அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

News November 15, 2024

இதெல்லாம் திமுக அரசின் கடமை: OPS

image

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது திமுக அரசின் கடமை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கடந்த 3.5 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், எதற்கும் திமுக அரசு செவி சாய்க்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தில், CM ஸ்டாலின் உடனே தலையிட்டு தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளார்.

News November 15, 2024

4ஆவது நாளாக கனமழை

image

சென்னை மாநகர் மற்றும் புறநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து 4ஆவது நாளாக இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 முதல் 15 நிமிடங்கள் மழை சடசடவென பெய்கிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பகலிரவாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. நீங்க இருக்கிற ஊருல மழை பெய்யுதா? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 15, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவ.15 (ஐப்பசி 29) ▶வெள்ளி ▶நல்ல நேரம்: காலை 12:15-01:15, மாலை 04:45-05:45 ▶கெளரி நல்ல நேரம்: காலை 01:45-02:45, மாலை 06:30-07:30 ▶ராகு காலம்: 10:30 AM-12:00 PM ▶எமகண்டம்: 03:00 – 04:30 PM ▶குளிகை: 07:30-09:00 AM ▶திதி: பெளர்ணமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: 10:45 PM வரை பரணி பின்பு கிருத்திகை ▶சந்திராஷ்டமம்: 10:45 PM வரை அஸ்தம் பின்பு சித்திரை.

News November 15, 2024

“மருத்துவமனை பாதுகாப்பு படை” K.B. கோரிக்கை

image

“மருத்துவமனை பாதுகாப்பு படை” என்ற தனி அமைப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கிண்டி Govt. ஹாஸ்பிட்டல் டாக்டர் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், தற்காலிகமாக போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்காமல், நிரந்த தீர்வுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

News November 15, 2024

பிக் பாஸ் பாலாஜி நடித்துள்ள ‘FIRE’ படத்தின் டீசர்

image

பிக் பாஸ் பாலாஜி நடித்துள்ள ‘FIRE’ படத்தின் டீசரை, நடிகர் விஜய் சேதுபதி தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் சதீஷ் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரச்சிதா, சாக்‌ஷி அகர்வால், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இன்றைய உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்த கதைக்களத்தில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வக்கிர குணமுடையவனாக பாலாஜி நடித்துள்ளார்.

News November 15, 2024

நவம்பர் 15: வரலாற்றில் இன்று

image

1791 – முதலாவது அமெரிக்க கத்தோலிக்க கல்லூரி ஜார்ஜ்டவுன் யுனிவர்சிட்டி திறப்பு.
1948 – இலங்கையில் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
1988 – இஸ்ரேலுடனான பிணக்கால் பாலஸ்தீனம் தன்னை தனி நாடாக அறிவித்தது.
2000 – ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
2012 – ஜீ ஜின் பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானார்.
2018 – கஜா புயல் தமிழக டெல்டா பகுதிகளை புரட்டிப் போட்டது.

error: Content is protected !!